தனக்குள்ளே
தேடுவது --தன்னை அறிவது என்பது உண்மையில் யோகம் சித்திக்க பெறுவதற்கான
முயற்சி !இதில் கொஞ்சம் முன்னேரினாலேயே ஆத்துமாவின் மீது சரீர ஆதிக்கம்
குறைந்து உயிரின் ஆதிக்கம் கூடும் !அப்போது `தான் ஆத்துமா` என்பது
சித்திக்கும் !
அந்த அளவு தான் உள்ளே தேடுவது என்பது அதன் பிறகு முன்னேற ஜீவஆத்துமா பரம
ஆத்துமாவை நோக்கி பக்தி செலுத்தியே ஆக வேண்டும் !ஆனால் நடப்பது
என்னவென்றால் யோகா வியாபாரிகள் பெருத்துவிட்ட நிலையில் யோகத்தில் கொஞ்சம்
கூட முன்னேறாத நபர்கள் இந்த பால பாடத்தை கூட கடறாமல் ஞான மார்க்கத்தின்
உச்சத்தில் இருப்பதாகவும் கடவுளை உள்ளே தேடிக்கொண்டே இருப்பதாகவும் குருவை
பற்றி பெருமை பேசுகிற சாக்கில் தங்களை பெருமை பேசிக்கொண்டே திரிகிறார்கள்
!சிவவாக்கியர் சொன்ன ``நாட்களும் போயின ``என்ற கதை இதுதான் !!!
ஞான
மார்க்கம் மிக உயர்ந்தது !இருப்பினும் அதில் வெற்றி பெறாதபடி பல மாயைகள்
குறிக்கிடும் !தவறி விட வாய்ப்புகள் அதிகம் !எனவே எளிமையானதும் அநேகர்
வெற்றி பெற்றதுமான பக்தி யோகமே சிறந்தது என கீதை சொல்லுகிறது !ஞான
மார்க்கத்தில் ஒரு படி ஏறினால் ஒரு படி சருகும் !ஏனன்றால் அதில் சாதகன் தன்
சுய முயற்சியையும் குறை அறிவையும் சார்ந்திருக்க வேண்டியுள்ளது !ஆனால்
பக்தி யோகத்தில் அவன் முழு சரணாகதியை நோக்கி நகர்ந்து விடும் போது கடவுளே
பொருப்பெடுத்தாக வேண்டிய நிர்பந்தம் உண்டாகி விடுகிறது !இதில் பெற வேண்டிய
இலக்கு யாரை நோக்கி பக்தி செலுத்துவது என்பது மட்டுமே !நம்மை விட உயர்ந்த
சக்திகள் பல உள்ளன !இதில் கடவுளை மட்டும் வழி படுவது என வைராக்கியம்
காட்டுவோமானால் கடவுள் ஓடோடி வருகிறார் என்பது ராமர் முதல் முகமது
,வள்ளலார் வரை வெளிப்படுத்தியது !ஞான மார்க்கத்தில் விளைந்து கடவுளை
நோக்கிய பக்திக்குள் ---அதாவது ஞானத்தின் உச்சத்தில் சரியை கிரியை யோகம்
ஒன்றாக குவிகிற பக்தி யோகத்திர்க்குள் வருகிற சாதகன் மட்டுமே சரணாகதி
தத்துவத்தை செயல் படுத்துகிற நிறை பக்தன் !"என்னையே
நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்
கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமை யடித்துக்
கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந் தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.
"( திருக்குர்ஆன் 40:60)
No comments:
Post a Comment