Total Pageviews

Sunday, April 5, 2015

இயேசுவும் இரண்டு திருடர்களும்





நாராயணன் கலியுகத்தில் அதுவரை அவர் அவதாரமாக வெளிப்படாத இந்தியர் அல்லாத இன மக்களுக்காகவும் இயேசுவாக யூதர்கள் மத்தியில் அவதரித்தார் .

அந்த அவதார நோக்கம் தங்களை உயர்ந்த பண்பாடு உள்ளவர்கள் என்ற கர்வத்தில் இருந்த ஆப்ராகாமிய வாரீசுகளை சரிப்படுத்துவது என்பது மட்டுமல்ல ; உலகம் தழுவிய அனைத்து மனித இனங்களின் பாவங்களையும் பரிகரித்து பூமியில் ஒரு சமாதானத்தை ஏற்படுத்துவதும் ஒரு நோக்கம் 

குருகிய அறிவுள்ள கிறிஸ்தவ வியாபாரிகள் இயேசுவை ஏற்றுக்கொள் அவரை ஏற்றுக்கொண்டு பெயரை வெள்ளைக்கார பெயராக வைத்துக்கொண்டு தாத்தன் பூட்டன் பரம்பரையை மறந்து விட்டு நீ யாரென்றே அறியாத ஆப்ரகாம் ஈசாக்கு என் தாத்தன் என்று சொல்லிக்கொள் ; அப்போதுமட்டுமே இயேசு செய்த பாவப்பரிகாரம் உனக்கு வாய்க்கும் ; இல்லாவிட்டால் நீ செத்து உருளுவது உறுதி என்று துன்பத்தில் இருப்போரிடம் சொல்கிறார்களே ; அப்படியல்ல அவரை யாரென்றே தெரியாத சகலருக்கும் அவர் பாவப்பரிகாரம் செய்து விடுதலை ஆக்கியது உண்மையே .

கலியுகத்தின் ஆரம்ப நாட்களில் உலகம் பல நாடுகளாக – ஏன் இந்தியா கூட பல நாடுகளாக இருந்ததும் ஒவ்வொரு நாட்டினரும் திடீரென அடுத்த ஊரை தாக்கி அங்கிருக்கும் ஆண்களை கொன்றுவிட்டு பெண்களை குழந்தைகளை அடிமைகளாகவும் ; உடமைகளை கால்நடைகளை கொள்ளையடிப்பது சர்வ சாதாரணமான ஒன்றாகத்தான் இருந்தது . அதனால்தான் எப்போது யார் கொள்வான் என்று தெரியாமலும் ஈவு இரக்கம் இல்லாதவர்களாகத்தான் வெளிநாடுகள் இருந்தன

இப்படிப்பட்ட நாடுகளில் சமூக ஒழுங்கு நியதி சீர்திருத்தம் மனித நேயம் என்பது இயேசுவின் பாவப்பரிகாரத்தின் மூலமாக உண்டாக்கப்பட்ட ஆன்ம சீர்திருத்தம் என்பது நிதர்சனம் . ஐ.நா சபை எவ்வளவோ நிம்மதியை உலகில் கொண்டுவந்திருக்கிறது

இன்று அவ்வப்போது கொந்தளிக்கும் போர்கள் ; இனக்கொடுமைகள் ; தீவிரவாதங்கள் என்று இருந்தாலும் ஒப்பு நோக்கில் முந்தய காலத்தை விட மனிதர்கள் மனிதர்களுக்கு செய்யும் கொடுமைகள் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும் . இது இயேசுவின் பாவப்பரிகாரத்தால் அவரை அறியாத சகல மக்களுக்கும் உண்டாக்கப்பட்டது

எபேசியர் 2

1.   அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.

2.
அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.

3.
அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்டியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.

4.
தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,

5.
அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.

