Total Pageviews

Sunday, May 11, 2014

பெண்களுக்கு சமாதானம் !!





மனித குலம் தோன்றிய நாட்களிலிருந்து பெண்கள் ஆண்களால் கொடுமைக்குள்ளாவது வாடிக்கையாகவே இருக்கிறது

பெண்கள் சமத்துவம் ; பெண்ணுரிமை பற்றிய விழிப்புணர்வுகள் ; ஆதரவுகள் பெருகியுள்ள இக்காலத்திலும் எதிர்பாராவிதமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்கள் தாக்குதலுக்குள்ளாவது நடந்தேறி விடுகிறது

எத்தனை விழிப்புணர்வுகள் போராட்டங்கள் ; அரசின் தண்டனைகள் என்று வந்தாலும் அதைப்பற்றிய அறிவு இல்லாமல் ; தாங்கள் போலிசிடம் மாட்டிக்கொள்வோம் ; தண்டனை நிச்சயம் உண்டு என்பதைப்பற்றிய தெளிவு இல்லாமல் சில இளைஞர்கள் பெண்ணை வன்முறைக்கு ஆட்படுத்துவதும் கொன்று விடுவதும் மனிதம் என்ற குறைந்த பட்ச இரக்கம் கூட இல்லாத கொடூரம் எங்கிருந்து வெளிப்படுகிறது ?

இத்தனைக்கும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் படிப்பு அரசு ஆட்சிப்பணிகளில் பரினமித்தும் ; தலைமைப்பதவிகளில் இருந்தும் பெண் – போகத்துக்குரியவள்  என்ற பார்வை இன்னும் மாறவில்லையே ஏன் ?

இவைகளை சீர்திருத்த சமூகவியலாளர்கள் பல முயற்சிகள் மேற்கொண்டு அரசுகளும் பல பாதுகாப்புகளை கொடுத்துள்ளன

இருப்பினும் ஆன்மீக ரீதியாகவும் சில முயற்சிகளை மேற்கொள்வது அவசியம் ! ஒரு குறிப்பிட்ட ஆதி சாபம் ஒன்று பெண்களின் மீது இருக்கிறது . அதை நிவர்த்தி செய்ய ஒரு குறிப்பிட்ட பிரார்த்தனையை ஏறெடுக்க வேண்டியது விழிப்புணர்வுள்ளோரின் கடமை
ஞானம் பயில்வோர் இதற்கான முயற்சியை மேற்கொண்டால் மாத்திரமே சாதாரண உலகை சீர் செய்ய இயலும்

இஸ்ரேல் தேசத்தின் முதலாவது இறைத்தூதர் மோசஸ் என்பவர் மூலமாக கடவுள் வெளிப்படுத்திய தவ்ராத் என்ற வேதத்தில் மனிதன் படைக்கப்பட்டது ; மனுஷி உண்டாக்கப்பட்டது ; அதில் முதன் முதலில் நடந்த தெய்வகுற்றம் அதனால் உண்டான சாபங்கள் பற்றிய சில குறிப்புகள் உள்ளன

இவைகளை கவனமுடன் ஆராய்ந்தால் பெண்ணடிமைத்தனம் ;பெண்ணியத்தின் மீதான கொடூரங்களின் பின்னணி ஒன்று புரியும்
    
ஆதியாகமம் : 2


21. அப்பொழுது கடவுள்  ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.

22.
கடவுள் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.

23.
அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.

24.
இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.

25.
ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.

ஆதியாகமம்
 : 3

1. கடவுள் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.

2.
ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்;

3.
ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள்.

4.
அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;

5.
நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.

6.
அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.

7.
அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.

8.
பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற கடவுளுடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் கடவுளுடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.

9.
அப்பொழுது கடவுள் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.

10.
அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்.

11.
அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார்.

12.
அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்.

13.
அப்பொழுது கடவுள்  ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.

16. அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார் .

17. பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.

18.
அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.

19.
நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.

20.
ஆதாம் தன் மனைவிக்கு அவ்வா என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்.


