Total Pageviews

Tuesday, March 3, 2020

திருவெம்பாவை 2




பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்

நான் இறைவன் மீது பாசம் ; அன்பு ; பக்தி வைத்துள்ளேன் என பரபரப்பாக அடுத்தவர் முன்பு பகட்டு காட்டி விட்டு உலகப்பொருட்களின் மீதும் ; சுக போகங்களின் மீதும் பித்து வைக்கிறவர்களே

சீ சீ ; விளையாட்டு போக்காகும் வாழ்வு இதுவோ ?

15. கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்.

16. இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்கள் தோழரைப்பார்த்து:

17. உங்களுக்காக குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது.

உலக வாழ்க்கை விளையாட்டும் வீணும் வியத்தமுமானது என்ற உள்ளுணர்வோடு கடமைகளை மட்டும் நிறைவேற்றிக்கொண்டு உள்ளார்ந்து இறைவனை நாடுகிற இதயம் ; காலகட்டம் ஒவ்வொரு நபரின் வாழ்விலும் ஒரு பிறவியில் உண்டாகும்

அதுவரை அருவமான இறைவனை வாயிலே சொல்லவும் காதிலே கேள்விப்படவும் மட்டுமே முடியும்

உள்ளார்ந்த உறவோ ; அன்போ உண்டாகாது

ஆனாலும் இறைவனின் அம்ஸத்தோடு ரூபத்தில் வெளிப்பட்ட அதிதேவர்கள் ; நமக்கும் இறைவனுக்கும் இணைப்பு பாலம் போன்றவர்கள்

யோவான் 6:46 தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.

நமது குற்றம் குறைகளினால் நாம் இறைவனின் பரிசுத்தத்திற்கு ஒப்புரவு ஆகாதவர்களாக இருந்தாலும் ; தங்களது சற்குரு ஸ்தானத்தால் நம் கோரிக்கைகளுக்கு இறைவன் செவி சாய்க்க செய்கிறவர்கள்

யோவான் 16:26 அந்த நாளில் நீங்கள் என் நாமத்தினாலே வேண்டிக்கொள்வீர்கள். உங்களுக்காகப் பிதாவை நான் கேட்டுக்கொள்வேனென்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை.

சிவனார் வைரவனாகி பூமியை விட்டு பரமேறிய பின்பு ; ராவணாதி அரக்கர்களின் ஆட்டம் பூமியில் அதிகரித்தது

அப்போது பூமிக்கு வந்த முதல் தேவ தூதரான ஸ்ரீராமர் ; ராம நாமத்தால் வழிபடுங்கள் என்ற செயல்முறையை முதல் முதலில் அறிவித்தார்

ராமர் பெரியவரா ? ராம நாமம் பெரியதா ? என அந்தக்காலத்தில் கோவில் கோவிலாக உபன்யாசம் நடக்கும்

அதன் தாத்பர்யம் என்ன என தெரியாத மானிடர்கள் ; ஆளாளுக்கு ராமரும் அவர்தான் ராம நாமமும் அவர்தான் ; ஆனால் ராமா என்று சொல்லாமல் ராம நாமம் என சொல்லவேண்டும் என அறிவை காட்டிக்கொண்டிருப்பார்கள்

ராமரும் ராம நாமமும் ஒன்று என்றால் எதற்காக ராம நாமம் என்று சொல்ல வேண்டும்

விளக்கம் எதுவென்றால் அதை அதே ராமர் ; இயேசுவாக பூமிக்கு வந்த போது விளக்கமாக சொன்னார்

ராமர் என்றால் அர்த்தம் குமாரன்

இந்த குமாரன் என்பது அரூபமான இறைவன் ரூபமுள்ள அதிதேவர்கள் நால்வரை வெளிப்படுத்தி ; அவர்களுக்கு கீழே 33 கோடி தேவர்களை வைத்து இந்த முழு பிரபஞ்ச இயக்கத்தையும் நிர்வகித்து வருகிறார்களால்லவா ?

இந்த நால்வரே குமாரர்கள்

இந்த நால்வர்கள் யாரென்றால் நாராயணன் ; சிவன் ; ஆதிசேஷன் & ஆதிசக்தி என்பவர்களாம்

யோவான் 3:35 பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

யோவான் 5:20 பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்.


உலகில் ஆங்காங்கு அந்தந்த பகுதி மக்களுக்காக வெளிப்பட்ட வேதங்களை வரட்டுத்தனமான சடங்குகளாக மதங்களாக மாற்றம் செய்துகொண்டு மததுவேசங்களை அசுரர்கள் பரப்பிவிட்ட்னர்

ஒருவரை ஒருவர் மதமாற்றம் செய்யாமல் ஒரு வேத வசனங்களை கொண்டு மற்றொரு வேதத்தை செழுமைப்படுத்திக்கொண்டால் மட்டுமே முழுமையான இறை நிலையை உணரமுடியும்

பரத்திலே குமாரன் எனப்படும் நாராயணன் ; சிவன் ; ஆதிசேஷன் & ஆதிசக்தி என்பவர்களை ஆப்ரகாமிய வேதங்களில் ஆர்க் ஏஞ்சல் காப்ரியேல் ; மிகாயேல் ; உரியேல் ; ராபேல் என்கிறார்கள்

இந்த நால்வரும் அல்லாஹ்வுக்கு அடுத்தவர்கள் ; அல்லாஹ்வின் ரூப வெளிப்பாடுகள் ; அல்லாஹ்வுக்கு இணையானவர்களும் கூட

யோவான் 5:22 அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்

யோவான் 5:23 குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்.

யோவான் 5:26 ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள் செய்திருக்கிறார்.


யோவான் 5:30 நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.

இந்த குமாரன் என்ற ஏற்பாடு ; திரேதா யுகத்தில் ராமர்  லக்ஷ்மணன் ; துவாபர யுகத்தில் கிறிஷ்ணன் அர்ச்சுணர் கலியுகத்தில் இயேசு முகமதுநபி என்ற நர நாராயண ஜோடிகளின் செயல்பாடாகும்

இது கலியுகம் என்பதால் வெவ்வேறு பகுதி மக்களுக்காக பூமிக்கு அவதார தூதர்களாக அனுப்பபட்ட் அதாவது குரானின் படி மலக்கு தூதர்களை அதாவது குமாரர்களை ஒரே ஜோடி என புரிந்துகொள்ள முடியாமல் மதவாதிகளும் ; மததுவேசிகளும் ஒருவரை ஒருவர் காரி துப்பிக்கொண்டு மதம் மாற்றிக்கொண்டு மண்டைகளை உடைத்துக்கொள்ளும் வழிகேட்டில் இறைவன் விட்டுவிட்டார்

ஆனால் வரப்போகிற அல்மஹ்தி என்ற சமரச வேதாந்தி இவைகளை இறைவனின் வல்லமையோடு அத்தாட்சியோடும் நிலைநாட்டுவார்


குரான் 2:98. எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.
2:177. புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதங்களின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல் ஆகும்

2:285. (இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள்.

