Total Pageviews

Monday, August 20, 2012

சாலை ஆண்டவரிடம் பெரியார் இணக்கமாக நடந்து கொண்டாரா ?



சாலை ஆண்டவர் தன்னை ஒருபோதும் கடவுள் என சொல்லிகொள்ளவில்லை .மெய்வழி சாமியார் என்று தம்மை குரு என்று சொல்லி கடவுளை அறிய மார்க்கம் காட்டினார் . அதனாலேயே அவரை பெரியார் சாடவில்லை ! வழக்கம் போல மனிதர்கள் சாலைஆண்டவர் என அடை கொடுத்து அவரை கடவுளாக்கி விட்டனர் ?


குரு என்ற வாசகம் வெள்ளைக்காரர்களூக்கு தெறியாது ! அதனால் அதிகாரிகள் மேலானவர்களை அழைக்கும் பட்டமாகிய லார்ட் என்ற வாசகமே அங்கு பயன்படுத்தபடுகிறது ! பைபிளில் காட் என்ற வாசகம் கடவுளுக்கும் லார்ட் என்ற வாசகம் இயேசுவுக்கும் பயன்படுத்த படுகிறது ! பைபிளின் தொடர்பில் வந்த முஸ்லீம்கலும் அதே லார்ட் ஐ தமிழில் ஆண்டவர் அல்லது கர்த்தர் என்ற மொழிபெயர்ப்பில் பயன்படுத்துகின்றனர் ! அதிகாரிகளையும் லார்ட் ஆண்டவனே என்றுதான் ஆங்கிலத்தில் அழைக்கவேண்டுவது அவர்கள் மரபு !

அது போலத்தான் முஸ்லீம்மத தொடர்பில் கடவுளை அறியும் மார்க்கத்தை காட்டியவரே சாலை ஆண்டவர் என அழைக்கபடுபவர் ! ஆனாலும் அவர்கள் சித்தர்களின் வாக்கியங்களையும் உபதேசங்களையும் பயன்படுத்துவர் ! அதுபோல முஸ்லீமாக பிறந்து சித்தர் நெறி மற்றும் முஸ்லீம் வேதத்தையும் கடைபிடிக்கும் ``பாவா`` ஒருவர் தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் தற்ப்போது ஆசிரமம் ஒன்று அமைத்துள்ளார் !அவருக்கும் இந்து சீடர் கூட்டம் வருகிறது ! அவரும் சித்தர்களின் பாடல்களுக்கு விளக்கம் சக்கை போடுபோடுவார் ! ஆனால் கடவுள் என்ற ஒரேஒரு அரூப கடவுளை மட்டுமே உபதேசிப்பார் ! இப்படிப்பட்டவர்களை பெரியார் இன்றைக்கு இருந்தாலும் சாடமாட்டார் ! ஏனென்றால் கடவுளின் பெயரால் பல கட்டுகதைகளையும் புனைசுருட்டுகளையும் கட்டவிழ்த்து ஏமாற்றுபவர்களை சாட கடவுளால் பயன்படுத்த பட்ட கருவி அவர் !

பெரியார் கண்ணை மூடிக்கொண்டு கடவுள் இல்லை என சொன்னவர் என்பதாக பிரபல பட்டுவிட்டது ! ஆனால் சுய மரியாதை எனபது `` நாத்தீகமல்ல ! தான் கொண்ட கொள்கையில் பித்தலாட்டம் இல்லாமல் மன சாட்சிக்கு நேர்மையாக இருப்பது என விவேகானந்தரின் சீடர்களிடம் ஐஸ்ஹவுசில்
ஒருமுறை உரையாற்றி இருக்கிறார் ! அவர் ராமகிருஸ்ண மடங்களுடன் உறவாகவே இருந்தார் ; ஏக இறைகொள்கை உள்ளவர்களுடன் இணக்கமாகவே இருந்தார் ! அவர் மெய்வழிசாமியாருடன் இணக்கமாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது ! வள்ளலார் மீது பெரு மதிப்பு கொண்டவராய் வடலூர் ஆலயம் சென்று பார்த்தும் புலால் உண்பவர்கள் உள்ளே நுழையக்கூடாது என்ற வாசகத்தை மதித்து உள்ளே நுழையாமல் திரும்பி வந்தவர் அவர் ! பெரியாரை பற்றி முழு உண்மை வெளிப்படுத்தப்படாமல் அவரது ஒரு கோணம் மட்டுமே வெளியாக்க பட்டுள்ளது