மேற்கண்ட வாசகங்களில் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் சிலவற்றை மட்டும் கீழே தருகிறேன் :


    ஆணும் பெண்ணும் படைக்கப்பட்டபோது நிர்வாணமாகவே இருந்தும் வெட்கப்படாது இருந்தார்கள்


அதாவது ஆண் பெண் பேதமில்லாது இருந்தார்கள் சரியாக சொன்னால் காமம் என்ற மாயை அவர்களை பீடித்திருக்கவில்லை


இன்றைய உலகின் மிக முக்கியமான பிரச்சினைகளே இந்த ஆண் பெண் பேதம் – காமத்திலிருந்து தான் உண்டாகிறது


நன்கு படித்து வளர்ந்து வரும் பல இளைஞர்கள் இளைஞிகளின் வாழ்வை படிப்பை எங்கிருந்தோ இந்த காமம் – காதல் என்ற பெயரால் வந்து சீரழித்து விடுகிறது


எப்படி கண்ணும் கருத்துமாக வளர்த்தாலும் இந்த வாலிப மயக்கத்தால் தங்களின் பிள்ளைகளின் வாழ்வு விட்டில் பூச்சி விளக்கில் விழுந்து சாவது போல சீரழியும் போது பெற்றவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை – இதில் ஜாதிப்பிரச்சினைகளும் சேர்ந்து கொள்கிறது


மனநோவுகள் ; பாவங்கள் ; சாபங்கள் பல இந்த காமத்திலிருந்தே தோன்றி பல பிறவிகளுக்கு துன்பத்தை கொடுத்து மனித வாழ்வின் லட்சியத்தை தொலைக்க செய்கிறது


ஆண்களாக பிறந்து வித விதமான பெண்களின் தேகங்களின் வடிவங்களின் மீது ஈர்ப்பும் மோகமும் கொப்பளிக்கும் போது அலைபாய்கிற மனதை அடக்க போராடியும் ; முடியாமல் வழுக்கி விழுந்து பாவத்தையும் சாபத்தையும் கேவலத்தையும் கெடுதல்களையும் சம்பாதிக்கும் ஆத்மாக்கள் அடுத்த பிறவியில் பெண்ணாக பிறந்து இந்த ஆண்களிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள பயந்து பயந்து போராடி வாழ்கிற அவலம் !!


இரண்டையும் ஒரே ஆத்மா ஆணாகவும் பெண்ணாகவும் பிறந்து மாறி மாறி அனுபவித்து தவிக்கிறது


ஆணாகப்பிறந்து இச்சிக்கிற ஆத்மா பதிலுக்கு பெண்ணாக பிறந்து பயந்து பயந்து வாழ்கிறது



இந்த சுழலிலிருந்து எப்படித்தான் தப்புவது ! ஆத்ம போதம் மட்டுமே போதுமானதில்லை . இந்த மகா மாயையிலிருந்து தப்ப இறைவனின் கிருபையை கண்ணீர் விட்டு வேண்டினாலொழிய தப்ப வழியில்லை !!


விலங்குகளை பாருங்கள் ; அவைகள் காமத்தால் பீடிக்கப்படுவதில்லை ! அவை அதற்காக சிந்தித்து சிந்தித்து நேரத்தை வீணாக்குவதில்லை ; தவியாய் தவித்து மாய்ந்து போவதில்லை !! நின்று பெண்ணை ரசித்து காதல் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கவில்லை ; ஏங்கித்தவிப்பதில்லை அல்லது வாய்ப்பு கிடைத்தால் கொடூரமாகவும் அனுபவிக்க முயற்சிப்பதில்லை ! இயல்பாக இருக்கின்றன .

மனிதனிடம் அவைகளைக்காட்டிலும் மேம்பாடான பல விசயங்கள் இருந்தாலும் அவைகள் ஆண் பெண் பேதம் என்ற மகா மாயைகளால் வருத்தெடுக்கப்படாமலே இருக்கின்றன . அவைகளின் நியதி வேறாக இருந்தாலும் இனப்பெருக்கத்திற்கென்று ஒரு ஒழுங்கு இருக்கிறது


ஒருவேளை ஆதி மனிதன் + மனுஷி அதாவது மனு – இந்த சாபத்தை வாங்காதிருந்தால் மனித வாழ்க்கையில் நிம்மதியான வேறு ஒரு ஒழுங்கு இருந்திருக்கும் !!



16. அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.

ஆதியிலே பெண்களின் மீது உண்டான சாபம் . இது மிகவும் முக்கியமானது . ஏனென்றால் விலக்கப்பட்ட கனி – கேவலம் ஒரு பழத்துக்காக இந்த சாபமா என மேலோட்டமாக கருதி விடாதீர்கள் !


மனிதன் ஆறாம் அறிவு – நன்மை தீமை அறிகிற அறிவு மேலோட்டமாக உலக வாழ்வுக்கு மிகவும் நல்லது என்பதுபோல தோன்றினாலும் அதனால் விளைந்து மிக முக்கியமான தீமை – ஆண் பெண் பேதம் என்ற மகாமாயை !


அல்லாமலும் மனிதன் தனது சுய அறிவை நம்பிக்கொண்டிருக்கும் வரையும் அல்லது சுயத்தை சார்ந்திருக்கும் வரையில் ஞானத்தில் – பக்தியில் முன்னேற்றம் காணவே இயலாது


மனித பிறவியை நிறைவு செய்ய – மரணமில்லா பெரு வாழ்வு – நித்திய ஜீவன் பெற கடற வேண்டிய ஒன்று - சுயத்தை விட்டு கடவுளை முழு சரணாகதி அடைதல் . அதாவது நாமாக செயல்படாமல் கடவுளின் கரத்தில் ஒரு கருவியாக மட்டுமே இருத்தல் !!


நித்திய ஜீவன் உள்ள தேவர்கள் – தேவதுதர்கள் எவ்வளவு ஆற்றல் இருந்தாலும் யார் அவர்களை வருந்தி வருந்தி அழைத்தாலும் தாமாக ஒன்றும் செய்யமாட்டார்கள் . கடவுள் கட்டளையிட்டால் மட்டுமே செயல்படுவார்கள் !


மனிதன் நிறைஞானம் பெற்றால் அவன் அப்படி இப்படி அலட்டவே மாட்டான் ; சும்மா இருப்பான் – கடவுளின் கரத்தில் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுவான் . சும்மா இரு என்று ஞான சற்குரு முருகன் அருணகிரியாருக்கு உபதேசித்த உபதேசம் `` சும்மா இரு ``


கீதை 5:8 அத்தகு மெய்ஞானமய கோஷத்தில் நிலைத்தவர் உலகியலில் பார்த்தல் , கேட்டல் , தொடுதல் , நுகர்தல் , உண்ணல் , நகர்தல் , தூங்குதல் சுவாசித்தல் என செய்தாலும் உள்ளார்ந்து எதுவுமே செய்யாதவரைப்போலவே உணர்வர்

!


கீதை 5:9 ஏனென்றால் அவரைப்பொறுத்து மேற்கண்ட இயக்கங்கள் அனைத்தும் உடலும் புலன்களும் அவற்றை ஈர்க்கும் பொருட்களுடன் இடைபடுவதால் தோண்றிமறைபவையே தவிர தானும் ஆத்துமாவும் அவைகளுக்கு அப்பாற்பட்டே இருப்பார் !!


கீதை 5:10 தண்ணீரில் தாமரை இலை இருப்பதுபோல ; செயல் விளைவில் பற்றற்று செயலின் விளைவுகள் அனைத்தையும் யார் கடவுளுக்கே அர்ப்பணிக்கிறார்களோ அவர்களின் மீது பாவங்கள் சுமறுவதில்லை !!


கீதை 5:11 யோகிகள் எனப்படுவோர் எல்லா பற்றுக்களையும் களைந்து ; உடலாலும் , மனதாலும் , அறிவாலும் , புலன்களாலும் கடவுளுக்கென்றே செயல்பட்டு ஆத்தும தூய்மை எய்துகிறார்கள் !!