ஜிப்ரீலுக்கும் (நாராயணனுக்கும்), மீக்காயிலுக்கும் (சிவனுக்கும்) பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.
இந்த உண்மை புரியாமலேயே மதவாதிகள் ஒருவர் மண்டைகளை ஒருவர் உடைத்து வருகிறார்கள்

அதிதேவர்கள் அல்லாஹ்வின் ரூபமும் வெளிப்பாடும் ஆனதால் குமார்கள் என்ற அந்தஸ்து உள்ளவர்கள்

இவர்களை பார்த்து வானவர்களும் பயப்படுவார்கள் என்கிறார் மாணிக்கவாசகர்

விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்

பரலோகம் ஐந்து அடுக்குகளால் ஆனது என்பார்கள்

அதில் உன்னதமான பரத்திற்கு முன்பு சிவலோகம் உள்ளது . சிவனின் குருகுலத்தில் வளர்க்கிறவர்களை வளர்த்து ஆளாக்கி சித்தி தருகிறவர் சிவன்

அதுபோல அந்தந்த லோகத்தில் அவரவர் குரு வழி நாம் சென்று அங்கிருந்து தான் உண்மையான இறைவனை தரிசித்து நாம் சித்தி அடையமுடியும்

யோவான் 14:2 என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.

பரலோகத்தில் அந்தந்த குநாதர்களுக்குரிய லோகத்தை அந்தந்த குவழியில் வந்தவர்கள் அடைவார்கள்

கீதை 12 : 1 அர்ச்சுணன் கேட்டான் : புலன்களுக்கு அப்பாற்பட்ட கண்ணால்
காண இயலாத கடவுளை வழிபடுபவர்கள் ; இதோடு கூட உம்மை சற்குருவாக பின்பற்றி முறையாக கடவுளை வழிபடுபவர்கள் இவர்களில் யார் விரைவில் பக்குவமடைவார்கள் ?

கீதை 12 : 2 அவதூதர் கிரிஸ்ணர் கூறினார் : என் மீது பற்று கொண்டு மனதை எப்போதும் என்னிடம் ஈடுபடுத்தி என் மூலமாக கடவுளை நம்பிக்கையுடன் யார் வழிபடுகிறார்களோ ; அவர்களுக்கு பரலோக வாழ்வுக்கான திவ்யமான விஷயங்கள் என்னால் அளிக்கப்பட்டு பக்குவமடைகிறார்கள்

கீதை 12 : 3 & 4 : ஆனால் தோற்றமில்லாததும் , புலன்களுக்கு அப்பாற்பட்டதும் எங்கும் விரவி நிற்பதும் புரிந்துகொள்வதற்கு அப்பாற்பட்டதும் மேலும் மாற்றமில்லாததும் அசைவுகள் அற்றதும் பூரணமானதும் ஆன கடவுளின் அருவத்தன்மையில் புலன்களை கட்டுப்படுத்தி நிலைப்படுத்துகிற யோகிகள் மன சமநிலை அடைய தனக்குள் போராடி எங்கும் எதிலும் சமநோக்கு உண்டாகவும் சகல உயிர்களுக்கும் நன்மை பயக்கும் கர்மங்களை செய்யவும் பெரும் பிரயத்தனம் செய்தும் இயலாமல் பலகீனத்தை உணர்ந்து தாழ்மையடைந்து இறுதியில் என் குருத்துவத்தை சரணடைவார்கள் !

கீதை 12 : 5 ஏனெனில் உடலை அடக்கும் அப்பியாசத்தால் கடவுளின் அரூபத்தில் மனதை நிலைபடுத்துவது , பக்குவம் எய்துவது – முன்னேற்றம் காண்பது மிகமிக கடினம் ! உடலை உடையோருக்கு அவ்வழி சிரமம் !

கீதை 12 : 6 & 7 ஆனால் எவர் என்னை ஏற்றுக்கொண்டு ( குருபக்தி ) எல்லா செயல்களையும் கடவுளுக்காக அர்ப்பணித்து எனது குருத்துவத்தில் பிறழாது பக்தி தொண்டாற்றுகிறார்களோ ; என்னை பின்பற்றுகிறார்களோ அவர்களை பிறப்பு இறப்பு என்னும் சாகரத்திலும் ஜடஉலகின் பந்தத்தால் நீளும் பிறவிகளிலும் உழலாமல் விரைவில் விடுவிகிறவன் ஆகிறேன் !!

கீதை 12 : 8 என் மீது மனதை பற்றவைத்து என் உபதேசங்களுக்கு உன் புத்தியை கீழ்ப்படுத்துவாயானால் என்னில் நிச்சயமாக நீ வாழ்வாய் என்பதில் சந்தேகமில்லை !!

கீதை 12 : 9 செல்வத்தை சம்பாதிக்கும் ஆற்றலுள்ளோனே ! உன் மனதை என்னிலே சமப்படுத்து ! முடியாவிட்டாலும் பக்தி யோகத்தின் நெறிகளை விடாது பின்பற்றுவாயாக ! அது என்னிலே நீ நிலைபெறுவதற்கான பயிற்சியை உண்டாக்கி என்னைப்போலாகும் ஆசையை பூர்த்தி செய்யும் !!

கீதை 12 : 10 பக்தி யோகத்தின் நெறிகளை பயிற்சி செய்ய இயலாவிடின் எனது குருத்துவத்தின் ஏவுதல்களை செயலாக்க முயல்வாயாக ! அவ்வாறு உனது கர்மங்கள் கடவுளுக்கு அர்ப்பணமாக நீ செய்வதால் விரைவில் பக்குவ நிலையை வந்தடைவாய் !