இவ்வாக்கு நிச்சயமாக கிறிஸ்தவர்களாக மதம் மாறாமலேயே அனைத்து மனித குலத்திற்கும் கடவுளால் இயேசுவின் மூலமாக உண்டாக்கப்பட்டது

ராமர் வரும் போது பூமி பலதார ; பல கணவர் திருமண உறவுக்குள் இருந்தது . மேலை நாடுகளில் எப்படி திருமண குடும்ப உறவு அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ளப்படாத நிலை இன்றளவும் இருக்கிறதோ அப்படித்தான் இந்தியாவிலும் இருந்தது . அதை ஒருவனுக்கு ஒருத்தி என்ற நியதிக்கு ராமரே கொண்டுவந்தார் . இதற்கு விலை அவர் சில ஆண்டுகள் தவிர மனைவியை பிரிந்தே வாழ்ந்தார்

கிரிஷ்ணர் வாழ்விலும் அவர் செலுத்திய விலை கொஞ்ச நஞ்சமல்ல ; காந்தாரியின் சாபத்தை நிறைவு செய்ய அவரது பிள்ளைகள் முதலான அனைத்து மனிதர்களும் அவரது துவாரகையும் கடலில் அழிய அவரே இடம் கொடுத்தார் . ராமராக இருந்த போது சூழ்நிலையால் வாலியை கொன்றதற்கு பரிகாரமாக இப்பிறவியில் அதே வாலி தவறாக எய்த அம்பை ஏற்றுக்கொண்டு மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார் . அதை வாலிக்கும் தெரியப்படுத்தினார்

சகலமும் கடவுளால் யார் மூலமாக படைக்கப்பட்டுள்ளதோ அந்த பரமாத்மா – கடவுளின் வாக்கு ஆகிய நாராயணன் பூமியில் ஒவ்வொரு யுகத்திலும் அவதாரமாக வந்து பூமியை சீர் படுத்தினார்

நாராயணனே திரேதா யுகத்தில் ராமராகவும் துவாபார யுகத்தில் கிரிஷ்ணராகவும் வந்தார் . கலியுகத்தில் இயேசுவாகவும் வந்தார் .

கலியுகம் என்பது சதுர் யுகத்தில் இறுதி யுகம் . வரப்போகிற சத்திய யுகத்தில் கல்கியாக இவரே வந்து நல்லாட்சி செய்து மனித ஆத்மாக்கள் பெருந்திரளாக பரலோகத்தில் நுழையும் தகுதி அடைய செய்யப்போகிறார்

அதற்கு பல ஆத்மாக்கள் தகுதி அடைய – அல்லது அசுரர்களின் தூண்டுதளினால் பல பிறவிகளாக பல கொடுமைகளை செய்த ஆத்மாக்கள் அந்த பாவங்களிலிருந்து விடுபட ஒரு பெரிய யாகம் செய்ய வேண்டி இருந்தது . அந்த யாகமே நாராயணன் மனிதனாக – சிவபாலனாக – மனிதகுமாரானாக – இயேசுவாக வந்து சிலுவைப்பலி செய்தது

அந்தக்காலகட்டங்களில் உலகம் முழுவதிலும் கழுவேற்றும் பழக்கம் – இந்தியாவிலும் தமிழகத்திலும் கூட இருந்தது . மிகவும் கொடியவர்களை கழுவேற்றுவது என்பது நடைமுறை

கலாத்தியர் 3:13 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.

உலகம் முழுவதிலும் பல பிறவிகளாக மனித இனம் செய்த கொடுமைகளை அந்த மனிதன் யாருக்குள் சிருஸ்டிக்கப்பட்டானோ அந்த பரமாத்மா மட்டுமே பாவப்பரிகாரம் செய்ய முடியும் .

அனைத்து மனிதர்களும் ஜீவாத்மாக்கள் என்றால் அந்த ஜீவாத்மாக்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்ட பரமாத்மாவுக்கும் அந்த பாவங்களில் பங்குண்டு

