குருஷேத்திர யுத்தம் என்பது நடந்ததா ?நடக்கவில்லையா ?ஏன் நடந்தது என்பதை விட யுத்தம் தொடங்கும் முன் ஒரு மனிதனாகிய அர்ச்சுனனுக்கு உண்டான மன கலக்கம் என்பது அன்றாடம் மனிதர்களுக்கு --முக்கியமாக கடவுளை தேடி அவரை கண்டடைய முயலும் பக்தனுக்கு எதிர் வருகிற சவாலே ஆகும்! இத்தகைய சோதனைகள் --இடறல்கள் உண்டாகும் பொது அதனை எதிர்கொள்ள நமக்கு அறிவூட்டும் ஞான உபதேசமே கீதை!கீதை வாழ்க்கைக்கான உபதேசம் ;பக்தனுக்கு கடவுளை நோக்கிய பயணத்தில் அன்றாட வாழ்வை கடந்தோட அனுபவ பூர்வமான செயல்முறை பயிற்சி! உலக வாழ்க்கையில் பல படித்தரமான நிலைமையில் மனிதர்கள் படைக்க படுகிறோம்!ஒரு சக்கரத்தின் அச்சுகள் பல உருப்புகள் எப்படி ஒன்றாக இணைக்க பட்டு அது சுற்றுகிறதோ;அதுபோல உலகவாழ்க்கை செம்மையாக நடக்க பலவிதமான வேலைகள்,பொறுப்புகள்,கடமைகள் பலரால் செய்ய படவேன்ண்டியுள்ளது!ஏற்றதாழ்வுகள்,பதவிகள், பட்டங்கள்,செம்மைகள்,வறுமைகள்,முரண்பாடுகள் என கணக்கிலடங்கா பேதங்கள் இருந்தாலும் எல்லோரும் கடவுளை பொருத்து முக்கியமாணவர்களே!ஒரு சிரு துரும்பும் அவரின் கண்கானிப்பிலும் பேணுதலிலும் உள்ளன!அதுஅதற்குரிய எல்லையும் சுதந்திரமும் கொடுக்க படாமலுமில்லை!
ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.(இயேசு;மத்தேயு 10:29)
கடவுள் நம்மை ஜனிக்க செய்த நாள் முதல் நம்மோடே இருக்கிறார்;நம்மிடம் அவருக்கு ஒரு குறிப்பிட்ட பணி-திட்டமும் இருக்கிறது என்கிற உள்ளூணர்வு நமக்கு வேண்டும்!அவர் நம்மைப்பற்றிய நோக்கம் வைத்துள்ளார் என்கிற புரிதலே நமக்கு சந்தோசத்தையும் நம்பிக்கையையும் அவரிடம் உள்ளார்ந்த உறவையும் கொண்டுவந்து விடும்!உள்ளார்ந்த உறவை அணுபவிக்க தெறியாத--முடியாத நிலைமையிலேயே பக்தி செலுத்தியும் வழி விலகி போகிறார்கள் சிலர்!அது ஒரு அறியாமையே!
இப்பூமிக்குரிய வாழ்க்கை என்னும் குருஸேத்திர யுத்தத்தில் மனிதனாகிய அர்ச்சுணன் ஒரு போதும் தனித்துவிடப்படவில்லை!அவனுக்கு வழிகாட்டும் படியாக அவனருகில் இறைதூதனாகிய கிரிஸ்ணர் இருந்தார்!அன்றைய உலகில் இறைவனை நெருங்கிய நபராகிய கிரிஸ்ணர் என்பவரை அர்ச்சுணன் குருவாக ஏற்றுகொண்டிருந்தது அவனுக்கு கடவுளின் வழிகாட்டுதலை உறுதி செய்துவிட்டது!அவன் கடவுள் மீது பக்தியுள்ளவனாகவும் இறைதூதனால் நண்பன் என அழைக்கபடும் உறவுக்குள் உள்ளவனாகவும் இருக்க முடிந்தது!பக்தி உள்ளுக்குள் விளைந்து கடவுளோடு உறவாக பரிணமிக்க வேண்டும்!
