Total Pageviews

Tuesday, August 14, 2012

இறைவன் உள்ளாரா ?

குரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்கள் !!

இறைவன் உள்ளாரா ?

இரவு நேரத்தில் ஆகாயத்தில் நட்சத்திரங்கள் பலவற்றை நீ காண்கிறாய் , ஆனால் பகலில் காண்பதில்லை ! ஆகையால் பகலில் வானத்தில் நட்சத்திரங்கள் இல்லையென்று சொல்லிவிட முடியுமா ?

மனிதனே ! நீ அறியாமையில் இருக்கும் போது உன்னால் இறைவனை காண முடியவில்லை ! அதற்காக இறைவனே இல்லையென்று சொல்லாதே !!

பூமியை விட எத்தனையோ மடங்கு பெரியது சூரியன் . ஆனால் தொலைவு காரணமாக அது ஒரு சிறிய வட்ட தட்டு போல் தோன்றுகிறது . அது போல் இறைவன் எல்லையற்ற மகிமை உடையவராக இருந்தும் நாம் அவரிடமிருந்து வெகு தொலைவில் இருப்பதால் அவரது மகிமையை அறிய முடியவில்லை !!

கடவுள் ஒரு சர்க்கரை குன்று போன்றவர் . சிறிய எறும்பு அதிலிருந்து ஒரு சிறிய துணுக்கை எடுத்து செல்லுகிறது . பெரிய எறும்பு சற்று பெரிய துணுக்கை எடுத்து செல்லுகிறது . இப்படி எவ்வளவோ எறும்புகள் எடுத்து சென்றாலும் குன்று முன் போல பெரியதாகவே இருக்கிறது .பக்தர்கள் விசயமும் இப்படித்தான் .இறையருளின் சிறிய அனுபவம் ஏற்பட்டாலும் அவர்கள் பரவசப்பட்டு போகின்றனர் . அவருடைய மகிமைகள் அனைத்தையும் உணர்ந்து அவற்றை தன்னுள் அடக்கி கொள்ள வல்லவன் யாரும் இல்லை !!

காந்தமும் இரும்பும் போல் கடவுளும் மனிதனும் . அப்படியானால் கடவுள் ஏன் மனிதரை கவர்வதில்லை ? இரும்பு மண்ணில் ஆழப்பதிந்திருந்தால் காந்தத்தால் அதனை கவர முடியாது . அது போல கர்மத்தளையில் ; அறியாமையில் மூழ்கிக்கிடக்கிற மனிதன் இறைவனுடைய கவர்ச்சியை உணர்வதில்லை . மண்ணிலிருந்து இரும்பை வெளியில் எடுத்து சுத்தம் செய்தால் இரும்பு உடனே அதனை கவர்கிறது . அது போல கண்ணீர் விட்டு அழுது பிரார்திப்பதன் மூலம் கர்மத்தளைகள் ; அறியாமை இருள் விலகும் போது இறைவனால் மனிதன் கவரப்படுகிறான் !!

பத்து பிறவிகளின் அனுபவங்களை கடவுளை உணர்ந்த புருஷர்களின் கருணையினால் ; தொடர்பினால் ஒரே பிறவியில் மனிதன் பெற்று விட முடியும் !!

No comments:

Post a Comment