ராமராக இருந்த போது வாலியை அம்பெய்து கொன்ற பாவத்திற்கு கிருஷ்ண அவதாரத்தில் அதே வாலியின் அம்பை அவர் ஏற்றுக்கொண்டார் என்றால் அந்த பரமாத்மா அனைத்து ஜீவாத்மாக்களின் பாவத்திற்கும் விலை செழுத்த வேண்டாமா ? செழுத்தினார் . நாம்தான் மதக்கண்ணாடி என்ற மாயையால் அவர்தான் இயேசு என்பதை உணராமல் இருக்கிறோம் ; அல்லது கிறிஸ்தவர்கள் என்கிறவர்கள் செய்கிற மத மாய்மாலத்தால் இயேசுவையும் சேர்த்து பகைக்கிரவர்களாக இருக்கிறோம் . நிச்சயமாக கிறிஸ்தவர்கள் இயேசுவிடம் குத்தகை எழுதி வாங்கவில்லை என்பதை மட்டும் உறுதியாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்

இயேசு யூதர் – மத்திய ஆசிய கண்டத்தை சேர்ந்தவர் ; ஆனால் ஐரோப்பியர்கள் இயேசுவை ஐரோப்பியர் போல சித்தரித்து குத்தகைதாரர்களாக நடந்து கொண்டு இனவழிப்பு அல்லது வெள்ளைக்காரமயமாக்கல் என்ற கலாச்சார சீர்கேட்டை செய்து வருகிறார்கள் .

காந்தியின் மூலமாக பிரபலப்பட்ட  சமரச வேதம் – அதன் முழு வீச்சை அடைந்து உலக மதங்கள் அனைத்தையும் தனக்குள் அடக்குவது மட்டுமே இந்த கலாச்சார சீகேட்டுக்கு மருந்து ; மாறாக இந்து மத வெறியைக்கொண்டு பிற மதங்களை பழிப்பது தீர்வாகாது  

இயேசுவின் பாவப்பரிகாரத்தை கிரிஸ்தவர்களாகமலேயே மிக உச்சமாக நமது ஆத்மாவிற்கு பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள ஒவ்வொரு மனிதனாலும் முடியும்

அதற்கு சிலுவைப்பலி நடந்த போது நடந்த நிகழ்வுகள் அங்கு பேசப்பட்ட வார்த்தைகளில் படிப்பினை உள்ளது


லூக்கா 23 


31. பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார்.

32.
குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரும் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.

33.
கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்.

34.
அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.

35.
ஜனங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடனே கூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால் தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள்.

36.
போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து:

37.
நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம்பண்னினார்கள்.

38. 
இவன் யூதருடைய ராஜா என்று, கிரேக்கு லத்தீன் எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.

39.
அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.

40.
மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?

41.
நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம் நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,

42.
இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.

43.
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

44.
அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று.

45.
சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது.

46.
இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.

47.
நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.


மனிதர்கள் அனைவரும் மரணம் என்ற தண்டனையை பல பிறவிகளாக அனுபவித்து வருகிறோம் ; மிகுந்த செல்வந்தன் கூட யார் சந்தோசமாக மரணத்தை எதிர்கொள்கிறார்கள் . குடும்பத்தில் அந்தக்குறை இந்த குறை ; இதை சரிப்படுத்தி விட்டு செத்தால் பரவாயில்லை என்றுதான் காலத்தை நீடிக்க ஆசைப்படுகிறார்கள் ; அந்தளவில் மரணம் ஒரு குறை ; தண்டனை அல்லது விரும்பத்தகாத விசயமாக உள்ளது . மரண பயத்தை விட கொடுமையானது எதுவுமில்லை

மரணமில்லா பெருவாழ்வு பெற்று நித்திய ஜீவன் அடைவதே மனிதனுக்கு உள்ள முடிவான இலக்காகவும் இருப்பதும் இந்த மரணம் அவனது நேர் எதிரியாக இருக்க காரணமாக உள்ளது

நித்திய ஜீவன் இல்லாத மனிதன்  பட்டமரம் . அவனது ஜீவாத்மா பல முறை மரணத்தை ருசி பார்த்து பல பிறவி எடுத்து உலன்று கொண்டே இருக்கிறது . தனது ஆத்மா அழிவற்றது ; சரீரம் அழிந்து பிறவி மாறுமே தவிர தான் அழிவற்றவன் ; ஆத்மா என்பது கூட உணராத இயல்பில் இப்பிறவியின் பிரச்சினைகளை சிந்தித்து நொந்து கண்ணீர் வடிக்கிறது