எல்லா மனிதர்க்குள்ளும் கடவுளுடன் உறவை அணுபவிக்க முடியவில்லையே என்கிற இனம்காணாத துயரம் இருக்கிறது!எல்லா மனிதர்களுக்கும் ஆத்தும தாகம் ஆழ்மனதில் இருக்கும் அது தனது உயிர் பிரிந்து வந்த கடவுளை குறித்தது! இந்த பிரிவு துயர் அடையாளம் மாறி உடலை தானாக என்னி மண்ணாசை பெண்ணாசை பொண்ணாசை ஆக மாறி நிற்கிறது இதில் முழுமையும் திருப்தியுமடைய முடியாமல் முட்டி மோதி தவிக்கும்போது இனம்புரியா வேதனை வெளிப்படும் விரக்தியாகவோ வக்கிரமாகவோ மாறவும் வாய்ப்புண்டு! இந்த ஏக்கம் நமது பிதாவாகிய கடவுளைக்குறித்த தேடலாக பக்தியாக பரிணமித்தால் இறைவனோடு இடைபடுதல் உண்டாகும்!அந்த தேடலுக்கு கடவுள் தன்னை உணர்ந்த மனிதர்களை நமக்கு குருவாக அணுப்பி வைப்பார்!
யார் குரு?குருவிலும் பல படிகள் இருக்கிறதா ?சற்குரு யார் ?
யாரிடமிருந்தும் கற்றுகொள்கிற மன நிலை முதலாவது கடவுளை தேடுகிற சாதகனுக்கு வேண்டும்!ஏனென்றால் பூரண உண்மை,முற்றறிவு என்பது கடவுளின் தன்மை!முற்றறிவை நெருங்குவது என்பது குருடர்கள் யானையை தடவிய கதை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்!
குருடர்கள் உணர்ந்ததெல்லாம் தவறு என ஒதுக்க முடியுமா?மனிதர்களின் முன்னேறிய அறிவு இப்படிபட்டதே!தும்பிக்கை கயிறு போலுள்ளது என்பது `பகுதி உண்மை`!கால் உலக்கை போலுள்ளதும் `பகுதி உண்மை`!இப்படிப்பட்ட பல `பகுதி உண்மைகள்` ஆண்மீக உலகில் வலம் வருகின்றன!இவை தவறல்ல!நான் கண்டதுதான் உண்மை மற்றது தவறு என புறந்தள்ளூவதில் தவறு வருகிறது!
யானை கயிறு என்பதிலும் எவ்வளவோ மனதை மயக்கும் விளக்கங்களும் நுனுக்கங்களும் இருக்கும்!இவைகளை அறிந்துகொள்வதும் கடவுளை தேடுகிற ஒரு பாதையே!ஒரு பாதையில் கொஞ்சம் முன்னேறியவுடன் மற்ற பாதைகளில் உள்ள `பகுதிஉண்மைகளை` உள்வாங்கினால் முழுமையை நோக்கி முன்னேற முடியும்!ஆனால் தான் கண்டதுமட்டுமே உண்மை என்கிற மாயை தடுக்கிறது!அப்படியில்லாமல் மாற்று கருத்துகளை `விசாரம் செய்வது` உள்வாங்குவது கடவுளை நெருங்குகிற `யோகம்` என்கிறது கீதை!
