Total Pageviews

Friday, July 20, 2012

எது ஆதி நால் வகை வேதங்கள் ??

 இன்று கிடைக்கும் ரிக்,யஜூர்,சாம &அதர்வன வேதங்கள் கிரிஸ்ணருக்கு முன் இருந்த நான்கு வேதங்கள் அல்ல ! கிரிஸ்ணர் காலம் வரை ராஜகுருக்களாக பிராமணர்கள் இல்லை!தன்னை உணர்ந்து கடவுளை நெருங்கிய ரிஸிகள். முனிவர்கள், இல்லறத்துடன் கூடிய தவயோகிகளாய் வர்ணசாலை அமைத்து குருகுல கல்வியும் ;வாழ்வு நெறி முறையும் திராவிட சமுதாயத்திற்கு வழிகாட்டினர் ! நாண்கு வேதங்களை உருவாக்கியவர்கள் திராவிடர்களே ! வேதத்தை தொகுத்த வேதவியாசர் வரை ;அகஸ்த்தியர் ,விசுவாமித்திரர் வசிச்ட்டர் &வால்மீகி திராவிடர்களே!! ஆனால் ஜலப்பிரலயம் வந்து பேரழிவு உண்டான பிறகு இஸ்ரேலிலிருந்து பூசை மட்டுமே குலத்தொழிலாக கொண்டிருந்த லேவிகூட்டத்தார் இந்தியா வந்தனர்! அவர்களே இன்றைய பிராமணர்கள்!! அவர்கள் தங்கள் கொள்கைக்கு பதிலாக இந்தியாவிலிருந்த வேதத்தை உள்வாங்கி ஒழுங்கு படுத்தி அதை ஓதி பூசையை நடத்தி வைக்கும் அந்தணர்களாக தங்களை அரசர்களின் துனையுடன் மாற்றி கொண்டனர் !அப்பொது முதல் வேதம் அவர்கள் கையில் போயிற்று ! மூல வேதங்களை முழுமையாக உள்வாங்காமல் பிழைப்புக்காக தங்களை குத்தகைதாரர்களாய் மாற்றி கொண்ட பிராமணர்களின் கையில் வேதங்கள் முடங்கிய போது பலவகையில் கலப்படமடைந்து இன்றைக்கு கிடைக்கும் நாண்கு வேதங்களாக உள்ளன! அடிப்படைகளே மாற்றம் அடைந்த வேதங்கள் இவை ! இவற்றை அப்படியே ஏற்றுகொள்ளாமல் இறைஉணர்வு பெற்றவர்களால் மட்டுமே சீரமைக்க முடியும்!!
திராவிடம் என்ற சொல்லே ஆதியில் இல்லாத ஒன்று !ஆரியம் என்ற சொல்லே முதலில் புழக்கத்தில் வந்தது, பிற்பாடுதான் திராவிடம் என்ற பெயரை அவர்கள் வைத்தனர் ! அதனால் திராவிடம் என்பது கற்பனை என்பதாக சிலர் வாதிடுகின்றனர் !ஆரியம் என்ற சொல் புழங்கும் முன்பே முந்தய இந்திய சமூகம் இருந்திருக்கிறது  !கிரிஸ்ணர் காலம் வரை பிராமணர்கள் ஆண்மீக ஆளுமைக்கு வரவில்லை !பிராமணர்கள் என்ற ஒரு ஜாதியே உருவாகத காலகட்டம் ! அதனை பின்னாளில் திராவிடம் என அடையாளப்படுத்திவிட்டதால் திராவிட சமூகம் என குறிப்பது எப்படி தவறு ?

அகத்தியர் ,வால்மீகி, ஆகியோர் பிராமணர்கள் அல்ல !ஆனால் தமிழ் சங்க உறுப்பிணர்கள் என்பதாக குறிப்புகள் கிடைத்துள்ளன ! விசுவாமித்திரர் ,வசிஸ்ட்டர் வியாசர் நிச்சயமாக பிராமணர்கள் இல்லை ! வியாசர் செவிவழியாக இருந்த பல வேதங்களை தொகுத்து எழுதியதால் அவரின் பெயரே வேதவியாசர் என்பது ! அவர் எழுத்தாக்கம் செய்த மஹாபாரதத்தில் கீதை வருகிறது !அதில் நாண்கு வேதங்கள் இருப்பதாக உள்ளது !அது எந்த வேதம் ? அது இன்றைக்கு பிராமணர்கள் தொகுத்த நாண்கு வேதங்களல்ல !அவை ஜலப்பிரளயத்தில் அழிந்து விட்டன! பிற்பாடு இந்தியாவுக்கு வந்த பிராமணர்கள் செவிவழியாய் இருந்த வேதங்களை உள்வாங்கி இந்தியருக்காக தங்களின் கலப்புகளையும் திரித்து எழுதியவை இன்றைக்கு இருக்கும் வேதங்கள் !