இது நுட்பமாக புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று :
அன்றைய காலகட்டத்தில் பெரும்பான்மையான மக்கள் கடவுள் என்பதை ``பல கடவுள் `` கொள்கை என்பதாகத்தான் புரிந்து வைத்திருந்தனர் ! அத்தோடு உருவ வழிபாடும் அதற்கு குருமார்களாக பிறப்பால் அந்தணர்கள் என்று ஸ்தாபித்து கொண்டு தங்களை உயர்ந்தவர்களாக சித்தரித்து கொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட ஜாதியினரிடம் அந்த கடவுள் கொள்கை மாட்டிக்கொண்டிருந்தது ! கடவுள் என்ற வார்த்தையின் பின்னால் அந்த ஜாதியினர் தங்களை ஸ்தாபித்து கொண்டிருந்த நிலை !

``சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டான் `` என்ற பழமொழி ஆழ்ந்த அனுபவத்தில் வந்தது ! பூசாரி வரம் கொடுக்காவிட்டால் சாமியால் வரம் கொடுக்க நினைத்தாலும் ஒன்றும் கொடுக்க இயலாது என்னும் அளவு உருவ வழிபாடும் ; கோவில்களும் ; அரசு பணிகளும் ; கல்வி கூடங்களும் சமூக நிர்வாகமும் பூசாரிகளானவர்களின் பிடியில் இருந்தது ! அதை உடைத்தாக வேண்டும் என்ற மகத்தான சமுதாய பணி ; பெரியாரின் தோள் மீது வந்த போது கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற முற்றுண்மையை முக்கியப்படுத்தாமல் ; பிராமர்கள் தங்களுக்கு கவசமாக்கி வெளியே காட்டிகொண்டிருந்த கடவுள் சித்தாந்தத்தை அவர் உடைத்தார் ! ``கடவுளை மற மனிதனை நினை`` என்ற தாரக மந்திரம் நாத்திக கொள்கைக்காக வந்ததல்ல ; பூசாரிகளின் ஆதிக்கத்தை உடைத்து சமூக சமத்துவத்தை உண்டாக்கும் சமூக சிந்தனையால் வந்தது !

வெளி நாடுகளில் நாத்தீக கொள்கைக்காக நாத்தீகம் பேசுகிறவர்கள் சாதிக்காத விசயத்தை பெரியார் சாதித்த ரகசியம் அவர் நாத்தீக கொள்கைக்காக நாத்தீகம் பேசாமல் சமூக சீர்திருத்தம் செய்ய கடவுள் மறுப்பு என்ற நிலைபாட்டை சூழ்னிலைக்காக கையில் எடுத்தார் என்பதே !அவர் உள்ளார்ந்து கடவுள் மறுப்பாளரா என்பது அவருக்கும் கடவுளுக்கும் மட்டுமே உள்ள விசயம் ! பிராமனர்களின் ஆதிக்கத்தில் இருந்த பல கடவுள் உருவ வழிபாட்டு கொள்கைகளை அவர் கடுமையாக சாடினாரே தவிற இந்து மதத்தின் பிரிவாகிய ஏக கடவுள் மார்க்கங்களாகிய ராமகிருஸ்ண மடங்கள் ; ஞான மார்க்க தபோவனங்கள் ; வள்ளலார் ஏனைய சித்தர்கள் தொடர்பானவர்களின் விசயத்தில் அவர் மூக்கை நுழைத்ததே இல்லை !