பரமாத்துமாவை சிலர் தனக்குள்ளாக மூழ்கி தியானிப்பதாலும்;சிலர் தத்துவ விசாரம் செய்து முற்றறிவை விளையவைப்பதாலும்;இன்னும் சிலர் பலனில் பற்றுவைக்காத கர்மயோக உழைப்பினாலும் கண்டடைகிறார்கள்!--கீதை13:25
மனிதாபிமானம்,அஹம்பாவமின்மை,அஹிம்சை,சகிப்புதன்மை, எளிமை உடயவனாய் இறைதண்மை உணர்ந்த குரு ஒருவரை அண்டி சுயகட்டுப்பாடு,நிலைத்தமனம்,பரிசுத்தம் கற்று புலனிண்பங்களை விட்டவனும் ;பிறப்பு இறப்பு முதுமை வியாதி என்கிற பயத்தை கடந்து நான் என்கிற சுயத்தை அழித்தவனும் வீடு மனைவி பிள்ளைகள் செல்வம் என்கிற பந்தங்களில் தவிக்காதவனும் விருப்பு வெறுப்பு இரண்டிலும் மனசம நிலையை அடைந்தவனும் உள்ளார்ந்த பக்தியில் நிலைத்தவனும் தன்னை உணர்வதிலும் எல்லா தத்துவங்களையும் விசாரம் செய்து முற்றறிவை பெறுவதிலும் சலிப்பில்லாதவனுமாகிய இவைஅணைத்தையும் செய்கிறவனே ஞானி --இதில் ஒன்று குறைந்தாலும் அவன் அஞ்ஞானத்தில் உழல்பவனே!---கீதை 13:8
மேற்கண்ட குணாதிசயங்கள் அடையப்பெற்றவர் இறைதண்மை உணர்ந்த குரு!முழுமையடையாத ஒன்றிரண்டு கைவரப்பெற்றவரும் குருவாகிவிட முடியும்!தன்னை விட பெரிய குருடனுக்கு சிறிய குருடன் சிறப்பாகவே வழிகாட்ட முடியும்!நாமும் கற்று கொள்ளவேண்டும்!ஆனால் அந்த குருவையே பெருமை பேசிக்கொண்டு தேங்கி நின்று விடாமல் அடுத்த அடுத்த படிகளில் உள்ள குருமார்களிடம் கற்றுகொண்டே வளறவேண்டும்!இதற்கு ஜன்னலை திறந்துவைத்து பழகவேண்டும்!மாற்று கருத்துகளை உள்வாங்கவேண்டும்!ஆனால் கிணற்று தவளை மனப்பாண்மை மனிதனை வஞ்சிக்கிறது!தெறிந்த விசயத்தையே திரும்ப திரும்ப பேசகேட்டு புளகாங்கிதம் அடையும் ஒருகூட்டத்தில் திருப்தியடைந்து விடுகிறோம்!நான் பெருசு நீ சிருசு என சண்டையும் போடுகி றோம்!மனித முயற்சியால் குருவாக உயர்ந்தவர்களிடம் கற்று கொள்ளவேண்டும்!ஆனால் அவர்களை கடந்து சற்குருவை நாடி செல்லவேண்டும்!``தேங்கிய தண்ணீர் சாக்கடை ``ஆகிவிடும் !நாம் தேங்காமல் தேடவேண்டும் !
முற்றறிவாளன் கடவுள் ஒருவரே!அவர் தனது செய்தியை;வழிகாட்டுதலை;ஞானத்தை தனது வாயாக உலகிற்கு தானே அனுப்பிய இறைதூதர்கள் மூலமாக அவ்வப்போது வெளிபடுத்தியுள்ளார்!இந்த இறைதூதர்கள் மூலமாக அந்த காலகட்டத்திற்கு அருளபட்டவைகள் பின்னாளில் கலப்படமும் அடைந்து விடுகின்றன!இருந்தாலும் அவைகளை கவனத்துடன் ஆராய்ந்து வேதத்தை உள்வாங்க வேண்டும்!அவைகளில் கலப்படங்களை மட்டும் சுட்டிகாட்டி ஒதுக்கிவிடாமல் சாரத்தை பிழிய கற்றுகொள்ள வேண்டும்!
