இந்திய சுதந்திர போராட்டம் என்பது அரசியல் விடுதலையை மட்டும் மையமாக வைத்து நடத்தப்பட்டதல்ல ! ஆன்ம விடுதலை ;சமுதாய ஒழுங்கு ; சமத்துவம் ; சர்வ மதங்களில் வெளிப்படுத்தப்பட்ட இறையன்பு , இறைஅச்சம் , தேடல் , மனிதநேயம் ; சமரச வேதத்தின் வளர்ச்சி ஆகியவற்றையும் முன்னிலைபடுத்தப்பட்டது !
சுதந்திரம் அடைந்தவுடன் மஹாத்மா காந்தி அவர்கள் ஆன்மீகப்பணியை முன்னெடுக்க திட்டத்துடன் ஆட்சியை நேருவிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கினார் ! துரதிஸ்ட்டம் அவர் கொல்லப்பட்டதால் காந்தியவாதம் என்பது கேலிக்குறிய விசயமாக மற்றப்பட்டு விட்டது !
கொள்கைகள் சார்ந்த அரசியல் என்பதற்கு பதிலாக பிழைப்பு , அதிகாரம் என்பதற்காக கொள்கை பேசும் அரசியல் என்பதாக அது பரிணாமம் அடைந்து விட்டது ! அரசியலை மட்டும் தொழிலாக வைத்து பிழைக்கிறவர்களின் கையில் அரசும் ; கொள்கைகளும் மாட்டிகொண்டு தவிக்கின்றன !
சர்வ மதங்களின் இணைப்பு – அல்லது சமரச வேதம் – காந்தியின் உள்ளார்ந்த திட்டமாக இருந்தது . அவரின் நடத்துதலின் கீழ் அன்புடன் நடந்த ஜின்னா திடீரென இசுலாம் தீவிரவாதத்தை கக்குவார் என காந்தி எதிர்பார்க்கவில்லை ; அதன் எதிர்விளைவாக இந்து தீவிரவாதமும் தலைவிரித்தாடும் என்பதையும் காந்தி எதிர்பார்க்கவில்லை .
சமயம் பார்த்து
மத தீவிரவாதங்கள் தலைவிரித்தாடும் என்பதை எதிர்பார்த்திருந்தால் ; ஒன்று பட்ட
அரசின் ராணுவ பாதுகாப்புடன் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களின் இட மாற்றத்தை
கலவரங்கள் இல்லாமல் – முடிந்த அளவு சேதமில்லாமல் செய்து விட்டு பிரிவினை
செய்திருக்கலாம்
ஆனால் இதை
நிதானிக்காமல் பிரிவினை என்பதை காந்தி ஆதரிக்காத நிலையில் வலிய பிரிவினையும் ;
மதக்கலவரங்களும் ; கொலைகளும் அரங்கேறின .
நான் அனைத்து
முஸ்லீம்களையும் குறை சொல்லவில்லை ; ஆனால் முஸ்லீம் அல்லாத காபிர்களை கொன்றால்
அல்லா உனக்கு சொர்க்கம் கொடுப்பார் என அல்லாவை உணராத வறட்டு சூத்திரதாரிகளான -தீவிரவாதிகளின்
உபதேசத்தை கேட்டு கடவுளுக்கு சேவை செய்வதாக நினைத்துக்கொண்டு லாகூரிலிருந்து
கிளம்பிய தொடர்வண்டியில் இருந்த அனைத்து இந்துக்களையும் பிணமாக்கி டில்லிக்கு
அனுப்பிவைத்தார்கள் ; பதில் கலவரம் மூண்டது . கலவரம் மூண்ட பிறகு அதில் தீமைகள்
இரு பக்கமும் தலைவிரித்தாடின . அந்த கலவரத்தை நிறுத்தும் படியாகத்தான் காந்தி
உண்ணாவிரதம் ஆரம்பித்தார் .
ஆனால்
முஸ்லீம்களை காக்க காந்தி உண்ணாவிரதம் இருப்பதாக இந்து தீவிரவாதிகள் புரிந்து
கொண்டார்கள் .