முதுமை வந்து நோய் வந்த பின்னும் பிள்ளைகளை முன்னேற்றும் முன்னாள் பொய் விடுவோமோ என்ற பயம் வந்து விடுகிறது

புதிய பணக்காரனாக சில வருடங்களில் சம்பாதித்த நபர் கூட போதும் என்று பண விவகாரங்களில் இருப்பதில்லை . ஏனென்றால் பிள்ளைகள் விவரமில்லாமல் இருந்துவிட்டால் கூட பல பிறவிக்கு அவர்கள் உட்கார்ந்து கொண்டு சாப்பிட சொத்து சேர்க்கவேண்டுமாம் .

இந்த லவ்கீக மனிதன் இப்படியென்றால் ஆன்ம வாழ்வுக்குள் வந்தவர்களையும் பல மாயைகள் ; விட வேண்டும் என்று அறிவு சொன்னாலும் உணர்வு வயப்பட்டு விட முடியாமல் திரும்ப திரும்ப பலகீனத்தில் விழுவது . மெல்லவும் முடியாமல் கொள்ளவும் முடியாமல் இடையில் போராடிக்கொண்டிருப்பது ; என்றைக்கு இவ்விசயத்தில் தேரிவிட்டோம் ; ஆத்மா இவ்விசயத்தில் தூய்மை அடைந்து விட்டது என உறுதிப்படுவது

இப்படியே உலக வாழ்வு மன உலைச்சளுக்கு உரியதாகவே இருக்கிறது . பட்ட மரமான மனித ஆத்மாவுக்கு எதுவெல்லாம் இந்த உலகத்தில் நேருமோ அவைகள் அனைத்தையும் பச்சை மரமான அந்த பரமாத்மாவும் ஏற்றுக்கொண்டது .

ஜீவாத்மாக்கள் சுய தகுதி அடைந்து முழுமையடையும் என்பது உலகில் நடவாத காரியம் . எவ்வளவுதான் பார்த்து பார்த்து நடந்தாலும் ; நமது வாழ்வு எல்லோருக்கும் நன்மை பயப்பதாக இருக்கவே இருக்காது ; யாரோ சிலருக்கு அது கெடுதல் என்பதாகத்தான் வந்து சேரும் . எந்த நிலையிலும் நாம் பழிபாவத்திற்கு ; வசைக்கு உரியவர்களாகத்தான் இருப்போம்

கடவுளின் அடியவர்களாக – வாயாக இருந்து அவர்களின் காலத்தில் உலகம் உய்ய காரணமாக இருந்த மகான்கள் ; இறைமனிதர்கள் சென்று போன பிறகு அவர்களின் உபதேசத்திற்கு புதிய அர்த்தம் சீடர்கள் கற்பித்து மதங்களின் பேரால் எத்தனை கொடுமைகள் செய்கிறார்கள் . அந்தக்கொடுமையால் மாற்று மதக்காரர்கள் அந்த இறைமனிதர்களையும் வசை பாடுவது ; அவர்களின் வாழ்வை கொச்சைப்படுத்தி பேசுவதை தவிர்க்க முடிகிறதா ?

கடவுள் ஒருவரைத்தவிர நீதிபரர் என்று ஒருவர் இருக்கவே முடியாது என்று இயேசுவே கூறியுள்ளார் . ராமரும் கிரிஷ்ணரும் பல பழிபாவத்திற்கு ஆட்பட்டுத்தான் இருந்தார்கள்

மத்தேயு 19:17 அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே;

அல்லாமலும் ஒரு பெரிய உண்மை ; எந்த மனிதனும் தன்னை ஒருபோதும் முழுமையடைந்து விட்டேன் என கூறவே முடியாது . ஒரு உண்மையை கண்டறிந்தாலும் அதிலிருந்து விடுபட்டோம் என சொல்லமுடியாது . பல பிறவிகளாக அது தொடர்பாக நாம் அனுபவித்த பதிவுகள் அவ்வளவு எளிதாக ஆத்மாவை விட்டு சுத்தமாகாது