உலகின் சற்குருநாதர்கள் நால்வர் மட்டுமே ஒருவர் ஆத்மாவிற்கு சற்குருவான நாராயணன் அடுத்தவர் சரீரத்திற்கு சற்குருவான சிவன் . நன்மை தீமைகளை தூண்டி விடும் சற்குரு ஆதி சேஷன் என்றால் அதில் அடி உதை பட்டு நிம்மதியை தேடுவோருக்கு பக்தி ; யோகம் ; சாந்தி செளபாக்கியத்தை அருளும் காமாஷி .
சரீரத்தில் அப்பியாசிக்கப்படும் யோகக்கலைகள் - தியானம் தவம் வாசி யோகம் முதலானவை சிவனை - தட்சினாமூர்த்தியாக - வழிவழியாக சித்தர்கள் யோகிகள் மூலமாக உலகில் வந்துள்ளது
ஆத்மாவிற்கு வேதங்களாக (இந்து - ரிக் யஜூர் சாம அதர்வண வேதங்கள் - சதுர் வேதங்கள - இவற்றின் சாரமான கீதை ; ஆரியத்தில் யூதர்களின் தவ்ராத் ; கிறிஸ்தவர்களின் பைபிள் ; இசுலாத்தின் குரான் ) சிந்தையில் உணர்ந்து வாழ்வை சீர்படுத்துவதாக ; சமூக சட்டங்களாக ; பிராத்தனையின் மூலமாக கடவுளோடு உறவு கொள்வதாக உள்ளவை
ஆத்மாவிற்கு சற்குருவானநாராயணனே வேதங்களை அருளுபவர் . இவர் யுகங்கள் தோறும் பூமிக்கு மனிதனாக வந்து உபதேசிப்பார் . அப்படி அவர் வந்தது 1)ஸ்ரீராமர் 2)கிரிஸ்ணர் 3)இயேசு மட்டுமே!இவர்கள் அவதார துதர்கள் . இவர்களோடு கூட மனிதர்களில் மேம்பட்ட ஆத்மாக்கள் புத்தர் ; மகாவீரர் ; வள்ளலார் ஆதி சங்கரர் ; மத்வர் ; ராமானுஜர் குருநானக் ; ராகவேந்திரர் என்றால் ஆரியத்தில் மோசே முதலான ஆப்ராகாமிய துதர்கள் முகமது வரை மட்டுமே அந்த காலகட்ட சமுதாயத்தில் உள்ள சாதாரண மக்களும் இறைவனோடு ஒப்புறவு ஆக்கியவர்கள்!வேதம் கொணர்ந்தவர்கள்!
இவர்கள் எல்லொரும் ஏக இறைவனை வணங்க ஊக்கபடுத்தியவர்கள்! இவர்கள் எல்லோரையும் உள்வாங்கி கடவுளை நெருங்கி செல்ல முயற்சிப்பது நமது கடமை!இவ்வேதங்களில் சமூகத்தில் கலப்படங்கள் சீர்கேடுகள் அதிகரிக்கும் போது கடவுள் இன்னொரு இறைதூதரை அணுப்புவார்!அவரை அணுப்பும்படி நாமும் வேண்டவேண்டும்! அதை விட்டு விட்டு எங்கள் தூதர் மட்டும்தான் துதராக இருக்கவேண்டும் வேறு யாரையும் அணுப்பகூடாது என கடவுளுக்கே கட்டுப்பாடு போடுவது குழந்தைதனமானது !!
கீதையின் மஹத்துவம் என்னவென்றால் எல்லா மனிதர்களும் அவரவர் உள்ள படியிலிருந்து கடவுளை அடைய 18 பாதையை மிக ஆழமாக விஞ்ஞான பூர்வமாக எளிமைபடுத்தி உபதேசித்துள்ளது!நாம் அறைகுறையாக செய்துகொண்டிருப்பதை பட்டைதீட்டி கொடுத்துள்ளது!கீதையின் சாரத்தை பிழிந்துகொண்டவன் மாத்திரமே ஆண்மீக வாழ்வில் தான் கடைபிடிக்கும் மார்க்கத்தை ஜீவனுடன் புரிந்து கொள்ளமுடியும்!கீதையை புரிந்துகொண்டால் மட்டுமே இந்து வேதங்களையும் பைபிளையும் குரானையும் புரிந்துகொள்ளமுடியும்!இல்லாவிட்டால் வெறுமையான வழிபாடாகவும் சடங்காகவும் சம்பிரதாயமாகவும் சண்டைபோடுகிறதாகவும் கலப்புள்ளதாகவும் முடியும்!