ஏன் ஒருமுறை வேதாத்திரி மஹரிஸி அவ்வளவு பிரபலம் அடையாத போதே நான் எதை செய்து கொண்டிருக்கிறேனோ அதையே நீங்கள் வேறு வழியில் சொல்லுகிறீர்கள் என்று சொன்னாராம் ! ஏக இறைகொள்கை பேசுவதோடு சமூக சமத்துவம் காக்கும் இசுலாத்துடன் அவர் உறவாகவே இருந்தார் ! அதே நேரத்தில் ஏக இறைகொள்கை பேசினாலும் வெளினாட்டு பணத்தை பங்கு போட்டுகொள்வதில் ஜாதியத்தை வெளியே தெறியாமல் கட்டிகாப்பதும் ; அரசுக்கு நிகராக நிறுவனங்களை வைத்து கொண்டு அதை அனுபவிப்பதில் ஜாதிபாகுபாடுகளை காப்பதுமான கிரிஸ்தவ நிறுவனங்களுடன் பெரியார் இணக்கமாக நடந்து கொண்டதில்லை !

வள்ளலார் , வேதாத்திரி மஹரிஸி , சித்தர்கள் , இசுலாம் இவர்களுடன் அவர் உறவு பூண்டிருந்தது போலத்தான் அவர் மெய்வழிசாலையுடனும் உறவு பூண்டிருந்தார் ! அது ஏக அரூப கடவுள் கொள்கை பேசுகிறவர்களுடன் அவர் நல்லுறவு பேனிக்கொண்டு பிராமர்களின் ஆதிக்கத்தை உடைக்க பல கடவுள் உருவ வழிபாடுகளை மட்டுமே எதிர்த்தார் --அன்றைய சமூகத்தில் பாமர மக்கள் பிராமர்களின் கவசமாக பார்த்த கடவுளை மட்டுமே மறக்க சொன்னாரே ஒழிய ஞான மார்க்கத்தினர் ஏக இறைகொள்கை உள்ளோருடன் அவர் முறன்படவே இல்லை என்பது உண்மை !!


தான் கொண்ட கொள்கையில் தெளிவும் அதை தன் வாழ்வில் பித்தலாட்டமில்லாமல் கடைபிடிப்பதை மற்றவர்களுக்கு சொல்லும் யாரையும் எதிர்த்ததில்லை தனக்கே உண்மை என தெரியாததை தான் பிழைப்பதற்காக பரப்பும் மூட சம்பிரதாயங்களே அவரால் சாடப்பட்டன அவர் காலத்தில் பிழைப்பு கூடங்களாய் இருந்த மடங்களே கண்டிக்க பட்டன ஞானமார்கத்தில் பிழைப்புவாதிகளால் கார்ப்பரேட் சாமியார்கள் அப்போது இல்லை
 

மெய்வழி சாமியார் எப்படிபட்டவர் என்பது பற்றி ஆழமாக பேச வரவில்லை !

ஆனால் பெரியாரை ஆழமாக அவரது சீடர்கள் கூட புரிந்து வைத்திருக்கவில்லை எனபதே எனது கருத்து !

சமூக சீர்திருத்தம் என்ற இலட்சியத்திற்காக அவர் கடவுளை மற என்று சொன்னாரே தவிற மேலை நாட்டில் பல நாத்தீக வாதிகள் செய்தது போல கடவுள் இல்லை என்று நிரூபிக்கும் முயற்சியில் பல ஆய்வுகளையும் வலிந்து விளக்கங்களையும் செய்து கொண்டு இருக்கவில்லை ! கடவுள் இல்லை என்று நிரூபித்துக்கொண்டிருப்பதை விட கடவுள் பெயரை சொல்லிகொண்டு பிறரை அடிமைப்படுத்தும் ; இருளுக்குள் தள்ளும் பிற்போக்கு சக்திகளை ; ஜாதீய ஏற்றத்தாழ்வுகளை ; சமூக அவலங்களை உடைத்து சமூகத்தில் பல தரப்பட்டவர்களும் முன்னேற்றம் அடைய அவர் முயற்சித்து அதில் பெரிய அளவில் வெற்றியும் பெற்றார் ! அவருடைய பிரதான பணி சமூக சீர்திருத்தமே தவிற கடவுள் மறுப்பல்ல ! அது ஒரு கருவி !

கம்யுனிஸ்ட்டுகள் அடிக்கடி சொல்லுவார்கள் ஸ்டெரடஜி & டேக்டிக்ஸ் ; அதாவது கொள்கை அதை அடைய அந்தந்த சூழ்னிலைக்கு கடைபிடிக்க படும் சில நடைமுறைதந்திரம் ! இந்த நடைமுறைகள் பல வேலைகளில் கொள்கைக்கு எதிரானவர்களுடனும் ஒரு குறிப்பிட்ட்ட விசயத்திற்கு ஒத்து வேலை செய்ய வேண்டியிருக்கும் ! பெரிய எதிரியை வீழ்த்த சின்ன எதிரியுடன் உறவு வைத்து கொள்வது இன்ன பிற !

