Total Pageviews

Friday, July 20, 2012

ஞான வளர்ச்சி !!!

வளர்ச்சி என்ற ஒன்றை அடைந்திருந்தால் நாம் உண்மை என நினைத்துக்கொண்டிருந்த விஷயங்கள் பல தவறு என்பதை பின்னாளில் உணர்ந்த அனுபவம் இருந்திருக்கும் !எல்லாம் தெரிந்த நபராக மனிதன் இருக்கவே வாய்ப்பில்லை !அஞ்ஞானம் என்னும் இருள் சூழ்ந்த மனித அறிவு நாளும்நாளும் அனுபவத்தாலும் கடவுளின் அருளாலும் வெளிச்சம் கூடுகிற அனுபவ முதிர்ச்சி இருந்திருந்தால் இன்றைய கருத்துகள் நாளை நாம் மாற்றிக்கொள்ள கூடும் என்கிற நிதானத்துடன் தடித்த வார்த்தைகள் கிண்டல் கேலிகள் வராது

அனுபவம் என்ற பட்டறையில் தன்னை உரமேற்றியவர்களின் குணாதிசயம் எப்படி இருக்கும் என்பதை சொல்லியுள்ளேன் !அந்த அனுபவ ஞானம் விளைந்தவர்கள் --நித்தமும் வளர்கிற ஜீவனுள்ள அறிவை அடைந்தவர்களுக்கு நிதானம் ,சகிப்புத்தன்மை ,அன்பு பிரவாகமெடுத்து நீடித்த சமாதானம் இருக்கும் ! கீதை 4:38 உயிரோட்டமான--நித்தமும் வளர்கிற அறிவிற்கு ஈடுஇணையானதும் அதைப்போல தூய்மையானதும் இந்த உலகில் ஏதுமில்லை! அது எல்லா யோகங்களின் முற்றிய பலனால் விளைவது!! யார் ஆன்மீக பயிற்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளுகிராறோ அவர் தனக்குள்ளாகவே இந்த அறிவை ஏற்ற காலத்தில் துய்க்க தொட்ங்குவார்!!!

கீதை 4:39 இந்த உயிரோட்டமான அறிவில் லயித்த பக்தன் தனது புலண்களை அடக்குவதில் வெற்றி பெற்று ஞானம் சித்திக்கபெறுகிறான்! ஞானம் சித்திக்க பெற்று உண்ணதமான தெய்வீக சமாதானம் நிறம்பியவனாய் மாறுகிறான்!!! 

அறிவில் வளர்கிறவர்கள் தனது புலன்களை அடக்குவதில் வெற்றி பெற்றால் மட்டுமே ஞானத்தில் வளரமுடியும் அதற்கு தன்னை உணர்கிற பாதையில் பயணித்து நமக்குள் உள்ள பாவபதிவுகள் என்ன என்பதை ஒவ்வொன்றாக கண்டறிய வேண்டும் ! தன்னை உணர்ந்த தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்
பின்னை வினையை பிடித்து பிசைவர்
சென்னியில் வைத்த இறைவன் அருளாலே
-  என்பது திருமூலர்  பாடல் !
நான் ஏற்க்கனவே சொன்னேன் :பாவபதிவுகள் --முன்னை வினையின் முடிச்சாக நமது புலன்களில் பொதிந்துள்ளது !அது அவ்வப்போது ஏற்ற தருணம் நமது புலன்களை தூண்டி நம் அறிவை மேற்கொள்ள முயலும் !அப்போது புலனின் பின் செல்லும் அறிவை உடையவன் அன்ன மய கோசத்தில் உள்ளவன் !ஆனால் அதனுடன் போராடி - தனக்குள்ளாக தன்னுடனேயே யுத்தம் செய்து அதனை வெல்லுவது --முடிச்சை அவிழ்ப்பது பின்னை வினையின் முடிச்சை அவிழ்க்க வழிகொடுக்கும் !இந்த பயிற்சியில் தேங்காமல் இருப்பவனே நாளும் வளர்ந்து ஞானத்தை அடைகிறான் !அப்படி பயிற்சியில் துவந்த யுத்தம் செய்து பலமுறை தோல்வியை சிராய்ப்பை மனிதன் பெற்றிருந்தால் படைத்த ஒரே கடவுளின் துனையை தேடுகிற நிலை வரும் என்பது எனது அனுபவம் !

வாலிப வயதில் ஞான மார்க்க குருமார்களின் பின்னால் அலைந்து கடும் அப்பியாசம் செய்ய முயற்சித்து கொண்டும் தங்களை போல அறிவை பிரித்து மேய்வதாக பெருமை அடைந்து கொண்டுமிருந்தவன் என்பது என் நண்பர்களுக்கு தெரியும் !ஆனால் அவர்கள் அங்கேயே தேங்கி நின்று கொண்டிருக்க சென்னியில் வைத்த இறைவனின் அருளுக்குள் அன்பை ருஷி பார்த்த நிலைக்குள் வந்து சேர்ந்திருக்கிறேன் !ஆன்மீக சாதனை வளர்ச்சியில் மீண்டும் பக்திக்குள் வருவது --இங்கு அனைத்து படிமானங்களை தாண்டிய ஏக இறைவன் ஒருவரிடம் வந்து முடிகிறோம் !

