Total Pageviews

Friday, July 20, 2012

ஆன்மா

புதிய மனித ஆன்மா என்பது தாய்தந்தயரின் பரம்பரையில் சில பாவ புண்ணிய பதிவுகளின் தொகுப்பில் கடவுளால் உருவாக்க படுகிறது !அது உணர்வுகளின் அல்லது பதிவுகளின் தொகுப்போடு மனித சரீரத்திர்க்கான ஆறு அறிவுடன் கூடிய மனித சரீர அமைப்புள்ள ஒரு சூக்கும சரீரம் !

இந்த ஒவ்வொரு ஆன்மாவும் தனித்தது ! யுக முடிவு வரை அது அழிவற்றதும் கூட ! இந்த ஆன்மாவிற்கென்று ஒவ்வொரு பிறவியிலும் ஒரு ஸ்தூல உடலும் சூக்கும சரீரத்தை போலவே உருவாக்க படுகிறது !இந்த உடலின் புலன்களின் வழியாக புற உலகை உணரவும் ஆழுமை செய்யவும் இந்த ஆண்மா முயலுகிறது !

மனம் என்பது ஆன்மாவின் இதயம் போல !ஓடிக்கொண்டே இருக்கிறது ! ஆன்மாவில் பொதிந்துள்ள எத்தனையோ அனுபவங்கள்  பதிவுகள் ஆழ்கடல் போல அமைதியாக ஆழத்தில் இருந்தால் புற உலகிற்கு ஒத்த ஓயாத அலைகளாக - சிந்தனைகளாக மனமானது வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும் உள்ளே எது உள்ளதோ அதற்கேற்பவே புற உலகை மனமானது உணரவும் விமர்சிக்கவும் செய்யுமே தவிர அதற்குள் இல்லாத ஒன்று அதற்கு புரியாது அறிவு ஞானம் என்பதெல்லாம் இதன் வளர்ச்சியே !!

ன்மா தன்னை உணராமல் இப்போது உடுத்தியுள்ள உடலாகவே நினைத்துக்கொள்கிறது ! புலன்கள் உலகை இச்சித்து அது இழுக்கிற பாதையில் மனமும் அதன் பின்னால் ஆன்மாவும் செல்லுகிற வரையில் அது அண்ணமய கோஷம் !புலன்களின் பின்னால் செல்லாமல் --அல்லது உடல் நானல்ல ---இந்த உடலும் இல்லாமல் இந்த ஆன்மா ஏற்கனவே பல உடல்களில் இருந்திருக்கிறது இந்த உடல் போன பின்பும் இன்னும் புதிய உடலிலும் இருக்கும் என்பதை உணர்ந்தால் விஞ்ஞான மய கோஷத்தில் அது நுழைகிறது !உடலின் பிடியிலிருந்து விடுபட்ட ஆத்துமா ஒரு ஆமை தன் ஓட்டை சுமப்பது போல உடலை தனது ஆழுமைக்கு கொண்டு வந்தால் அந்த ஆத்துமா விடுதலை பெற்ற ஆத்துமா என்பது கீதையின் தெளிவு !


உடலை துறந்த நிலையிலும் அது உணரும் !!தான் பூமியில் பிறக்கும் முன் அது கொண்டிருந்த குணங்கள் பிதுரார்ஜித கர்மா !இந்த குணங்களே அந்த ஆத்துமாவிற்கு பூமியில் புதிய செயல்பாட்டை தருகிறது !இந்த பாவ புண்ணிய பதிவுகளுக்கு ஒத்த பரம்பரை உள்ள தாய் தகப்பனையே அது கர்ப்பமாக தேர்ந்து கொண்டு புதிய பிறவி எடுக்கும் தனது புதிய செயல்பாட்டால் அது சேர்த்துக்கொள்ளும் குணம் சஞ்சித கர்மா !மனிதன் மரிக்கும் போது பிதுரார்ஜித கர்மா +சஞ்சித கர்மா ஆத்துமாவின் மொத்த கர்மாவாக இருக்கும்

மீண்டும் இந்த மொத்த கர்மாவை பிதுரார்ஜிதமாக கொண்டு ஒத்த கர்ப்பத்தில் புதிய பிறவி எடுக்கும்  இப்படியே மனித ஆத்மா படிப்படியே ஞானமடைந்து தான் பரமாத்மாவின் ஒரு பின்னம் என உணரத்தொடங்கும் போது அதற்கு இறை ஞானம் அளவில்லாமல் ஊற்றெடுக்கும் பூமியை கடரும் பக்குவம் அடைந்தால் பூமியை கடந்து பரமாத்மாவுடன் இணையும்
பூமியை கடரும் பக்குவம் இல்லாத ஆத்மாக்கள் ஒன்று  மறு பிறவி எடுக்கும் அல்லது இறுதி நியாயதீர்ப்பு நாளுக்காக பூமியின் பாதாளத்தில் காத்திருக்கும் !!! அவ்வாறு காத்திருப்பது நரகம் என்பதாக சித்தரிக்கப்படுகிறது

புண்ணியம் செய்த ஆத்மாக்கள் முழுமைக்கான பக்குவம் அடையாவிட்டாலும் ; புண்ணியத்திற்கேற்ப மற்ற லோகங்களுக்கு சில நாள் சென்று அங்கு இன்பம் அனுபவிப்பதும் பிறகு மீண்டும் பூமியில் பிவிஎடுப்பதும் உண்டு என கீதை கூறுகிறது

எந்த ஆத்மா தன்னை உணர்ந்து தன்னைப்போலவே பிறரையும் உணர்ந்து தான் எதில் ஒரு பின்னமாக உள்ளோமோ அந்த பரமாத்மாவை உணர்ந்து அதனுடன் ஒன்ற தொடங்குகின்றதோ அந்த ஆத்மா முழு தூய்மை அடைந்து - பிறவிகளில் உண்டான வாசனைகள் - பதிவுகள் அனைத்தையும் கடந்த நிலையில் அழிவற்ற ஒளி சரீரம் அதற்கு அருளப்பட்டால் மரணமில்லா பெரு வாழ்வு பெற்றதாக பரலோகம் - வைகுண்டம் செல்லும்