கீதை
5:12 பக்தியில் நிலைத்த ஆத்துமா கலப்பில்லாத சாந்தியை எய்தும் ; ஏனெனில் தனது எல்லா செயல்பாடுகளின் விளைவையும் அவன் கடவுளுக்கே அர்ப்பணிக்கிறான் ! கடவுளுடன் ஒத்திசைவை கற்றுக்கொள்ளாதவனோ தனது சுயமுயற்சியின் பலன்களின் மீது ஆசை கொண்டு தடுமாற்றம் அடைகிறான் !!



கீதை 5:13 உள்ளார்ந்த ஆத்துமா தன்னை உணர்ந்து தெளிந்து ;உடலை ஆழுமை செய்து ; தனது எல்லா செயல்பாடுகளின் விளைவையும் அர்ப்பணித்து விடுமானால் ஒன்பது வாயில்கள் கொண்ட உடலில் பரிபூரணம் எய்தி சுகித்திருக்கும் ! ஆத்துமா கர்மம்  செய்வதுமில்லை : கர்மத்தின் விளைவை அனுபவிப்பதுமில்லை !! மனதளவில் அவன் கர்மத்தை துறந்தவனாகிறான்

!!

கீதை 4:18 யார் தன் மீது சுமறும் எல்லா செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வினையாற்றினாலும் செயலில் செயலை கடந்த மனநிலையும் செயல்படாத போதும் செயலை நிர்வகிக்கிற மனநிலையும் அடையப்பெறுகிறானோ அவனே அறிவுதிறமுடையவன்! நித்திய ஜீவனை அடைவதற்கான பரிபக்குவத்தில் பயனிக்கிறவன்!!

கீதை 4:19 தனது புலன் இச்சைகளை நிறைவேற்றும் நோக்கத்தை வென்றவவனாய் யார் தனது அனறாட செயல்பாடுகளை நிர்வகிக்கிறானோ அவனே முற்றறிவை எய்தியவனாக கருதப்படுவான்!!

யோகத்தில் முழுமை அடைதல் ; பிறவியின் லட்சியத்தை அடைதல் என்பது பல சித்திகள் உள்ளவனாக பிரபலமடைவது அல்ல ; எவ்வளவு சித்திகள் கிடைத்தாலும் அதை சுய முயற்சியால் பயன்படுத்தாமல் ஒரு பிச்சைப்பாத்திரமாக கடவுளிடம் மட்டுமே எதிர்பார்த்து வாழ்கிறவனாக ; கருவியாக மட்டுமே இருப்பான் . பெருமைகளும் சிறுமைகளும் அவனை பாதிப்பதில்லை

இதன் அடிப்படை என்னவென்றால் தன் வாழ்வுக்கான பொருளை தானாக தேடாமல் கடவுள் கொடுப்பதை கொண்டு மட்டுமே வாழ்வது

இன்றைய உலகில் இது வெகு ஜனங்களுக்கு எப்படி பொருந்தும் என்றால் இப்படி எல்லோரும் வாழும் ஒரு நிலையை நம் ஆதி தகப்பன் கெடுத்து சாபத்தை பெற்றுக்கொண்டார் என்பதுவே


17. பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.


18.
அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.


19.
நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார் .


இந்த சாபத்திற்கு முன்பு மனிதன் படைக்கப்பட்டபோது ; சுய அறிவை சார்ந்து கொள்ளாமல் கடவுளை மட்டும் சார்ந்தவனாக இருந்த போது சகலமும் அவரால் கொடுக்கப்பட்டது

மனிதனை பிடித்து வாட்டுகிற இரண்டு சாபக்கேடுகள் :

1) பொருளாதாரம் 2) ஆண்
பெண் பேதம்

இவை இரண்டுக்குமே மனுவை அதாவது சரீரங்களுக்கு தகப்பனான முதலாம் மனு – சிவனை இப்பாவத்தில் தள்ளியது – அவரில் பாதியான பார்வதியே !