ஆரம்ப பள்ளி பாடமான அஞ்ஞான பக்திக்கும் வெளியே உருவ ,அருவ உருவ பக்திக்கும் அடுத்த வகுப்பாகிய ஞான மார்க்கத்தில் ஆழ்ந்து அடுத்த வகுப்பாகிய அருவ பக்திக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது ! எனக்குள்ளும் பிறருக்குள்ளும் இங்கும் அங்கும் எங்கும் நிறைந்தும் தனித்தும் விளங்குகிற இறைவனிடம் வந்து சேர்வோம் !

வள்ளலார் வாழ்வில் இந்த வளர்ச்சியை காணலாம் !அவர் முதலாம் திருமுறையில் கந்தர்கோட்ட முருகனில் பக்தி பூண்டு பின் ஞானத்திர்க்குள் வளர்ந்து கடைசியில் அருட்பெரும் ஜோதியும் தனிப்பெரும் கருணையும் ஆன அருவ கடவுள் பக்திக்குள் வந்து முடிந்தார் !அவரிடம் ஞானத்திற்கு பஞ்சமா ?ஆனால் ஞானத்தில் முதிர்ந்த பக்தி --இதுவே வந்து சேர வேண்டிய வளர்ச்சி !


ஞான மார்க்கத்திற்கு --எந்த மார்க்க ஆன்மீகத்திற்கும் இறைநம்பிக்கையும் இறை அச்சமும் அடிப்படைகள் !இந்த இரண்டும் இருந்தால்தான் உண்மையான மனித நேயம் முகிழ்க்கும் !இல்லாவிட்டால் தன்னை பிறர் மதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் வரும் சுயநல மனித நேயம் மட்டுமே இருக்கும் !

செயலுக்கு விளைவை தருகிறவராய் இறைவன் உள்ளார் என்பது ஞானமார்க்கத்தின் பாலபாடம் ஒரு மனிதன் செய்த தவறு பாவபதிவாய் ஆன்மாவில் பதியும் பதிலுக்கு பதில் அனுபவிக்கும் வரை அவனது பரம்பரையில் தொடரும் இதுவே பிதுரார்ஜித கர்மா எனப்படுவது இதை நிர்வகிக்கும் இறைவனைக்குறித்த எச்சரிக்கை இறைஅச்சம் எனப்படும் மனிதன் சந்தர்ப்பம் கிடைத்தால் ஆணவமும் அக்கிரமும் கொண்டு பிறருக்கு தீங்கிழைக்க கூடியவன் அது நமக்கு திரும்பிவிடும் என்கிற இறைஅச்சம் சிலருக்கு இல்லை என்பது உலகில் நடக்கும் கொடுமைகளுக்கு காரணம் பாவங்கள் தொடர்வினையாய் கடந்து செல்லுகிறது ஆக இறைஅச்சம் மனிதகுலத்துக்கு தேவையான ஒன்று

இறை நம்பிக்கை ,அச்சம் ,மனிதநேயம் அதாவது இறை அன்பு இல்லாத சுயநல கூட்டங்கள் தங்கள் நாத்திகம் முன்பு பெரியார் காலத்தில் எடுபட்டது போல எடுபடாததால் எங்களுக்குள் உள்ள கடவுளை நம்புகிறோம் என நுனி நாக்கில் பேசிக்கொண்டு ஞான மார்க்க வேடத்தை போட்டுகொண்டு இறை அச்சம் அற்ற தங்கள் நவீன நாத்திகத்தை ஆன்மீக வாதிகள் போல பரப்பி வருகின்றனர் !இந்த மாய்மாலம் மிகவும் ஆபத்தானது !அநேகரை வளரவிடாமல் தடுத்து விடக்கூடியது!சுய பெருமையில் மூழ்க செய்து சீரழித்து விடக்கூடியது !அதனால் தான் இதை சுட்டி காட்டி வருகிறேன் !எனக்கு நன்மை தீமை ;மரியாதை அவமரியாதை என்ற இருமைகளை கடப்பதற்கு பக்குவம் உண்டாகிக்கொண்டிருக்கிறது என்றே கருதுகிறேன் !எனவே கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள இயலாதவனல்ல--எது ஆன்மீக வாதியின் குணம் என்கிற படிப்பினையை பகிர்ந்து கொள்ளவே நாடினேன் !வளர்வதும் ஒருவர்க்கொருவர் பகிர்ந்து கொள்வதும் இடைவிடாது கற்றுக்கொள்ள முயல்வதுமே ஞானத்தின் இயல்பு !தனக்கு தெரிந்ததை அலட்டி கொள்ளும் நோக்கமா அல்லது பகிர்வுகளில் கற்றுக்கொள்ளும் கற்றுகொடுக்கும் நோக்கமா என்பது கடவுளே அறிவார் !தூய நோக்கம் வெற்றி பெறும்!!

No comments:

Post a Comment