Total Pageviews

Sunday, April 5, 2015

பங்குனி உத்திர நன்னாள்



பங்குனி உத்திர நன்னாளில் சற்குருவாம் முருகனை வழிபட்டு ; ஞானத்தை வேண்டுவது ஆதித்தமிழர்களின் மரபாகும்
கிருத யுகத்தில் குமரிக்கண்டத்தில் முதல் மனித சமூகம் தமிழ் சமூகமாக வளர்ந்தது  . முதல் தமிழ்ச்சங்கத்தில் சிவனும் ஒரு புலவர் .

சதா தியானத்தில் இருந்து பொன்னாசை ; பெண்ணாசை மற்றும் மண்ணாசை என்ற மூவகை ஆசைகளை வென்று அழியாத ஒளி சரீரத்தை பெற்று வைரவனாக அவர் பரலோகத்தில் நுழைந்தார் . அழியும் மனித சரீரம் என்பதை அழியாத சரீரமாக மாற்றிய முதல் நபர் ; மனிதன் என்ற நிலையிலிருந்து தேவராக பரலோகத்தில் நுழைந்த முதல் நபர் அவரே

அதுவரை பரலோகத்தில் படைக்கப்பட்ட அனைத்து தேவதூதர்களும் முழுமையானவர்களல்ல அவர்கள் ஒரு குறிப்பிட்ட வேலைக்காக குறிப்பிட்ட குணத்தோடு மட்டுமே படைக்கப்பட்டவர்கள்

சகலமும் கடவுளால் யாரை மூலமாக கொண்டு படைக்கப்பட்டதோ அந்த பரமாத்மா அருப உருபி . அவரை தேவதூதர்கள் கூட தரிசித்ததில்லை . அவர் வாழும் வைகுண்டத்தில் திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட நிலையில் இருப்பதாக ஞானத்தால் உணர்ந்து உருவகப்படுத்தினார்களே தவிர அவரை தேவர்களும் கண்டதில்லை ஏனென்றால் சகலமும் அவருக்குள் அவர் மூலமாக கடவுளால் படைக்கப்பட்டுள்ளது . அவர் படைப்புகள் அனைத்திலும் நிரவி உள்ள சர்வ வியாபி . அருவ உருபி .

பரலோகப்படைப்புக்கு பின்பு முதல் மனிதனாக சிவன் கடவுளால் அவரைப்போன்ற சாயலில் அவரைப்போலவே முழுமையான தன்மையில் படைக்கப்பட்டு அவரது முந்தய படைப்புகளான தேவர்கள் அனைவரும் அவருக்கு பணிவிடை செய்யும்படி கட்டளையிட்டார்

இப்படி சிவனுக்கு பணிய விருப்பமில்லாத தேவர்கள் சிலரே கடவுளை பகைத்து அசுரராக மாறினார்கள் . அவர்கள் மனிதர்களை தீய விசயங்களில் தூண்டி கெடுத்து இந்த மனிதனை படைத்ததற்காக கடவுள் வெட்கப்படும்படி செய்ய முயற்சிக்கிறார்கள் 



அசுரர்களின் மாயங்கள் அனைத்தையும் வென்று சிவன் முழுமையடைந்து அழியாத ஒளி சரீரம் பெற்று வைரவனாக பரலோகம் புகுந்தார் . அங்கு அவருக்கு ருத்ர பதவி கொடுக்கப்பட்டது . இந்த ருத்ரன் என்பதையே மைகேல் – வலிமையான யுத்த வீரன் என ஆப்ராகாமிய வேதங்கள் குறிப்பிடுகின்றன

இங்கு கவணிக்க வேண்டிய முக்கியமான விசயம் பரலோகத்தில் முழுமையான நபராக – கடவுளின் சாயலில் சிவனும் அவரைத்தொடர்ந்து சென்ற மனிதர்கள் மட்டுமே உள்ளனர் . ஆனால் தேவதூதர்கள் முழுமையானவர்களல்ல . அவர்கள் குறிப்பிட்ட வேலையை செய்யும் ரோபோக்கள் போனறவர்களே .

பரலோகம் செல்லும் வரை சிவன் கடவுளை சதா தியாநிக்கிரவராகவே பூமியில் இருந்தார் . அவர் தமது குருவாக கடவுளால் சகலமும் யார் மூலமாக யாருக்குள் படைக்கப்பட்டிருக்கிறதோ அந்த பரமாத்மா – நாராயணனை மாயோன் என்று தியானிக்கிரவராக இருந்தார் 

மனித குலம் உய்வடையும் வழியை உபதேசிக்கும்படி பார்வதியால் வேண்டுதல் செய்யப்பட்டபோது சிவன் குருகீதை என்ற உபதேசத்தை முதன்முதலாக பார்வதிக்கு வழங்கினார் .