கீதை 12 : 11 இருப்பினும் இதைக்கூட செய்ய உன்னால் முடியாவிட்டாலும் ; குருவாகிய என்னிடம் அடைக்கலம் பூண்டு பக்தித்தொண்டாக எல்லா செயல்களின் பலன்களையும் தியாகம் செய்து விடுவாயாக ! இருக்கிறோம் என்ற இருப்பைத்தவிர உனது எல்லா செயல்களின் விளைவுகளையும்
கடவுளுக்கே அர்ப்பணித்து விடுவதால் ஆத்மாவிலே நிலை பெற முடியும் !

கீதை 12 : 12 நிச்சயமாக ஞானமே சிறந்தது ! ஞானத்துடன் தியானத்தையும் அப்பியாசிப்பாயாக ! முக்கியமாக உனது கர்மங்களின் விளைவுகளை கடவுளுக்கே அர்ப்பணித்து விடுவாயாக ! அர்ப்பணிப்பே மன சாந்தியை அருளும் !

கீதை 12 : 13 எல்லா உயிர்களிடத்தும் அன்புடனும் ; போட்டி பொறாமையற்ற நட்புடனும் ; நான் என்ற அலட்டல் அற்றும் ; முதிர்ந்த மனதால் சகலரின் தீயகுணங்களையும் சகித்தும் ; இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவித்தும் :

கீதை 12 : 14 எப்போதும் திருப்தியுடன் தன்னில் தானே லயித்திருப்பவனே ஆத்மா ஞானியாவான் ! மனதாலும் புத்தியாலும் குருவாகிய என்னையே பற்றியவனாய் கடவுளுக்கு பக்தி தொண்டில் யாரொருவன் உறுதியாய் நிலைத்துள்ளானோ அவனே எனக்கு பிரியமானவன் !!

கீதை 12 : 15 உலக மக்கள் யாருக்கும் நெருக்கடி உண்டாக்காமலும் ; உலக மக்கள் யாராலும் யாரிடமிருந்தும் சஞ்சலம் அடையாமலும் ; இன்பம் துன்பம் பயம் மற்றும் ஏக்கம் கடந்தும் சம நிலையோடு யாரொருவன் உள்ளானோ அவனே எனக்கு பிரியமானவன் !!

கீதை 12 : 16 எல்லா செயல்பாடுகளிலும் கவலையிலிருந்து விடுபட்டும் ; துன்பங்கள் அனைத்தையும் உதாசீனப்படுத்தியும் ; உளத்துய்மையோடும் ; முரண்பாடுகள் அனைத்திலும் நடுநிலைமை – சமரசத்தில் நிபுணத்துவமும் உள்ளவன் எவனோ அத்தகு பக்தனே எனக்கு மிகவும் பிரியமானவன் !!

கீதை 12 : 17 அவன் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிப்பதில்லை ; துக்கத்தில் ஆழ்ந்து முடங்கிப்போவதில்லை ! கடந்ததை நினைத்து புலம்புவதுமில்லை ;
வரவேண்டியதை எதிர்பார்த்து தவிப்பதுமில்லை ! மங்களம் அமங்களம் இரண்டையும் கடந்தவன் எவனோ அத்தகு பக்தனே எனக்கு மிகவும் பிரியமானவன் !!

கீதை 12 : 18 & 19 நண்பர்களையும் எதிரிகளையும் சமமாக பாவிப்பவனும் ; புகழ்ச்சி இகழ்ச்சி ; மான அவமானம் ; இன்பம் துன்பம் ; தீ மற்றும் பணி ஆகிய இருமைகளை கடந்து சமமாக பாவிப்பவனும் ; களங்கங்களை கொண்டுவரும் சகல அசுரமாயைகளிளிருந்தும் விடுபடத்தெரிந்தும் ; இருப்பதில் திருப்தியுற்றும் ; இருப்பிடத்திற்கும் கூட கவலையற்றும் ; மெய்ஞானத்தில் நிலைத்து பக்தி தொண்டில் யாரொருவன் உறுதியாய் நிலைத்துள்ளானோ அவனே எனக்கு பிரியமானவன் !!

கீதை 12 : 20 பக்தி யோகம் என்ற இந்த அமிர்தத்தை நம்பிக்கையோடு ஏற்று உபதேசிக்கப்பட்டபடி பரமாத்மாவான என்னை சற்குருவாக ஏற்று முழுமையாக பின்பற்றுபவர்கள் எவர்களோ அவர்களே எனக்கு மிக மிக பிரியமானவர்கள் !!

ஏல் ஓர் என்பாயாக

இறைவன் ஒருவனே என்பாயாக






Sunday, February 23, 2020

இந்திய கிறிஸ்தவர்களே ; இஸ்லாமியர்களே





ராமர் என்ற கிறிஸ்ணரே இயேசுவாக அவதாரமே வராத யூதர் அரபியர் வெள்ளைக்காரர்களை நல்வழிப்படுத்த வந்தார் என்கிற உண்மையை உணர்க

சொந்த பாட்டணையும் பாட்டியையும் உடப்பிலே போட்டுவிட்டு யூதனின் ஆப்ரகாம் ஈசாக்கு யாக்கோபு இஸ்மாயிலை பாட்டன் பாட்டி என சொல்கிற பாவத்திலிருந்து வெளியேறுக

அல்லாஹ் உங்கள் கண்ணை திறக்கட்டும்

இயேசு உங்கள் கண்ணை திறக்கட்டும்

போலி யூதனாக வாழ்வது போதும்

போலி அரபியனாக வாழ்வது போதும்

ஆப்ரகாமுக்கு முன்னமே நான் இருக்கிறேன் என இயேசு சொன்னாரே அப்போது கல்லெடுத்தவர்களின் பிள்ளையாய் இராதேயும்
யோவான் 8:58 அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

ஆப்ரகாமுக்கு முன்பே இயேசுவின் முந்திய அவதாரங்களால் பண்பட்ட இந்துசமயங்கள் இறைவனிடமிருந்து வந்தவை

பாபேலின் பிரிவினை ஆவியால் மதக்குழப்பம் செய்யாதீர்கள்

நாராயணனை வழிபட்டாலே இயேசுவை வழிபட்ட புண்ணியம் உண்டாகும்

இறைவா என வழிபட்டாலே அல்லாஹ்வை வழிபட்ட புண்ணியம் உண்டாகும்

குரானில் இத்ரீஸ் நபி எனப்படுபவர் நூவ் நபியின் தாத்தா

இந்தியாவில் வந்த அகத்தியரின் தாத்தா அத்ரி மகரிசி எனப்படுபவரே இவர்

அத்ரி நபி பரத்துக்கு அழைக்கப்பட்டு சமுதாய சட்டங்களை பூமிக்கு கொண்டு வந்தார்

அத்ரியை சட்டநாதர் என இந்துகோவில்களில் வைத்துள்ளனர்

இவர் பரத்திற்கு சென்று வந்த்தால் அத்ரி பரமேஸ்வரன் எனப்படுகிறார்

நூவ் ம் அகத்தியரும் ஒருவர்

இவர். கும்பம் செய்து ஜலப்பிரளயத்தில் உயிர்களை காத்த நிகழ்வே கும்பகோணத்தில் கும்பமேளாவாக கொண்டாடப்படுகிறது