முஸ்லீம்கள்
இந்துக்களை கொன்றதற்கு பதிலுக்கு பதில் தீமை செய்வது சரியல்ல என்பதே காந்தியின்
கருத்து .
காந்தியை
கொன்றதால் என்ன சாதித்தார்கள் ?
காந்தியின்
கொள்கை மதச்சார்பின்மை அல்ல . அவர் இந்துவாக இருந்து சகல மதங்களையும் அதற்குள்
சுவீகரிக்கும் –சகல மதங்களையும் இந்து தர்மத்திற்குள் அடக்கும் முன்முயற்சியில்
இருந்தார் . அவர் துப்பாக்கியால் சுடப்பட்டபோதும் ராம் ராம் என்றுதான் சொன்னார் .
சிறந்த இந்துவாக இருந்தார் . அது சகல மதங்களின் தாய் மதம் ; சகலவற்றையும் தன்னுள்
அடக்கும் ஒரே தகுதி இந்து தர்மத்திற்கு மட்டுமே உள்ளது என்பதும் ; இதற்கு முன்பும்
உருவான புத்த சமண மதங்களை அது ஏற்கனவே அடக்கியே வளர்ந்தது ; அது போல இப்போது
சவாலாக உள்ள கிறிஸ்தவ ; இசுலாம் கொள்கைகளில் சரியானதை மட்டும் இந்துவுக்குள்
இழுத்து சமப்படுத்தினால் மட்டுமே உலகில் சமாதானத்தை நிலைநாட்ட முடியும் என்பதும்
அவரது தரிசனமாக இருந்தது
உலக நாடுகள்
முழுதும் அவருக்கு அங்கீகாரமும் இருந்தது .உலகிற்கு ஆன்மீக தலைமை – உலகை
மூழ்கடிக்கும் ஆன்மீகப்பேரலை அவர் மூலமாக புறப்பட இருந்ததை சிறுபிள்ளைத்தனமாக
கோட்சேயும் அவரைத்தூண்டி விட்டவர்களும் செய்து வளர்சியை கெடுத்தார்கள் .
காந்தியை
கொன்றதால் இந்து மத ஆதிக்கம் இந்தியாவில் பெருகும் என்று கனவு கண்டார்கள் ; ஆனால்
நடந்தது என்ன ? காந்தி சொல்லாத மதச்சார்பின்மை என்ற ஒன்றை உன்னதமான கொள்கையாகவும் ;
அதை சாதிக்க சிறுபான்மையினருக்கு சலுகை என்ற பெயரால் ; சிறுபான்மையினரின் ஓட்டை
மட்டும் கவர்ந்து ஆட்சியை தக்க வைத்தால் போதும் என்ற சந்தர்ப்பவாத அரசியல்
இந்தியாவை இதுவரை நடத்தியது
ஆக கோட்சேயின்
சிறுபிள்ளைத்தனமான செயல்பாடு இந்து மதத்திற்கு கெடுதலாக முடிந்தது என்பதே
நிதர்சனமான உண்மை . உலகம் முழுதும் கோலோச்சும் ஆன்மீகத்தலைமையாக இந்தியா
உருவெடுக்கும் கடவுளின் சித்தமும் தள்ளிப்போனது .
.
காந்தி
தலைமைப்பதவியை தாமாக வலிந்து உருவாக்கவில்லை . அவர் பரமாத்மாவின் நண்பர் என்ற
தகுதி மட்டுமே தலைமைப்பதவியை – திரள்கூட்ட ஆதரவை அவருக்கு பெற்றுத்தந்தது .
அவர்
கொல்லப்பட்டதிலும் ஒரு நன்மை ; அவர் உலகின் மூத்த குடியான தமிழராக அவதரித்து உலகம்
முழுதும் சமரச வேதத்தை நிலைநாட்டுவார் .
அந்த நாள்
விரைவில் வர நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுளை வேண்டுகிறேன் .
ஓரிறைவனையே
துதிக்கிறோம்
நாராயணன்
நாமத்தினாலே
ஓம்
நமோ நாராயணாய !!
ஓரிறைவனையே துதிக்கிறோம்
சிவனின்
நாமத்தினாலே
ஓம்
நமோ சிவாய !!