Total Pageviews

Sunday, April 5, 2015

நகரத்தார் கோவில்கள் - ஷேத்ராடனம் (3/4/2015)




3/4/2015 பங்குனி உத்திரம் முன்னிட்டு நகரத்தார் ஸ்தலங்களில் ஷேத்ராடனம் செய்தோம்

முதலில் செவலூர் பூமிநாதேஸ்வரர் மற்றும் ஆரணவல்லி தாயாரை

தரிசித்தோம்

நிலம் வீடு கட்டுதல் போன்றவைகளுக்கு வாஸ்து நாட்களனறு இங்கு பிரார்த்தித்தால் மிகுந்த பலன் கிடைக்கும் . இதுவும் மிக புரதான கோவில்களில் ஒன்று பொன்னமராவதிக்கு அருகில் உள்ளது

செவலூர் பூமிநாதேஸ்வரர் திருக்கோவில்















ஒவ்வொரு வருடத்திலும் 8 வாஸ்து நாட்கள் வருகின்றன

தை 12

மாசி 22

சித்திரை 10

வைகாசி 21

ஆடி 11

ஆவணி 06

ஐப்பசி 11

கார்த்திகை 08

அவைகளில் இங்கு வீடு கட்டுவோருக்காக பூஜைகள் நடக்கின்றன அதில்
பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டு அங்கிருந்து செங்கல் பிரசாதம்
பெற்று செல்கிறார்கள் . தடைகள் அகன்று விரைவில் வீடு கட்டும் பணி
நிறைவடையும் என்கிறார்கள் .

நிலம் விற்பனை ஆகாமல் தடை இருந்தால் நிலத்திலிருந்து கைப்பிடி
மண்ணை கொண்டு வந்து இங்கு வைத்து பிரார்த்தனை செய்தாலும்
விரைவில் விற்பனை ஆகும் என்கிறார்கள்

1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் என்பதும் இந்திய அரசின்
தொல்லியல்துறையின் பாதுகாப்பில் உள்ளது என்பது இங்குள்ள கல்வெட்டுகள் மூலமாக தெரிந்தது

இதன் அருகில் கொண்ணைநல்லூர் உள்ளது . இங்கு மாரியம்மன் மிக சாந்த
சொருபியாக உள்ளார் . மிகவும் சக்தி வாய்ந்த ஸ்தலமாக உள்ளது . ஆண்
பெண் பேதம் தொடர்பாக சமூகத்தில் அதிகரித்து வரும் பாவங்களை
வக்கிரங்களை கட்டுக்குகொண்டு வரும் படியாக வேண்டிக்கொண்டேன்

வேந்தன்பட்டி









அடுத்து வேந்தன்பட்டி சென்றோம் . இங்குள்ள சொக்கநாதர் மீனாட்சியம்மன்
சந்நிதி பார்க்க பார்க்க அவ்வளவு அழகாக உள்ளது அம்மனை மிக அழகாக
அலங்காரம் செய்து நெற்றியில் நாமம் சார்த்தி கிரீடமும் அணிவித்து அவள்
நாராயணி என்பதை காட்டியிருந்தார்கள்

இங்குள்ள நந்திக்கு வெண்ணை பூசி வைத்துள்ளார்கள் . அதில் எப்போதும் ஈ
எறும்பு மொய்க்காதாம்

பிரான்மலை





















அடுத்து பிரான்மலை வந்தோம் . இதன் பேர் கொடுங்குன்றம் . தென்
கயிலாயம் என்றும் சொல்கிறார்கள் . குன்றில் இருக்கும் கோவில்களில்
ஆற்றல் அதிகமாக இருக்கும்