அகத்தியர் உருவாக்கிய வழிபாடு முருகன்

மாயோன் சேயோன் வழிபாடு

மாயவன் அரூவமான அல்லாஹ்

சேயோன் அவனது பிரதிநிதியாக பூமிக்கு இறைதூதர்கள் வருவார்கள் என்பதாகும்

3000 நபிமார்கள் பூமிக்கு வந்துள்ளார்களே அதில் அரபு தேசத்தை சுற்றிலும் வந்த சிலரின் வரலாறு மட்டுமே குரானில் சொல்லப்பட்டு மிகுதியானவர்கள் இந்தியாவில் வந்தவர்கள் என்பதால் சொன்னாலும் அரபியர்க்கு புரியாது என சொல்லாமல் விட்டுவிட்டதாக குரானில் உள்ளது

முருகன் என்றால் மலக்கு நபி என்று அர்த்தம்

மலக்கு ( தேவர்) ஒருவர் தூதுப்பணிக்காக பூமியில் அவதரித்து வந்தால் முருக்கி வருவதால் அதாவது தேவர் என்ற நிலையிலிருத்து மனிதனாக மாறி வருவதால் முருகன்

பூமியில் வந்த முருகர்களில் கடைசி ஜோடி யூதர்களையும் அரபியர்களையும் நல்வழிப்படுத்த வந்த ஈசா நபியும் முகமது நபியும் ஆகும்

அதற்கு முன்பே இந்தியாவில் இந்த ஜோடி (நர நாராயண ஜோடி ) ராமர் லஷ்மணராகவும் ; கிறிஸ்ணர் அர்ச்சுணராகவும் வந்துள்ளனர்

ராமரும் கிறிஸ்ணரும் இயேசுவும் ஒருவரே

லஷ்மணரும் அர்ச்சுணரும் முகமதுவும் ஒருவரே

குரான் 10:19. மனிதர்கள் யாவரும் (ஆதியில்) ஒரே இனத்தவராகவே அன்றி வேறில்லை; பின்னர் அவர்கள் மாறுபட்டுக் கொண்டனர்..

30:30. ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.

உலகின் ஆதிமனிதர்களான தமிழர்களும் இந்தியர்களும் கடைபிடிக்கும் இயற்கை மார்க்கமே ஆதி இஸ்லாம்

அதில் கலந்துவிட்ட சீர்கேடுகளை கலைய வேண்டுமே தவிர இந்துமத்த்தை அழிக்க முடியாது

இறைவனிடமிருந்து வந்த ஆதி மார்க்கமாம் இந்து மதத்தை அழிப்போம் என்ற எண்ணத்தை கைவிடுங்கள்

2:285. (இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள்

மலக்குகளையும் அவனுடைய வேதங்களையும் நம்பவேண்டும்

மலக்குகள் என்றால் தேவர்கள் 33 கோடி பேர் உள்ளனர்

இதில் ஆதம் என்ற சிவனை என்னை வணங்குவது போல வணங்க வேண்டும் என அல்லாஹ் கட்டளையிட்ட போது சிவனை வணங்க மறுத்த 6 கோடி பேர்கள் சைத்தானாக மாறிவிட்டனர்

அல்லாவுக்கு உடன்பட்ட மலக்குகளில் ஒரு பிரிவு சைத்தானாக மாறியதே அவர்கள் ஆதம் என்ற சிவனை வணங்கமாட்டோம் என அடம் பிடிப்பதாலேயாகும்

இணை வைப்பு கூடாது என சொல்லும் குரானே ஆதம் என்ற சிவனுக்கு சுஜூது செய்க என இணைவைப்பு கட்டளை இட்டிருக்கிறது

7:11. நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், “ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)” என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.


அல்லாவைத்தவிர யாரையும் வணங்காதே என்ற விளக்கம் மனிதர்களாக உருவாக்கிக்கொண்ட இலாஹா க்களை குறிக்கிறதே தவிர மலக்குகளை அல்ல

அல்லாஹ் வையும் அவனது மலக்குகளையும் வழிபடுவதே முழுமையானது

அல்லாஹ் வை மட்டுமே வழிபட்டு ஆதமையும் வழிபடாத தவறால் இசுலாமியர் சைத்தானுக்கு இடம் கொடுத்தவர்களாகவே இருக்கிறீர்கள்

மலக்குகளை மட்டுமே வழிபட்டு அல்லாஹ் வை வழிபடாத்தால் இந்துமதமும் சீர்கேட்டில் உள்ளது

மதம் மாற்றுவதால் யாதொரு நற்பலனுமில்லை

இரண்டும் ஒன்றினால் ஒன்றை சீர்திருத்திக்கொள்வதே வரப்போகிற அல்மஹ்தியின் சமாதான பாதை

உலகை மூழ்கடிக்கும. சமர வேதம் என்ற ஆன்மீக பேரலை


அல்லாஹ் என்ற அரபுசொல் இறைவன் கடவுள் என மக்களால் குறிக்கப்படும் பொதுச்சொல்லாகும்

உலகம் முழுவதிலும் உள்ள பல மதத்து மக்களாலும் பொதுவார்த்தையாக அழைக்கப்படுபவரே வணங்கப்படுபவரே அல்லாஹ்

இசுலாத்துக்கென்று ஒரு தனி கடவுள் இருப்பதாகவும் அவரை முஸ்லீம்கள் மட்டுமே வணங்குவதாகவும் நாடுபிடிக்க முற்பட்ட கலீபாக்கள் அரசர்கள் இஸ்லாமியரை ஏமாற்றிவிட்டனர்

சகலராலும் தங்கள் இதயத்தில் வணங்கப்படும் இறைவனே அல்லாஹ்

லா இலாஹா இல் அல்லாஹ் என்பதை அல்லாவைத்தவிர வேறு தெய்வம் இல்லை என்பதாக மேலோட்டமாக அரபியர்கள் கற்பித்து விட்டார்கள்