அதில் அவர் தமது குருவாக நாராயணனை துதிக்கிறார்



குரு கீதை 2 : 5 . தூய (வெண்மையான) ஆடையுடுத்தவரும் ; தூய வடிவுடையவரும் புஷ்பமும் முத்துமாலையும் அணிந்தவரும் ; மகிழ்சி ததும்பும் இரு விழிகளுடன் இடது மடியில் லக்ஷ்மியை ஏந்தியவரும் ; பரிபூர்ண கிருபைக்கு உறைவிடமும் ஆன குருவை தியானித்து வரவேண்டும் !!




கிருத யுகம் சிவனின் நேரடி கண்காணிப்பில் இருந்த போது தீமைகள் பெருகாதபடி அவர் களைஎடுத்துக்கொண்டும் அசுரர்களை அழித்துக்கொண்டும் இருந்தார் 


சிவன் பரமேறியபிறகு வரும் யுகங்களில் அக்கிரமம் பெருகும் போது நாராயணனே பூமிக்கு சற்குருவாக அவதரித்து வருவார் ; அந்த குருவின் உபதேசத்தின் படியாக நடந்தால் மட்டுமே மனிதன் உய்வடைய முடியும் என்பது குரு கீதையின் வெளிப்பாடாகும்

வருகிறவர் நாராயணன் – தேவன் என்ற நிலையிலிருந்து மனிதனாக பூமிக்கு அவதரித்து வரும்போது அவர் சிவனின் மகன் . நாராயணன் ஆனாலும் சரீரத்தில் வரும்போது சிவபாலன் . இவ்வாறு மறுவி வருவதால் அவன் பெயர் முருகன் . முருகு என்றால் மறுவி வருவது என்று அர்த்தம்




2 . பரப்பிரம்மமே குருவாக வெளிப்படும் அவதார புருஷனை உணர்ந்து கொள்வாயாக ! பரப்பிரம்மமே குருவாக வெளிப்படும் அவதார புருஷனைப்பற்றியே பேசுவாயாக !பரப்பிரம்மமே குருவாக வெளிப்படும் அவதார புருஷனையே சேவிப்பாயாக ! பரப்பிரம்மமே குருவாக வெளிப்படும் அவதார புருஷனையே நமஸ்கரிப்பாயாக !!

3 . பிரம்மானந்தத்தையும் பரம சுகத்தையும் அடைய வழிகாட்டியும் ; ஞானமே வடிவானவரும் ; மயக்கும் இருமைகளின் ஆளுமைக்குள்ளாகாதவரும் ; ஆகாயம் போன்ற பரிசுத்தரும் ; ````தத்- த்வ – மஸி என்ற இலக்கை காட்டிக்கொடுக்கிரவரும் ; தனித்தவரும் ; அழிவற்றவரும் ; நிர்க்குணமானவரும் ; கலங்கமற்றவரும் ; எல்லோருடைய ஆத்மாவுக்கும் சாட்சியானவரும் ; கற்பனைகளுக்கெட்டாதவரும் ; ஜட இயல்பாகிய முக்குணங்களை கடந்தவரும் குருவிற்கெல்லாம் குருவாகியவரும் ஆன சற்குருவையே நமஸ்கரிக்கிறேன் !! 


இந்த முருகன் ஞானம் என்ற வேலை வைத்திருப்பவன் . அசுரர்களின் எத்தகைய மாயங்களையும் அவர்கள் உருவாக்குகிற மாயமலைகளான கிரவ்ஜம் என்ற மாய்மால கூடுகளை.உடைத்தெறிந்து மனிதர்களை கட்டுகளிலிருந்து விடுதலை ஆக்குகிறவர் . மனித ஆத்மாக்களை விதவிதமான மாயைகளால் அசுரர்கள் கட்டி வைத்து பல பிறவிகள் முன்னேற விடாமல் செய்து விடுவார்கள் . அல்லாமலும் இந்த மாயக்கட்டுகளால் புதிய பாவங்கள் பலவும் செய்து ஆத்மா நெருக்கடிக்குள்ளாகும் .

முருகனோ அந்த கட்டுகளை அறுப்பதும் அல்லாமல் அந்த பாவங்களுக்கு பிராயச்சித்தமும் அருளி மனிதனை உயர்த்தி விடுபவன் . சேந்தன் என்றால் உயர்த்தி விடுபவன் . கந்தன் என்றால் செய்த பாவமாகிய கடனை கந்து வட்டி போல வட்டியையும் அசலையும் சேர்த்து அடைத்து அதைக்கடறும் வழியை காட்டுபவன் . அதனால் அவன் கந்தன் . அவன் குற்றம் குறைகளோடு வாழும் வள்ளிக்குரத்திகளான மனிதர்களை நேசித்து தேடி வந்து ஆட்கொண்டு அவர்களை தூய்மைப்படுத்தி தேவானையாக மாற்றுவான். பாவங்களை பரிகரிக்கும் வழியை காட்டுவான் .


