---குரு ராமகிருஸ்ண பரமஹம்சரின் உபதேசங்கள் ----
ஞானி எப்போதும் உண்மைப்பொருளைப்பற்றி ஆராய்ச்சி செய்கிறான் ! நேதி , நேதி --இதுவும் அல்ல ; இதுவும் அல்ல ; பிரம்மம் இதுவும் அல்ல அதுவும் அல்ல ; ஜீவன்களும் அல்ல ; உலகமும் அல்ல என்றெல்லாம் விவேகத்துடன் சிந்தனையில் ஈடுபடுகிறான் ! இந்த ஆராய்ச்சியின் மூலம் அவனது மனம் உறுதி பெறுகிறது ! இறுதியில் மனமே இல்லாமல் போகிறது ; அப்போதே சமாதிநிலை அவனுக்கு வாய்க்கிறது !
ஆராய்ச்சியின் முடிவில் நான் என்ற எதுவும் அற்ற நிலையை அடைகிறான் ! வெங்காயத்தை எடுத்துக்கொள்ளுங்கள் . சிவப்பு தோல்களை உரித்தெடுங்கள் , வெண்ணிறத்தோல்கள் வரும் . அவற்றையும் களையுங்கள் ; உள்ளே எதுவும் இருக்காது அதுபோல் நான் யார் என்ற ஆராய்ச்சியின் முடிவில் எதுவுமே எஞ்சுவதில்லை !
கடவுள் நமக்கு வெளியில் மட்டுமே இருக்கிறார் ; வெகு தொலைவில் இருக்கிறார் என்ற எண்ணம் இருக்கும்வரை நீ அறியாமையில் இருக்கிறய் ! நம்முள்ளும் அவரை உணரும் போதுதான் உண்மை ஞானம் தோன்றுகிறது ! சொந்த ஆன்மாவாகிய கோயிலில் (ஜீவாத்துமாவில் ) இறைவனின் உறைவிடத்தை காண்பவன் பிரபஞ்சமாகிய கோயிலிலும் அவரை காண்கிறன் ! கடவுள் அதோ அங்கே இருக்கிறார் என்ற உணர்வு மட்டும் இருக்கும் வரை ஒருவன் அறியாமையில் தான் மூழ்கி இருக்கிறான் ; இதோ இங்கேயும் இருக்கிறார் என்ற உணர்வு ஏற்படும்போதுதான் அவன் ஞானம் பெற்றவன் ஆகிறான் !
ஞானம் ஏகத்தை , ஒருமையை நோக்கி அழைத்து செல்லுகிறது . அறியாமை பன்மைக்கு வழி வகுக்கிறது !
ஸோகம் ( நானே அவன் ) என்கிறான் ஞான யோகி ! ஆனால் தான் உடல் எனக்கருதிக்கொள்ளும் ஒருவன் இத்தகைய மனப்போக்கை கைகொள்வது தீங்கு விளைவிக்கும் ! அவன் தன்னையும் ஏமாற்றிக்கொள்கிறான் ; பிறரையும் ஏமாற்றுகிறான் ! மாறாக ஆத்துமா நான் எனக்கருதிக்கொள்பவனே இத்தகைய மனப்போக்கை கைக்கொள்வது அனுபூதியை தரும் !
கீழ் நிலை பக்தன் ``கடவுள் அதோ அங்கே வானில் உள்ளார் `` என்கிறான் ! நடுனிலை பக்தன் `` கடவுள் எல்லா உயிர்களிலும் உயிராகவும் உணர்வாகவும் உள்ளார் `` என்கிறான் !
தோட்டி முதல் தொண்டைமான் வரை அனைத்து நிலையிலுள்ள அனுபவங்களையும் பெற்று ; அவற்றில் ஒன்றும் இல்லை என்ற உறுதி தோன்றும் போதுதான் சகலத்தையும் கடறும் போதுதான் ஒருவன் பரமஹம்ச நிலையை அடைய முடியும் ! அப்போதுதான் அவன் உண்மையான ஞானி ஆகிறான் !