இலஹா என்றால் அரபியில் வழிபடப்படும் தேவர்கள் என்று அர்த்தம்

இல் அல்லாஹு என்பதை அல்லா இல்லாத லா இலாஹா தேவர்கள் யாருமில்லை என்பதே சரியான அர்த்தம்

பரத்திலே அரூவமான இறைவனுக்கு அடுத்த நிலையில் உருவமான தேவர்கள் இருக்கிறார்

இறைவன் எதையாவது செய்ய வேண்டுமானால் பேசுகிறார் ; அந்த காரியத்தை அதற்குரிய மலக்குகள் செய்கிறார்கள்

மலக்குகள் மூலமாக அல்லாமல் அல்லா அவராக எந்த காரியத்தையும் செய்வதில்லை

முகமதுநபியுடன் அல்லா நேரடியாக வசனம் இறக்கினாரா அல்லாவின் சார்பாக காப்ரீயேல் தானே இறக்கினார்

இங்கு காப்ரீயேல் குரானை இறக்கவில்லை ; அல்லா காப்ரீயேல் மூலமாக இறக்கினார்

அல்லாஹ் இல்லாத தேவர்கள் யாருமில்லை என்பதே பாங்கின் சரியான அர்த்தம்

அதை அல்லாவைத்தவிர இறைவன் யாருமில்லை என அரபியர்கள் இஸ்லாமியர்களை ஏமாற்றி விட்டார்கள்

உலகில் உள்ள சகல மக்களலும் மதங்களாலும் வணங்கப்படும் தேவர்கள் அனைவரும் அல்லாஹ் வால் படைக்கப்பட்டு அல்லாஹ் வால் பயன்படுத்தப்படுகிறவர்களே

அல்லாஹ் இல்லாத தேவர்கள் யாருமில்லை

33 கோடி தேவர்களில் 6 கோடி பேர்களே அசுரர்களாக மாறியவர்கள்

உலக மக்களால் வணங்கப்படும் தேவர்களில் யார் தேவர் யார் சைத்தான் என்றால் அல்லாஹ்வோடு ஆதமையும் வணங்கினால் தேவர்கள்

ஆதமை வணங்காதவர்கள் சைத்தான்கள் என குரான் 2 : 285 சொல்கிறது

யார் மலக்கு யார் சைத்தான் என கண்டுபிடிக்குமளவு அரபியர்கள் எந்த ஆன்மீக அணுபவமும் இல்லாதவர்கள்

இசுமாயிலுக்கு பிறகு முகமதுநபி வரை ஒரு இறைதூதர் கூட வராமல் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த கூட்டம்

குரானில் சொல்லப்படும் நபிகள் அனைவரும் யூதர்கள்; ஒருவர் கூட அரபியர் இல்லை

ஆன்மீக பின்னணி எதுவும் இல்லாமல் அடித்து உதைத்து இசுலாத்திற்கு மாற்றப்பட்ட அரபியர்கள் குரானுக்கு தப்பு தப்பாக விளக்கம் சொல்லிவிட்டார்கள்

சிவனே ஆதம் என கண்டுபிடிக்காவிட்டாலும் பரவாயில்லை ; அல்லாஹ் வுடன் ஆதமையும் வணங்காவிட்டால் சைத்தானுக்கு பிரியமானவர்களாக இருப்போம் என்பதை இன்றளவும் உணராதவர்கள் அரபியர்கள்

முகமது ரசூல் அல்லாஹு என்பதில் அல்லாஹ்வை முகமதுநபியை குருவாக வைத்து வழிபடுகிறோம் என்பதால் இதை ஒரு மார்க்கம் அதாவது பாதை என்றுதானே முகமதுநபியே சொன்னார்

உலக மக்களால் வழிபடப்படும் அல்லாஹ் வை முகமதுநபியை குருவாக வைத்துக்கொண்டு வழிபடும் ஒரு மார்க்கமே இஸ்லாம்

அதை மதமாக மாற்றி தங்கள் நாடுபிடி ஆசையை தீர்த்தவர்கள் காலிபாக்கள்

முகமதுநபி இஸ்மாயிலின் பிள்ளைகளாக 100 மேற்பட்ட குலமாக சிதறிக்கிடந்த அரபியர்கள் மீதுமட்டுமே ஜீகாத் செய்தார் ; அடித்து உதைத்து இஸ்லாத்துக்கு மாற்றினார்

அரபியர்கள் யூதர்கள் இல்லாத மற்ற இனத்துமக்களை ஒருவரை கூட முகமதுநபி மதமாற்றம் செய்யவில்லை

இறைவனை வணங்க இஸ்லாம் ஒரு மார்க்கம் என்றால் வேறு மார்க்கங்களும் பூமியில் இருக்கிறது என்றே அர்த்தம்

தேவர்களை குருவாக வைத்து வழிபடும் மார்க்கம் ஒன்றிருக்குமானால் அவர்களை காபீர்கள் என கொன்றதும் கொத்தடிமைகளாக வைத்ததும் ஜிசியா வரிவாங்கியதும் கொடூரமாக நடந்ததும் பாவமாகாதா

முகமதுநபியிடம் இறைவன் பேசினால் மட்டுமே செய்தார்

இறைவன் தங்களிடம் பேசாமல் ; குரானை வாசித்துவிட்டு அதற்கு தங்கள் அறியாமையால் தப்புதப்பாக விளக்கம் கற்பித்து பூமியில் அரபியர்கள் செய்த அட்டூழியங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் பொறுப்பு ஏற்கமாட்டார்

மதினாவிலிருந்து படைநடத்தி மக்காவை வெற்றி கொண்ட முகமதுநபி கபாவில் இருந்த சிலைகள் அனைத்தையும் வெளியேற்றுகிறார் ; ஆனால் அங்கிருந்த அஸ்த்ரக் கல்லை மட்டும் வெளியேற்றவில்லை

அந்த அஸ்த்ரக் கல் ஆதம் என்ற சிவனுக்கு பரத்திலிருந்து வழிபாட்டு மூர்த்தமாக கொடுக்கப்பட்டது

பரத்திலிருந்து பூமிக்கு மனிதர்களாக மாறி வந்த சிவனும் அவரில் பாதியாளான பார்வதியும் முதலில் வந்த இடம் சிவனொளிபாத மலை என இலங்கையில் உள்ளது