நாம் உலகில் கேள்விப்படுகிற படிக்கிற காண்கிற அக்கிரமங்கள் அனைத்தும் எப்பிறவியிலாவது நாமும் செய்த விவகாரமாகத்தான் இருக்கும் . அது ஆத்மா உள்ளே போய் மெதுவாக வலுவாகி சந்தர்ப்ப சூழ்நிலையில் நம்மை மடக்கி வீழ்த்தி விடும் . நாம் கேள்விப்படுகிற தீமைகள் அனைத்திற்கும் ஐயோ நானும் இப்படி செய்தேனா என கடவுளிடம் மனஸ்தாபப்பட்டு பிரார்த்தனை செய்வது ஒன்றுதான் பரிகாரமே தவிர சீ இப்படியெல்லாம் எதுக்குத்தான் அக்கிரமம் செய்கிறார்களோ என அடுத்தவரைப்பற்றி எண்ணினால் அதே போல ஒன்றை நானும் செய்யும்படியாக சிக்கல்கள் சூழ்நிலை உண்டாகி போராடி மாயும்படியாக பல முறை அனுபவத்தை இறைவன் உண்டாக்கியிருக்கிறார்

நாம் அறிந்து சமீபத்தில் முழுமையடைந்த ஒருவர் வள்ளலார் . அவர் கூட நான் அந்த பாவம் செய்தேனா இப்படி நடந்தேனா என கடவுளிடம் புலம்புகிற பாடல்கள் உண்டு . அது அவர் கற்பனையில் எழுதியது இல்லை . உலகப்பவங்கள் எவைபற்றியும் நாம் கேள்விப்பாடாலே அது ஒரு பிறவியில் நாம் செய்தது என அர்த்தம் . நாம் செய்யாத எதுவும் நம் கவணத்தை ஈர்க்காது

அல்லாமலும் ஒன்று தவறு என ஒதுக்கி வைப்பதும் விரதம் இருப்பதும் ஆன்ம வாழ்வின் மிக ஆரம்ப நிலையே . அது ஆத்மாவுக்கு ஒரு பயிற்சி என்பதற்கு அதிகமாக பலன் விளையாது

ஓரளவு ஒரு விசயத்தில் தேறிய பிறகு அந்தத்தவறு செய்பவர்களுடன் இருந்து கொண்டே தவறை மட்டும் செய்யாமல் இருக்கும் பக்குவத்தை பெரும்படியாக இறைவன் நடத்துவார்

கீதையில் சத்வ குணமும் இறுதியில் விட வேண்டிய ஒன்று என குறிப்பிடப்பட்டிருக்கும் . நன்மை என்ற குணமும் கடந்து நன்மை தீமை களுக்கு நடுவில் எவ்வித பாதிப்பும் வித்தியாசமும் இல்லாமல் இருக்கும் சாத்வீகம் என்றொரு நிலை வந்தடைந்தாக வேண்டும் . அப்போது உலகின் சகல பாவங்களுடனும் அவர்களை குற்றப்படுத்தாமலும் அதை செய்யாமலும் நல்லிணக்கமாக இருக்கும் ஒரு நிலை வரும் . இது நாமும் இப்படிப்பட்ட பாவங்களை உணர்வு வரும்வரை செய்தவர்கள்தான் ; மனித இயல்பு பலகீனமுள்ளதுதான் ; இறைவனை சரணடைந்து அவர் காத்தாலொழிய பாவங்களை வெல்லுவது மனிதனால் கூடாத காரியம் என்றொரு பொறுமை ; நாம்மை தீமைகளின் மத்தியிலேயே காத்துக்கொள்ளும் மன சமநிலை – இப்பயிற்சியே நன்மை தீமைகளால் பாதிப்படையாத சற்குண நிலை .

மத்தேயு 5

45. இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.

46.
உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?

47.
உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச்செய்கிறார்களல்லவா?

48.
ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.