உண்மைகளை மறக்கடித்து மாயம் செய்கிறவைகள் மனிதனது குணங்கள் மட்டுமல்ல!உபதேசங்களில் கலப்பையும்;திரித்து உபதேசிப்பதும் மனிதனை விட மேலான சக்திகளான அசுரர்களின் மாய்மாலங்களாகும்!மனிதர்கள் தேராமல் நியாயத்தீர்ப்பு நாளன்று தங்களுடன் அழிக்க படவேண்டும் என்பது அசுரர்களின் திட்டமாகும்!கடவுளால் படைக்க படுகிற மனித ஆத்துமாவை அவனது சரீரத்தின் புலனிச்சைகளை தூண்டி அதற்கு சந்தர்ப்பமும் ஏற்படுத்தி உலக மாயைகளில் உலலும் படி அசுரர்கள் செய்கிறார்கள்!மனிதன் தவறுக்கு போகும் போது அதற்கு ஒத்துழைப்பு அதிகம் உண்டாக்குவதும் அசுரர்களே ! அதே மனிதன் கடவுளை நாடும்போது அதற்கு சொல்லொண்ணா முட்டுகட்டைகளை பிரச்சினைகளை உண்டாக்குவதும் அசுரர்களே !
ஒவ்வொரு மனிதனின் மூலமும் இறைசக்தியும் அசுர சக்தியும் ஒவ்வொரு நாளும் குருஸேத்திர யுத்தம் நட த்தி கொண்டுதான் உள்ளனர் ! மனிதனை தீங்குக்கு அழைக்க அசுரர்கள் படைதிறண்டு கவ்ரவர்களாய் தாக்குகிறார்கள்!
மனித சரீரமாகிய தேரில் குடிகொண்டு உள்ள ஆத்துமாவாகிய அர்ச்சுணன் மீது அசுரர்கள் தாக்கும்போது அர்ச்சுணன் தனது சாரதியாக--வழிகாட்டியாக இறைதூதனாகிய கிரிஸ்ணரை வைத்து அவரின் உபதேசத்தை கேட்டு அசுரர்களுடன் அனுதினம் யுத்தம் செய்து ஜெயிக்க வேண்டும் என்பதே குருஸேத்திர யுத்தம்!
இந்த யுத்த களத்தில் மனித ஆத்துமாக்கள் அசுரர்களுடன் போரிட்டே ஆகவேண்டும் என்பதை பலர் ஏற்றுகொள்வதில்லை!போர்க்களம் உணராத போர்வீரனாய் இருப்பது அறியாமையின் உச்சகட்டமாகும்!மனிதர்களிடம் உள்ள தீய குணங்கள் அவர்களை மயக்கும் மாயைகளை அவர்கள் அஹிரினை என கருதுகிறார்களே தவிர அவைகளின் பின்னணியில் அக்குணங்களை தூண்டி விடும் அசுரர்கள் என்கிற உயர்திணை -ஆவிமண்டல அசுரர்கள் ,உள்ளனர் ! அவர்கள் மனிதனை விட உயர்ந்த சக்திகள்!!
கடவுளை அடையும் பாதையில் தனகுள்ளும் புறத்திலும் அசுரர்களுடன் மனிதன் போராடியே ஆகவேண்டும் !எனவே கீதை போர்க்களத்தில் வைத்து உபதேசிக்க படுகிறது!!!