சிவனும் பாதியாளுமே ஆதம் அவ்வாவாகும்

அங்கிருந்து ராமேஸ்வரம் மற்றும் லெமூரியா கண்டம் முழுவதும் மனுகுலமாக தமிழர்களை உற்பத்தி செய்தனர்

அப்போது நீண்ட நாள் உத்திரகோச மங்கையில் வாழ்ந்தனர்

அடுத்து வட இந்தியா முழுவதிலும் மனுகுலம் பரவியது

அப்போது இமயமலையை வாசஸ்தலம் ஆக்கியிருந்தனர்

அதன்பிறகு இன்றைய மக்காவிலுள்ள அரபாத் சமவெளியில் வசித்து கிழக்கு ஆசியா முழுவதிலும் மனுகுலம் பரவியது

பிறகு ஆப்ரிக்காவில் மனுகுலம் பரவியது

பிறகு பட்டமங்கலம் வந்தனர்

சிவன் மீண்டும் ஒளிதேகம் பெற்று அதிதேவர் ருத்திரன் என்ற மைக்கேலாக பரலோகம் போனார்

வைரவன்பட்டி திருப்பத்தூர் ஆதிவைரவர் கோயில் அடையாளமாகும்

மக்காவில் சிவன் இருந்த காலத்தில் அவருக்கு பரத்திலிருந்து இறைவன் என்ற அல்லாஹ் வழிபாட்டு மூர்த்தமாக அஸ்த்ரக் கல்லை கொடுக்கிறார்

இந்த அஸ்த்ரக் கல்லே லிங்க வழிபாட்டின் முதல் லிங்கமாகும்

லிங்கம் என்பதன் விளக்கம் அரு உருவம்

அரூவமான இறைவனை ஒரு கல்லில் அடையாளப்படுத்தி வழிபடுதல் அரு உருவ வழிபாடாகும்

படைக்கப்பட்ட மனிதர்கள் விலங்குகள் சாயல் இல்லாத ஒரு கல் ; இயற்கை வழிபாடு

30:30. ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.

பஞ்சபூதங்களை படைத்து அதன் மூலமாகவே பூமியில் மனிதர்கள் படைக்கப்படுகிறார்கள்

அந்த பஞ்சபூதத்தின் அடையாளமாகவே லிங்கம் இருக்கிறது

சரியாக சொன்னால் ஜடவழிபாடே ஆதியில் அல்லாஹ் வால் அணுமதிக்கப்பட்டது

உருவ வழிபாடே தடைசெய்யப்பட்டது

யாத்திராகமம் 20:4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்

சொரூபம் உருவ வழிபாடு தடைசெய்யப்பட்டது ; ஆனால் ஜட வழிபாடு அணுமதிக்கப்பட்டது

18. அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்து,

உலகம் முழுவதிலும் நடுகல் வழிபாடு தொன்மையானது

மெக்காவின் அஸ்த்ரக் கல் ஜட வழிபாடு சிவனால் ஆரம்பிக்கப்பட்டதால் அதை சிவலிங்கம் என்கிறார்கள்

இந்துமத சிவலிங்க கோவில்கள் அனைத்தும் மக்கீஸ்வரத்தின் அடிப்படையில் வந்த கோவில்கள் ஆகும்

சிவனுக்கென்று மனித ரூபம் உண்டு ; அதை சிலையாக செய்து வழிபடாமல் ஆதி இயற்கை - ஆதி இஸ்லாம் வழியில் உள்ளவையே சிவன் கோவில்கள் ஆகும்

லிங்கவழிபாட்டில் இருவர் வருகிறார்கள்

ஒருவர் வழிபடப்படும் அல்லாஹ்

மற்றவர் யாரை குருவாக வைத்து வழிபடுகிறோம் என்பதாகும்

சிவனை குருவாக வைத்து அல்லாஹ் வை வழிபடுவதால் இது சிவலிங்கம்

குரானில் அல்லாஹ் வை வணங்குவதுபோலவே ஆதம் என்ற சிவனை வணங்கு என கட்டளை வந்தது

7:11. நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், “ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)” என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.

ஆக சிவனையும் அல்லாஹ் வையும் இணைத்து வழிபடுவதே சிவலிங்கமாகும்

அல்லாஹ் வால் மனிதர்களுக்கு கொடுக்கப்பட்ட முழுமையான வழிபாடு அஸ்த்ரக் கல் வழிபாடு

அதாவது சிவலிங்க வழிபாடு

இந்தியாவில் இதன் மூலமந்திரம் ஓம் நம சிவாய

சிவனை வழிபடுகிறேன் என மந்திரம் இல்லை

சிவாய - சிவனாக வெளிப்பட்ட அல்லாஹ் வை வழிபடுகிறேன் என்பதே மூலமந்திரம்

மக்கா வழிபாடு ஆப்ரகாமும் சாராயும் ஈரானிலிருந்து நாடோடியாக வரும்போதே : ஹாஹாரை சந்திக்கும் முன்பே யூதர்களும் அரபியர்களும் பிறக்கும் முன்பே நடைமுறையில் இருந்தது

18. அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து,

19. அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக.

மக்கா கோவிலில் ஆதியில் ஆதம் என்ற சிவன் உண்டாக்கிய வழிபாடுகளில் ; பின்னாட்களில் அங்கு வாழ்ந்த அரபியர்கள் சேர்த்துக்கொண்ட வழிபாடுகளைத்தான் முகமதுநபி ஒழித்தாரே தவிர புதிய இறைவழிபாட்டை முகமதுநபி கொண்டுவந்தது போல தவறான கருத்தை அரபியர்கள் புகுத்தி விட்டார்கள்

ஹஜ் யாத்திரையின் போது இந்து சைவநெறிக்குரிய வெள்ளாடை உடையமைப்பு ; கோவிலை ஏழு முறை வலம் வருதல் என்பதெல்லாம் அரபிக்களுக்கு புரியாது

ஆனால் இந்திய முஸ்லீம்களே இது உங்கள் மூதாதையர் நடைமுறை என்பதை உலக முஸ்லீம்களுக்கு புரிய வையுங்கள்

அப்படியில்லாமல் புதிதாக மதம் மாறிய கிறிஸ்தவர்களும் இசுலாமியர்களும் தங்கள் நாட்டில் உள்ள வழிபாடுகளை ஒழித்துவிட்டு அல்லாவை வழிபட வேண்டும் என்ற தவறுக்குள் கிடக்கிறார்கள்