கிருத யுகத்தில் வரப்போகிற இந்த முருகனை சேயோன் என்றும் அவன் பரலோகத்தில் யாரோ அந்த நாராயணனை மாயோன் என்றும் குருவாக வைத்து கடவுளை வழிபடும்முறையை சிவனே உருவாக்கியிருந்தார் . தொல்காப்பியம் என்ற சங்க இலக்கிய நூலில் மாயோன் சேயோன் வழிபாடு மட்டுமே இருந்தது என்ற குறிப்பை தருகிறது . அதிமனிதர்கள் தூயநெறியில் – அதாவது இசுலாத்தில் இருந்தார்கள் என்றொரு குறிப்பு குர்ஆனில் வருகிறது 


அந்த ஆதி மனிதர்கள் கிருத யுக தமிழர்கள் என்பதும் அவர்கள் மாயோனையும் சேயோனையும் குருவாக வைத்து அறியப்படாத இறைவனை வழிபட்டார்கள் என்பதுவுமே ஆதி இந்து நெறியாகும் .




கிருத யுகம் ஜலப்பிரலயத்தில் குமரிக்கண்டம் கடலில் மூழ்கியபிறகு திரேதா யுகத்தில் ராமரும் ; துவாபார யுகத்தில் கிரிஷ்ணரும் கலியுகத்தில் இயேசுவும் முருகனாக பூமிக்கு வந்தார்கள் . அவர்களின் காலத்தில் அவர்களை ஏற்றுக்கொண்ட பல மனித ஆத்மாக்கள் பரலோக பாக்கியம் பெற்றார்கள் .
இந்த முருகனை மனிதர்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காகவே பங்குனி உத்திர நன்நாளில் அவனை வீதி உலா வரச்செய்து முருகனுக்கு அரோகரா என பலர் காதுபட கோஷம் போட்டார்கள்



முருகன் பரலோகில் நாராயணன் அதாவது ஹரி . ஆனால் பூமியில் சரீரத்தில் வருவதால் அவன் சிவனுக்கு மகன் . அதாவது ஹரன் . அதனால்தான் ஹரிஹரா ஹரிஹரா என்று கோஷம் போட்டது நாட்பட அரோகரா என்றாகிவிட்டது


திருப்பதியில் உள்ள சிலை முருகனா பெருமாளா என்று குழப்பமாக இருந்தது . அதை ராமானுஜர்தான் பெருமாள் என்று நிலைப்படுத்தினார் . ஆனாலும் வியாழக்கிழமை மட்டும் அவர் அலங்காரம் ஏதுவுமின்றி முருகனாகவே உள்ளார் . இதில் குழம்ப ஏதுமில்லை. பெருமாள்தான் பூமிக்கு வரும்போது முருகன் . மாலோன் மருவி பூமிக்கு அவதாரமாக வருவதால் முருகனுக்கு மால் மருகன் என்றும் பெயர் . மால் மருகன் அதாவது மால் மருவி வந்தால் முருகன் . ஆனால் உலக மனிதர்கள் மாலோன் வேறு ஆள் ; அவருக்கு மருமகன் முருகன் வேறு ஆள் என்று கற்பனை செய்து கொண்டார்கள் .


முருகனால் ஞானம் வழங்கப்பட்டு அருள்நிலையில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் பாடல்கள் முழுவதும் முருகா என்று ஆரம்பித்து பெருமாளே பெருமாளே என்றுதான் முடியும் .


இந்த பங்குனி உத்திர நன்னாளில் இந்த முருகன் யாரென்று அறிந்து அவனை நமது குருவாக – நம் வாழ்வின் கூரையாக – உத்திரமாக நாம் வரிந்து கொள்ளவேண்டும் .அவனால் அன்றி ஞானம் அடையமுடியாது . பாவப்பரிகாரமும் பெற்றுக்கொள்ள முடியாது


கந்தர் அலங்காரத்தில் இரண்டு பாடல்களை பித்துக்குழி முருகதாஸ் அவர்கள் பக்தியும் உணர்வும் பொங்க பாடியுள்ளார்

ஆதிதமிழர்கள் உய்வடைய அவர்கள் முருகனை எப்படி கொண்டாடினார்கள் என்பது இப்பாடலை கேட்டால் புரியும்







கந்தர் அலங்காரம்
தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானமென்றும்
இடுங்கோ ளிருந்த படியிருங் கோளெழு பாருமுய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றந் திறக்கத் தொளைக்கவை வேல்
விடுங்கோ னருள்வந்து தானே யுமக்கு வெளிப்படுமே. ... 16



சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே. ... 72





நாராயணன் நாமத்தினாலும்  ஆதிசேஷனனின்

நாமத்தினாலும் 

நாராயணியின் நாமத்தினாலும் சிவனின் 

நாமத்தினாலும்கடவுள் 

தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் 

தமதுஅருளால் நிரப்ப வேண்டுகிறேன்


அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி 








No comments:

Post a Comment