நம்மைச்சுற்றியுள்ளோரின் குற்றம் குறைகளை நியாயம் தீர்க்காது அதனை நிரவி கெடுதல் நேராது செய்ய கூடுதலாக நாம் உழைக்குபடியாக இறைவன் ஏவுவார் . இதில் எரிச்சலற்ற தன்மையை நாம் கற்றாக வேண்டும் .

நாம் எப்போதும் பாவிகளின் தோழனாக வாழ்ந்தால் ஒழிய பாவங்களின் பாதிப்பிலிருந்து விடுபடும் பக்குவம் ஆத்மாவிற்கு வராது

பூரண சற்குணராக இறைவன் இருப்பதுபோல நீங்களும் இருங்கள் என்கிற வார்த்தைக்கு அதுதான் அர்த்தம்

இயேசுவும் அப்படித்தான் இருந்தார் . அவரை எப்போதும் பாவிகள் சுற்றி சூழ்ந்திருந்தார்கள் . அவர் கொல்லப்படும் தருவாயிலும் பாவிகளோடேயே சிலுவையில் அறையப்பட்டார் . அவர் எந்த மனித குலத்திற்காக பாவப்பரிகாரம் செய்தாரோ அந்த மனிதர்களால் இகழவும் பட்டார் ஆனால் அவரோ சதா அவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசினார் . தாங்கள் செய்வது இன்னதென்று அறியாத இவர்களை மன்னியும் என்று வேண்டினார் . பாவ பலகீனங்களின் மீது சமத்துவ நிலை . அதுவே பூரண சற்குண நிலை .

இயேசுவின் நிலை இப்படியென்றால் கூட இரண்டு திருடர்கள் அவர்களின் குற்றங்களின் நிமித்தமாக மரண தண்டனை அடைந்து அங்கே சிலுவையில் அறையப்படிருந்தார்கள்

அந்த இவரைப்போலவே நமது நிலை உள்ளது . அது நாம் உட்பட மனித சமூகத்தின் அடையாளம் . சிலுவையில் அறையப்பட்டும் ; இன்னும் கொஞ்ச நேரத்தில் மரணம் உறுதி செய்யப்பட்டும் இடப்புறம் இருந்த கள்வன் இயேசுவை நிந்தனை செய்வதில் கொஞ்சம் திருப்தி அடைந்தான் .

நமது வாழ்வில் முற்பிறவி பாவங்களின் விளைவாக பல இடறல்கள் தடைகள் கஸ்ட்டங்கள் வந்தாலும் ; நாமோ மற்றவரின் குறைகளை சதா பேசி எல்லோரும் இப்படித்தான் நானும் இப்படித்தான் என நமது தவறுகளுக்கு நியாயம் கற்பித்துக்கொள்கிறோம் . குறுக்கு குண்டாமாத்து என துணிகரமாக தவறு செய்கிறவர்கள் பலர் எப்போதுபார்த்தாலும் அடுத்தவரை விமர்சித்து தங்களை சுய நீதி செய்து கொள்கிறார்கள் .இந்த சுயம் நாம் செய்கிற நல்ல காரியங்களுக்கு பெருமை பாராட்டுவது ; நமது குரு பெரிய ஆள் எனது மார்க்கம் உயர்ந்தது என சுயமாக பரிணமிக்கிறது இந்த சுயம் இருக்கும்வரை நமக்கு இறைவன் புறத்திலிருந்து எந்த வளர்ச்சியும் வரப்போவதில்லை . நாம் மென்மேலும் தீமைக்கு ஆட்பட்டு அதலபாதாளத்தில் அடுத்த பிறவியில் விழுவோம் . இப்பிறவியின் வாரிசுகளும் தீமைக்கு ஆளாவார்கள் . 