அஸ்த்ரக்கல்லை ஆதமை வணங்குவதாக முகமதுநபி மதித்தார்

அதனிடம் குதிரையில் அமர்ந்து காலாட்டிக்கோண்டே தொலைத்துவிடுவேன் என வீரவசனம் பேசினார் உமர் ரலி

உமர் ரலியின் அறியாமையை சாத்தான் பயன்படுத்திக்கொண்டான்

அல்லாஹ் வுக்காக அடுத்த தேவர்களை அவமதி ; அடுத்த வழிபாட்டுக்கார்ர்களை கொன்றால் சொர்க்கத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாஹ் அலைகிறார் எனவும் சைத்தான் ஸ்ட்ராங்காக இசுலாமியர்க்கு ஓதி விட்டான்

அல்லாவை வழிபட்டாலும் சைத்தானுக்கு இடம் கொடுத்தவர்களாக வாழ்வதால் இன்று இசுலாமிய நாடுகளில் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை

அரபுக்களின் சொந்த வழிபாடுகளை ஒழித்து அரபுக்களுக்கு முந்திய சைவ வழிபாட்டை முகமதுநபி நிலைநிறுத்தியிருக்க ; அரபுக்களின் முஸ்லீம்களின் சொந்த வழிபாட்டை மற்றவர்களின் மேல் திணிக்க அட்டூழியங்கள் செய்ய அல்லாஹ் அத்தாட்சி கொடுத்திருப்பதாக நம்பித்திரிகிறார்கள்

குரான் இறைவனால் இரக்கப்பட்டிருந்தாலும் ஆன்மீக அணுபவம் அற்ற அரபிக்கள் தப்பு தப்பாக விளக்கம் சொல்லி வைத்ததால் இசுலாமியர் அல்லாவை விட சைத்தானுக்கு சொந்தக்காரர்கள் ஆகிவருகிறார்கள்

இந்தநிலையில் இருந்து தப்ப வேண்டுமானால் இந்து மதத்தின் ஆதி வேதங்களை உணர்ந்து குரானை அணுகினால் சரியான வெளிச்சம் கிடைக்கும்

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் ஆதிசக்தியின் நாமத்தினாலும் ஆதிசேஷனின் நாமத்தினாலும் அல்லாஹ் ; பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வல்ல சமரச வேதாந்தி என்ற அல்மஹதியை விரைவில் அணுப்புவீராக

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி








Friday, February 21, 2020

நிர்வாண ஸஷ்டகம்



ஆதி சங்கரர் 8 வயதில் துறவுக்கு அனுமதி தன் தாயிடம் பெறுகிறார்

தன் குருவை தேடி கால்நடையாக வட இந்தியாவில் பயணிக்கிறார்

உஜ்ஜையினியில் அவருக்கு முன் குறிக்கப்பட்ட குருவானவர் தென்படுகிறார்

சீடனின் தகுதியை அறிந்துகொள்ள நீ யார் என வினாவுகிறார்

9 வயது குழந்தை தன்னைப்பற்றி சொன்னவையே இவ்வார்த்தைகள்

1)மனோ புத்யஹங்கார சித்தா நினாஹம்
ந ச ச்ரோத்ர ஜிஹ்வே ந ச க்ராண நேத்ரே
ந ச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயு:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

2)ந ச ப்ராண சங்க்யோ நவை பஞ்சவாயு:
ந வா சப்த தாதுர் நவா பஞ்சகோச:
ந வா பாணி பாதம் ந சோபஸ்தபாயு:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

3)ந மே த்வேஷ ராகௌ ந மே லோப மோஹௌ
மதோ நைவ மேநைவ மாத்ஸர்ய பாவ:
ந தர்மோ ந ச அர்த்தோ ந காமோ ந மோக்ஷ:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

4)ந புண்யம் ந பாபம் ந சௌக்யம் ந துக்கம்
ந மந்த்ரோ ந தீர்த்தம் ந வேதா ந யக்ஞ:
அஹம் போஜனம் நைவ போஜ்யம் ந போக்தா
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

ந ம்ருத்யுர் ந சங்கா ந மே ஜாதிபேத:
பிதா நைவ மே நைவ மாதா ச ஜன்மா
ந பந்துர் ந மித்ரம் குருர் நைவ சிஷ்யா:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

5)அஹம் நிர்விகல்போ நிராகாரரூபோ
விபுத்வாச்ஸ சர்வத்ர சர்வேந்த்ரியானாம்
ந ச சங்கடம் நைவ முக்திர் ந மே யா
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

இந்தப்பாடலுக்கு அர்த்தம் உணரும் முன்பு முருகன் தன்னைப்பற்றி அருணகிரி நாதரிடம் யார் என சொன்னதாக கந்தரலங்காரத்தில் பாடல் ஒன்று உள்ளது

தேனென்று பாகென்றுவமிக் கொணாமொழித் தெய்வ வள்ளி கோன்
றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோ
வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன் றசரீரி யன்று சரீரியன்றே

நீ யார் தெரியுமா ? நீ மண்ணா இல்லை நீ நீரா இல்லை நீ காற்றா இல்லை நீ நெருப்பா இல்லை ஆகாயமா அதுவும் இல்லை

எல்லாம் தானான கடவுளா அதுவும் இல்லை . ஆதியிலே வெளிப்பட்ட சத்தம் அசரீரியா என்றால் அதுவுமில்லை ஏனென்றால் அது சகலவற்றையும் தன்னுள் தாங்கும் பரமாத்மா

அப்ப யார்தான் நான் ?

நீ சரீரி .

என்ன முருகன் குழப்புகிறார் ?

நீ பஞ்சபூதமோ அதனால் ஆன உடல் அல்ல .

அல்லது காற்றைப்போன்ற உயிருமல்ல

அல்லது கடவுளா அதுவுமில்லை பரமாத்மாவா அதுவும் இல்லை

பிறகு யாராம் ?

தனித்துவமான ஜீவாத்மா . அதற்கென்று ஒரு சூக்கும சரீரம் இருக்கிறது

அது அழிவற்றது .

கீதை 2:20 ஆத்துமாவை பொறுத்தளவில் அதற்கு பிறப்போ இறப்போ எப்போதுமில்லை ! புதிதாய் வருவது அல்லது இல்லாமல் போவது என்பதும் அதற்கு இல்லை ! ஆத்துமா பிறப்பு இறப்பை கடந்தது ; நித்தியமானது ;எப்போதும் இருப்பது ஏற்கனவே இருந்தது ! உடல் அழிந்தாலும் ஆத்துமா அழிவதேயில்லை !!