பாண்டி நாட்டின் 14 சிவத்தலங்களுள் இதுவும் ஒன்று

திருப்புத்தூர் யோக வைரவர் சந்நிதி














அடுத்து திருப்புத்தூர் யோக வைரவர் சந்நிதி வந்தோம் . இங்கு வால்மீகி தவம் இருந்த இடம் ; அகத்தியர் தவம் இருந்த இடம் ; அகத்திய லிங்கம் உள்ளது . கடவுளின் நான்கு வெளிப்பாடுகளான சிவன் ; நாராயணன் ; ஆதிசேஷன் ; நாராயணி ஆகியோர் இந்த ஒரே கோவிலில் அதுவும் யோக நிலையில் உள்ளனர்

பிள்ளையார் பட்டிக்கு அருகில் உள்ள வைரவர கோவில் . அது சிவன் ஒளி சரீரம் பெற்று வைரவராக - வைரம் - ஒளி மற்றும் அழிவில்லாத தன்மை - அங்கு அவர் பெயர் வளர் ஒளி நாதர்






உலகின் முதல் மனிதன் சிவன் - ஒளி சரீரம் பெற்று தேவனாக பரலோகம் போனார் என்பதே வைரவர்

அவர் அங்கு போனவுடன் அழித்தல் பணி அவருக்கு நியமிக்கப்பட்டதால் கால பைரவர் அதாவது கால கணக்கை நிர்வகிக்கிறவர் என்கிற அடிப்படையில் நாய் வாகனம் ஒன்றை போட்டு பைரவர் என்று சொல்லிவிட்டார்கள்

ஆனால் 7௦௦ ல் கோவில் கட்டிய தமிழர்கள் வைரவர் - அழிவற்ற ஒளி சரீரம் உள்ளவர் என்றே பெயர் வைத்துள்ளனர் .

வளர் ஒளி நாதர் என்பது ஆத்மாவை குறிக்கிறது எல்லோருடைய ஆத்மாவும் ஒரு நாள் ஒளி சரீரம் பெற வளர்ந்துகொண்டுள்ளது

இங்கு தல விருட்சத்தின் பெயரும் ஏறு அழிஞ்சில் மரம் . அழிவற்ற தன்மையை நோக்கி ஏறுகிற மரம்



விசேசம் என்னவென்றால் இந்த மரத்தில் இருந்து கீழே விழுகிற விதை மீண்டும் இந்த மரத்தின் கிளைகளை போய் ஒட்டிக்கொள்கிறது . அப்படியே அது இலையாக வளர்கிறது

இரணியூர் நகரத்தார் கோவில்

வைரவன்பட்டியில் இரணியூர் சிற்பக்கோவில் அருகில் என்று ஒரு விளம்பரம் வைத்திருந்தார்கள் ஆகவே அதை காணலாம் என்று சென்றால் அது வெகுதூரம் . இருப்பினும் இரணியூரில் வைரவன்பட்டி போலவே சிற்பங்களும் மிகநேர்த்தி பெரிய கோவிலும் கூட

இரண்டும் ஒரே குழுவால் கட்டப்பட்டிருக்கவேண்டும் ஆகவேதான் விளம்பரம் போலும்

பெரியகோவில் தூனுக்கு தூன் மிகநேர்த்தி

தட்சினாமுர்த்தி , இரணியனுக்கும் நரசிம்மருக்கும் யுத்தம் , மார்க்கண்டேயனை காக்க யமனை எட்டி உதைத்தது வீரபத்திரர் என அருமையாக வடித்திருக்கிறார்கள்

இந்த ஊரின் ஆன்மீக விஷயம் என்னவென்றால் இரண்யகசிபுவை நரசிம்மர் வதம் செய்ததால் உண்டான தோஷம் இங்கு சிவனோடு ஒப்புரவு ஆனா பின்பு நிவர்த்தி ஆனதாம் அதன் பிறகு நாராயணன் குபேரனாக இங்கு காட்சியளித்தார் இதன் தொடர்பாகவே இவ்வூருக்கு இரணியூர் எனப்பெயர்





























No comments:

Post a Comment