மாற்றாக நாம் வலப்பக்கத்தில் அறையப்பட்ட கள்வனைப்போல மன நிலையை அடைந்தால் நாம் எவ்வளவு பாவங்கள் செய்தவர்களாக இருந்தாலும் அவைகள் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு மனத்தூய்மை அடைந்து முழுமையடைவோம் .மரணமில்லா பெருவாழ்வு – ஒளிசரீரம் பெற்று பரலோகம் செல்வோம் என்பது சற்குரு இயேசுவால் வாக்களிக்கப்பட்டுள்ளது

அந்த நிலை மனத்தாழ்மை . நாமோ நமது பல பிறவி பாவங்களால் ஆக்கினைக்கு உட்படுகிறோம் ; அல்லல்படுகிறோம் ; ஜீவாத்மாக்களின் அக்கிரமங்களுக்காக பரமாத்மாவான நாராயணனும் இயேசுவாக வந்து பாவப்பரிகாரம் – சிலுவையிலே மரணத்தை ருசி பார்த்தார் என்பதை நம்புவது ; அந்த மகத்தான அன்பினால் நாம் தன்னை உணர்ந்து சீர்பட முயற்சிப்பதோடு நாம் உணர்ந்து திருந்தினால் நம்மை மண்ணிக்க கடவுள் சித்தமாயுள்ளார் என்பதில் உறுதிப்படுவது .

இடப்புற திருடன் தன்னை உணரத்தழைப்படாதவனாக சுய நீதி சுய சாக்கு சொல்ல்லிக்கொண்டிருந்தான் ; அவனுக்கு எந்த வாக்கும் வரவில்லை ; ஆனால் தண்டனைக்கு உள்ளாகுமளவு தவறு செய்தும் மரணத்தருவாயில் கூட வலப்புற கள்வன் தன்னை உணரத்தொடங்கினான் ; மட்டுப்பட்டான் ; தாழ்மையடைந்தான் ; என்னையும் ரட்சியும் என்றான் ; அவனுக்கு வாக்கு வந்து சேர்ந்தது

நாம் இறைவனிடம் தாழ்மையடைய கற்றுக்கொண்டால்போதும் வளர்ச்சி நமக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது . அதற்கு பக்தியோடு நெற்றிப்பொட்டில் கபால ஸ்தலத்தில் உயிரில் ஒன்றி தியானித்து ஆத்ம சுத்தியும் ஆத்ம பலமும் பெருக்கவேண்டும்

இந்த வாக்கு பரமாத்மாவான நாராயணனால் இறைவனிடம் நமக்கு மத்தியஸ்தம் செய்யப்பட்டு விட்டது

இயேசு மரணத்தை ருசி பார்த்து மீண்டும் உயிர்த்தெழுந்ததால் மனித குலத்தின் எத்தகைய பாவங்களும் அப்பாவத்தை உணர்ந்து திருந்தினாலே போதும் இறைவனால் மன்னிக்கபட ஏதுவாயிற்று . இல்லாவிட்டால் உணர்ந்து திருந்தினாலும் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தமாக பல பிறவி ஒவ்வொரு மனிதனும் உலன்றாக வேண்டும் .

ஆனால் வரப்போகிற சத்திய யுகத்தில் நாம் நுழைய தகுதியாக்க மனம் திரும்புதல் ; தன்னை உணர்தல் ; தாழ்மையடைதல் ; இறைவனை அதி தேவர்களான நால்வர் மூலமாக சரணடைதல் என்பதை செய்தாலே போதுமானது என்பது இயேசுவின் பாவப்பரிகாரத்தால் அனைத்து மனித இனங்களுக்கும் உறுதி செய்யப்பட்டுவிட்டது ; இங்கு மதம் மாறு பெயரை மாற்று என்று எங்குமே சொல்லப்படவில்லை ; அதை பின்னாளில்
கிறிஸ்தவர்கள் இட்டு கட்டிக்கொண்டார்கள் . மேலும் முன்பு ராமராகவும் கிரிஷ்ணராகவும் வந்தவர்தான் இயேசுவாகவும் வந்தார் என்பதை அறிய இயலாமலும் உள்ளனர்

ஆனால் நாமோ நாராயணன் நாமத்திலே இயேசுவும் அடங்கி விட்டார் என்பதை அறிந்திருந்தாலே போதுமானது . வரப்போகிற கல்கியாக அவரை சந்திப்போம் .


நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி 







2 comments:

  1. இயேசுவும் இரண்டு திருடர்களும்

    ReplyDelete
  2. ஐயா உங்களை தொடர்பு எண் வேண்டும், My number 8754514403

    ReplyDelete