அதிதேவர் சிவனுக்கு அடுத்த நிலையில் சிவனின் அம்சமான நான்கு சிவகுமாரர்கள் இருக்கிறார்கள்

1)அருள்நந்தி சிவம்
2)பரஞான சிவம்
3)மெய்கண்ட சிவம்
4)உமாபதி சிவம்

இந்த நால்வரே சனகாதி முனிவர்களாக தட்சினாமூர்த்தியாக சிவன் உபதேசித்த போது உபதேசமும் பெற்றவர்கள்

சமயக்குரவர்களாக பூமிக்கு வந்தவர்களும் இந்த நால்வரே

பரத்திலே ருத்ரனான உள்ள அதிதேவர் சிவன் இனி பூமிக்கு நேரடியாக வருவதில்லை

இந்த நால்வரே சிவனின் பிரதிநிதியாக பலமுறை பூமிக்கு வந்தும் போய்க்கொண்டும் உள்ளனர்

பூமியில் இவர்கள் யாரேனும் அவதரித்து இருந்தால் பூமியைப்பொறுத்து அவரே சிவனைப்போன்றவர்

சிவனின் பிரதிநிதி ; ஆனாலும் சிவன் அல்ல

மற்ற எல்லா மனிதர்கள் ; ஞானிகள் ; யோகிகளைக் காட்டிலும் சிவனுக்கு இணையானவர்

சிவனோடு கூடி இருப்பவர்

சிவ + யோகம் = சிவோகம்

ஆதிசங்கரர் அந்த மெய்கண்ட சிவனே ஆவார்

ஆகவே சிவனோடு கூடியிருப்பவர் என்ற முறையில் சிவோகம் சிவோகம் என்றார்

சிவோகம் என்ற சமஸ்கிரதம் சொல்லாக மட்டும் பார்க்கிற அஞ்ஞானிகள் சிவோகம் என்றால் நான் சிவம் நான் சிவம் என ஆதிசங்கர்ர் சொன்னதாக தரிக்கித்திரிகிறார்கள்

அவர்களின் ஞான மாயை அவர்களை படுகுழியில் தள்ளிவிடுகிறது

ஆதி சங்கரரே நான் சிவன் என சொல்லிவிட்டார் ; அதைப்போல நானும் சிவனாகி விட்டேன் என துருத்தி அஹம்பாவத்தின் பிள்ளைகள் ஆகி விடுகிறார்கள்

சமஸ்கிரதம் என்பது தமிழின் அடிப்படையில் நின்று பல மொழிக்காரர்களையும் ஈர்க்கும் வண்ணம் சிவன் உருவாக்கிய மொழி

அதை சரியாக புரியவேண்டுமானால் தமிழ் படுத்தி பார்க்கவேண்டும்

சிவோகம் = சிவ + யோகம்

யோகம் என்றால் கூடியிருத்தல் ; இயைந்து இருத்தல் ; ஒன்றாக இருத்தல் என அர்த்தம்

சிவ + யோகம் என்றால் சிவனும் நானும் கூடியிருக்கிறோம் என்பதாகும்

பூமியிலே வந்த சிவகுமாரர்களில் ஒருவரான இயேசுவும் இதே வார்த்தையை சொன்னார்

நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம் = சிவோகம்

யோவான் 10:30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்

அதுபோல மெய்கண்ட சிவமானவர் பூமியில் ஆதிசங்கரராக அவதரித்து வந்திருப்பதனால் தான் சிவகுமாரன் என்றார்

1)நான் மனமா அதின் புத்தியா அதின் அகம்பாவமா அதின் ஞானமா என்றால் நிச்சயமாக இல்லை

அல்லது உடலின் ஐம் புலன்களா என்றால் அவைகளுக்கும் அப்பாற் பட்டவன்

அல்லது ஆகாயம் ; காற்று ; நீர் ; நிலம் ; நெருப்பா என்றால் பஞ்ச பூதங்களையும் கடந்தவன் நான்

ஆனந்த ரூபன் சிவன்

அடியேன் சின்ன சிவன்

சிவனோடு ஒன்றி இருப்பவன்

2) நான் உயிர் இல்லை அல்லது தச வாயுக்களும் இல்லை அல்லது ஏழு தாதுக்களும் இல்லை

ஐம் புலன்களின் நுகர்ச்சிகளும் இல்லை
மனதை மூடியுள்ள ஐவகை கோசமுமல்ல

அடியேன் சின்ன சிவன்

சிவனோடு ஒன்றி இருப்பவன்

3)என்னிடம் மறுப்பும் வெறுப்பும் இல்லை ; விருப்பமோ ஆர்வமோ இல்லை

என்னிடம் பேராசையும் பெருநஷ்டமும் இல்லை ; கர்வமும் குரோதமும் இல்லை ; இன்பமோ துன்பமோ இல்லை

என்னை கட்டுப்படுத்தும் நியதிகளும் இல்லை ; பலன் விளைவுகளும் இல்லை ; தேவைகளும் இல்லை ; தேவையற்றவைகளும் இல்லை

அடியேன் சின்ன சிவன்
சிவனோடு ஒன்றி இருப்பவன்

4)நான் பாவ புண்ணியங்களை கடந்தவன் ; இன்பமோ துன்பமோ என்னை பாதிப்பதில்லை ;

வேதமோ வேள்வியோ ; மந்திரமோ தீர்த்தமோ அவசியமற்றவன்

அறிதல் உணர்தல் புரிதல் இம்மூன்றிர்க்கும் அப்பாற்பட்டவன்

அடியேன் சின்ன சிவன்
சிவனோடு ஒன்றி இருப்பவன்

5)நண்பர்களைம் பகைவர்களைம் பேதம் பிரிப்பதில்லை
ஜன்ம ஜன்மாங்களில் குறிப்பிட்ட தந்தையோ தாயோ எனக்கு இல்லை
உறவிணர்கள் நண்பர்கள் குரு சீடன் என்ற பந்தபாசமும் இல்லை

அடியேன் சின்ன சிவன்
சிவனோடு ஒன்றி இருப்பவன்

6)மல மாச்சர்யங்கள் விருப்பு வெறுப்புகளை கடந்தவன் ; தன்னில் தானே லயித்து உலகத்தோடு ஒட்டாதிருப்பவன் ; இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாதவன்

அடியேன் சின்ன சிவன்
சிவனோடு ஒன்றி இருப்பவன்