இவை ஏற்கணவே இருந்தவற்றின் நிழலே தவிற நிஜம் அல்ல! அந்த ஆதிவேதங்களை கடவுளை நெருங்கிய ஒருவரால் மட்டுமே வெளிக்கொணர முடியும் ! அதற்கு ஏற்ற நபர் வரவேண்டும் என்பதே எனது பிரார்த்தனை !கண்ணால் காணாததை உணர்வதும் அடுத்த நிகழ்வுக்காக ஆக்கபூர்வமாக பிரார்திப்பதும் அது நடக்கும் போது சரியான பாதையில் உழைத்தவர்களை பற்றி உலகிற்கு வெளிப்படும் !

ஆதி மொழி ``தேவநகரி`` ! கடவுளும் மனிதனும் பேசிய மொழி ! அதில் ஒலி உச்சரிப்புகளே அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தன ! ஆதி மனிதன் லெமூரியாக்கண்டத்திலிருந்து
இமயமலை வரை பரவியபோது மொழி கொஞ்சம்கொஞ்சம் மறுவியது !இன்று தமிழ்நாட்டிலேயே தமிழ் மருவுவது போல ! செண்ணைத்தமிழ் ,கொங்குதமிழ் .மதுரைத்தமிழ் ,திருநெல்வேலித்தமிழ் என்று மறுவு வந்துகொண்டு இருப்பது போல ! அப்படி மாற்றம் அனேகம் வந்ததை பொதுவாக ``பிறகிருதங்கள்`` என்று அழைத்தார்கள் ! அப்படி இந்தியாவில் பல கிருதங்கள் ஆதியில் வந்தன !இன்றைக்கு இருக்கும் தமிழும் ஆரம்பத்தில் இல்லை !கல்வெட்டுகளில் உள்ள மூல தமிழை ``பிராத்மிக் `` எழுத்து என்கிறார்கள் ! பிராத்மிக் என்றால் தேவ நகரியிலிருந்து மாறிய எழுத்து என்பதே பொருள் ! இப்படி பல கிருதங்கள் வழக்கில் இருந்த போது அவற்றை சமப்படுத்தி ஒரு பொதுவான ஒரு கிரதம் ஒன்று கொண்டு வரவேண்டும் என வடஇந்தியாவில் சிலர் எடுத்த முயற்சியே ``சம கிரதம்``= ``சமஸ்கிரதம்`` என்றாயிற்று ! இந்த சமஸ்கிரதம் தேவனகரி போல ஒலிஉச்சரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தனர் ! ஆண்மவியல் சம்பத்தப்பட்ட ஞானியரின் உபதேசங்களெல்லாம் --ஆதி வேதங்களெல்லாம் இம்மொழியில் இருந்தது !கிரிஸ்ணர் சமஸ்கிரதத்திலேயே கீதையை வழங்கினார் ! வேதவியாசர் சமஸ்கிரதத்திலேயே வேதங்களை தொகுத்தார் !அப்போது பிராமணர்கள் இந்தியாவிற்கு வராத காலம் !சமஸ்கிரதம் திராவிட மொழியாகும் ! தென்னிந்தியாவில் தமிழ் மூல மொழியானது போல வட இந்தியாவில் சமஸ்கிரதமே மூல மொழியாகி அதிலிருந்தே ஹிந்தி மராட்டி ஒரியா வங்காளி போன்ற மொழிகள் தோன்றின ! எனவே திராவிட மொழிகளில் தமிழும் சமஸ்கிரதமும் மூல மொழிகளாகும் !

பிற்பாடு இந்தியா வந்த பிராமணர்கள் இந்திய வேதங்கள் அனைத்தும் செவிவழியாக ``சமஸ்கிரதத்தில் இருப்பதால் ஆண்மீக தலமையை கைப்பற்ற சமஸ்கிரதத்தை கற்றுகொண்டனர் ! இந்தியாவிலிருந்த ஆதிவேதங்களை தழுவி தொகுத்து கலப்படம் செய்த ஒன்றை நால் வேதங்களாக ஆக்கி கொண்டனர் ! பிராமணர்கள் கையிலெடுத்து கொண்டனர் என்பதற்காக திராவிட மொழியான சமஸ்கிரதத்தை ஆரிய மொழியாகவும் --ஹிந்தியை ஆரிய மொழியாகவும் சிலர் கற்பித்து குறுகிய இணவாதத்தை பிரபலபடுத்தி பிழைப்புனடத்தி விட்டனர் ! இன்று கண்ணடியர்கள் , தெலுங்கர்கள் , மலையாளிகள் தமிழை வெறுப்பது போல குறுகிய குழுவாதமே அது !!

No comments:

Post a Comment