அதுபோல சமூக சீர்திருத்தம் என்ற கொள்கைக்கு பெரியார் கடைபிடித்த நடைமுறைதந்திரமே கடவுள் மறுப்பு என்பது ! நான் மீண்டும் சொல்கிறேன் ; உண்மையிலேயே அவர் கடவுளை வெறுத்தவரா ? உள்ளார்ந்து கடவுளுடன் உறவாடியவரா ? என்பதையும் தாண்டி அவர் கடவுளால் பயன்படுத்தப்பட்ட பாத்திரம் என்பதே எனது கருத்து !

கடவுளை நம்புகிறேன் என்று சொன்னவர்கள் ; கடவுளை பரப்பியவர்கள் பலர் மனித முற்சியால் தங்களுக்கு தெறிந்த சில விசயங்களை பூமியில் உலப்பிகொண்டிருதார்களே தவிற அவர்கள் கடவுளால் பயன்படுத்த பட்டார்களா ? அல்லது கடவுளின் கரத்தில் நல்ல கருவியாய் இருந்தார்களா ? என்பதற்கு சான்றுகள் ; விளைவுகள் ; பயன்கள் இல்லை ! ஆனால் என்னைப்பொறுத்த அளவில் கடவுளை மறுக்கிறேன் என்று சொல்லியும் தெறிந்தோ தெறியாமலோ கடவுளின் கரத்தில் நல்ல கருவியாய் பெரியார் இருந்தார் என்பதற்கு சான்றுகள் ; விளைவுகள் ; பயன்கள் தமிழகத்தில் நிறைய உண்டு !

பெரியாரால் சமுதாயத்திற்கு பல நன்மைகள் நடந்தன சமூக சீர்திருத்தம் என்பதை நாத்தீகம் என்ற தவறுடன் அவர் செய்தார்

அதை பிழைப்புவாதமாக அவர் மாற்றவில்லை . ஆனால் அதை பிழைப்புவாதமாக மாற்றும் நோக்கத்தில் அண்ணாவும் கலைஞரும் முன்னேற்ற கழகம் என்று ஆரம்பித்தார்கள் . அது அவர்களின் குடும்பத்தை முன்னேற்றுவது என்பதை பெரியார் ` கண்ணீர்த்துளிகள்` என நக்கலிடித்தார் 

மொத்த இந்தியாவும் திராவிடம் என்பதை மறைத்து வட இந்தியர் ஆரியர் தமிழர்கள் மட்டுமே திராவிடர்  என்றும் பொய்யை பரப்பியவர்கள்  இந்த இருவருமே

இவர்களின் பேச்சை நம்பி உணர்ச்சி வசப்பட்டு காமராஜரின் நல்லாட்சியை அகற்றிய தமிழக மக்கள் தவரிளைத்ததாகத்தான் பெரியார் சொன்னார்

ஆனால் அந்த தெளிவு பழுத்த ஆன்மீக வாதியான ராஜாஜி அவர்களுக்கு அந்த நேரத்தில் இல்லாமல் போனதும் - சில தனிப்பட்ட பகையின் காரணமாக காமராஜரை எதிர்த்து திமுக வை அவர் ஆதரித்தார் என்பதும் உண்மை

தமிழகம் இந்தியாவிலிருந்து தனிமைப்பட்டு அனேக நன்மைகளை இழந்து நிற்கிறது

மேற்போக்காகவேனும் கடவுளை நம்புகிற ஒரு மனிதன் என பலரால் நம்புவதற்கு வாய்ப்புள்ள என்னைபோன்றவனும் விருப்புவெறுப்பு இல்லாமல் நடுனிலையோடு அனுக முடியும் என்றால் அது பெரியார் கடவுளால் பயன்படுத்தப்பட்ட பாத்திரம் என்பதை புரிந்து வைத்திருப்பதும் ஏற்றுக்கொள்வதுமாகும் !