இதுவே பெண்களின் மீதான ஆண்களின் கொடுமைகளாக வெளிப்படுகின்றது

இந்த சாபத்திலிருந்து மனுக்குலத்தை விடுதலை ஆக்கவேண்டுமானால் அதற்கான பிராத்தனையை ஏறெடுத்தாகவேண்டும்

கிருத யுகம் என்ற ஆதி யுகத்தில் சிவனார் தமது தவத்தால் மீண்டும் கடவுளோடு ஒப்புறவாகி யுக புருஷன் ஆனார் தேவனாக ருத்திர பதவியை அடைந்தார் அவரின் மனைவியான அவ்வாவும் அம்மையும் அப்பனுமாக மனுக்குலத்துக்கு சற்குருவாக பரிணமித்தார்கள் 

அதுவே குலதெய்வ வழிபாடாக பரிணமித்தது

அதன் பிறகும் மகா முனிவர்கள் யோகிகள் அனைவரும் சென்று போனபிறகு ; அவர்கள் தெய்வீகத்தன்மை அடைந்திருப்பார்கள் என்ற அடிப்படையில் அவர்கள் அடக்க தளங்களில் லிங்கம் வைத்து ஈஸ்வரர் என்ற அடைமொழியுடன் குலதெய்வ வழிபாடு தொடங்கியது

இவை அனைத்துமே குருவழிபாடாக – இவர்கள் மூலமாக கடவுளை வழிபடுவதாக ஆதியிலே இருந்தது –இதுதான் உண்மை


காலப்போக்கில் கடவுளை விட்டு விட்டு குருவையே கடவுளாக்கியது மனித தவறு


யார் மூலமாகவும் கடவுளை வழிபடுகிறோம் என மாற்றிக்கொண்டோமானால் அது ஒருவேளை கடவுளாக இருந்தாலும் அவர் மூலமாக அவரை வழிபடுகிறோம் என்பது பாவமாகாது

இந்த குருவழிபாட்டில் ஒரு பகுதியே உமை வழிபாடு – மாரியம்மாள் வழிபாடு

இங்கு சென்று வழிபடும் போது ஒரு முக்கூம்பு மரத்தை நட்டு அதன் மீது தண்ணீரை ஊற்றி வழிபடும் பழக்கம் அவர்களுக்கு சாபத்திலிருந்து சாந்தி உண்டாகவேண்டும் என்பதன் அடையாளம்


முதலாம் சாபத்தில் மூன்று அம்சங்கள் உள்ளன என்பதன் வெளிப்பாடே முக்கூம்பு மரம் 


பெண்கள் தீச்சட்டி எடுத்து வலம் வருவது ; பார்வதியின் சார்பாக சாப நிவர்த்திக்கான ஒரு வேண்டுதல்



அதை பிராத்தனையாக விபரம் அறிந்தோர் ஏறெடுத்தால் நல்ல விளைவுகள் உண்டாகும்


நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுளின் அருட்பேராற்றல் அவ்வாவை - பார்வதியை நிரப்புவதாக

அவர்களுக்கு சாந்தியும் கடவுளின் கிருபையும் அவர்களின் கண்களில் தயவும் உண்டாவதாக

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுளின் அருட்பேராற்றல் பெண்களை நிரப்புவதாக !

அவர்களுக்கு சாந்தியும் கடவுளின் கிருபையும் ஆண்களோடு நல்லிணக்கமும் உண்டாவதாக       

ஊர் ஊருக்கு மாரியம்மன் கோவில் இருக்கும் அதை கடரும்போது இப்பிரார்த்தனையை ஏறெடுங்கள்

உலகில் சாந்தியும் சமாதானமும் தழைத்தோங்க பேருதவி செய்யும்



இந்தப்பிராத்தனையின் மூலமாக நாம் ஆண் பெண் பேதத்தை கடந்து விடமுடியும் . மனுக்குலத்தில் பெண்களின் மீது இழைக்கப்படும் சகல கொடுமைகளிலிருந்தும் அவர்களுக்கு விடுதலை உண்டாகும்


ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே    
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஓரிறைவனையே துதிக்கிறோம்
சிவனின் நாமத்தினாலே    
ஓம் நமோ சிவாய !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி