Total Pageviews

Wednesday, October 26, 2011

ஒரு ஹதீசுக்கு விளக்கம்

3275. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ரமளானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே, நான் அவனைப் பிடித்துக் கொண்டேன்; 'உன்னை அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன்" என்று கூறினேன். (அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சியையும் விபரமாகச் சொல்கிறார்..) இறுதியில் அவன், 'நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்" என்று என்னிடம் சொன்னான். (இதை நபி(ஸல்) அவர்களிடம் சொன்னபோது,) 'அவன் பொய்யனாயிருந்தும், உங்களிடம் உண்மை பேசியுள்ளான். அவன் ஷைத்தான் தான்" என்று கூறினார்கள்.
Volume :3 Book :59

இதைப்பற்றி இன்னும் விரிவாக நான் சொல்லுகிரேன்:
முதல் நாள் இரவில் ஒருமனிதன் தானியத்தை வந்து அள்ளும்போது அபூ அவர்கள் தடுத்து வா உள்ளே நபியிடம் கொண்டு செல்வேன் என இழுத்த போது `தன் பிள்ளைகள் வறுமையில் வாடுவதால் இப்படி திறுடினேன் என சொன்னபோது மனம் இளகி விட்டுவிட்டார்!காலையில் நேற்றிரவு என்ன நடந்தது என நபி கேட்டார்கள்.அப்போது நபி அவன் பொய் சொல்லி உன்னை ஏமாற்றிவிட்டான் என சொன்னார்கள் அண்றிரவும் அதுபோல நடந்தது இரக்கபட்டு விட்டுவிட்டர் அபூ! மறுநாள் நேற்றிரவும் விருந்தாளி வந்தானா எனக்கேட்டு இன்றைக்கு வந்தால் விடாதே என எச்சரித்து விட்டார்!அன்றும் அதுபோல விருந்தாளி வந்தவுடன் அபூ உறுதியாய் பிடித்துக்கொண்டு நபியிடம் இழுத்த போது குர்ஸ்ஹியை ஓதும்படி கூறியவுடன் விட்டுவிடுகிறார்! ஆகா குரானை ஓதும்படி சொல்கிறானே நமது  ஆள் என்று நம்பி விட்டார் மறு நாள் மீண்டும் விசாரித்து விட்டு நபி பெருமானார் உண்மையை உரைத்தார்கள்:வந்தது சாத்தானென்று!

இதில் கற்றுக்கொள்ள வேண்டுவது?

நீங்கள் சொல்லுவது குர்ஸ்ஹியை ஓதினால் தேவதுதர்கள் பாதுகாப்பு கொடுப்பார்கள் என்பது மட்டுமே!
ஆனால் கீதையின் சாரத்தை புரிந்த என் விளக்கத்தை கேளுங்கள்
1) நபி அவர்கள் பீடத்தில் அமர்ந்திருக்கிற பள்ளிவாசலுக்கே சாத்தான் வருகிரான்.

 2)அங்கு பண்டிகைக்காக சேர்த்து வைத்திருக்கும் தானியத்தை குறைவடைய செய்ய முயற்சி செய்கிரான்.

3)திரும்பதிரும்ப பொய் சொல்லியாவது இரக்கத்தை தூண்டி தனக்கு இடம் கொடுக்க முயற்சி செய்கிரான்

4)பிடி பட்ட போது குரானின் சிறப்பையே சொல்லி தப்பிக்கொள்ளுகிறான் . சாத்தானும் வேதம் ஓதும் என்பதை நிரூபிக்கிறான் 

1)எவ்வளவு அருள் ஆற்றல் நிறைந்த இடத்திர்க்கும் -மனிதனிடத்தும் சாத்தான் வருவான்! தனக்கு  இடம் கொடுக்க வைக்க  முயலுவான்

2)நமது நற்க்குணத்தினால் பிரார்த்தனையால் விளைந்த பலனை முடிந்தளவு குறைவடைய செய்ய முயர்சிசெய்வான்!

3)அதர்க்காக நமது பலகீனமான உணர்வுகளை பயன்படுத்துவான் -தூண்டி விடுவான் ஒரு முறை தவறு செய்து விட்டால் மீண்டும் மீண்டும் அதனையே தூண்டுவான் பாவசெயல்களுக்கு  ஆசை காட்டுவது மட்டுமல்ல;அதனை சுய சாக்கு சொல்லி அழகாக்கி காட்டிக்கொண்டே இருப்பான்

4)அப்படியே மீறி அப்பாவத்தை செய்யக்கூடாது என முடிவெடுத்தால் வேதத்தின் ஒருபகுதியை ஓதி நீ பெரிய குற்றவாளி உன்னை கடவுள் தண்டிக்காமல் விடமாட்டார் என குற்றம் சாட்டுவான்!அதனால் பாவ சுரனை அற்றுப்போய் முழுக்க
நனைந்து விட்டோமே முக்காடு எதர்க்கு என பலர் முழுக்குற்றவாளியாய்
போய்விடுவர்!

கொஞ்சம் கவனியுங்கள்:மூன்று நாளலவும் திரும்ப திரும்ப அபூ அவர்கள் நபி எச்சரித்தும் சாத்தானுக்கு துணை போய்க்கொண்டிருந்தார்!இரக்கபட்டு விட்டார்!நபி பொய் என்று சுட்டியும் இரக்கபட்டு விட்டார்!அவனை விடவே கூடாது என நபி கண்டித்தும் குரானை சொன்னான் விட்டுவிட்டேன் என்று சொன்னார்!

இரக்கபட்டு சாத்தானுக்கு ஒத்துழைத்தார் பின்னர் குரானுக்காகவும் ஒத்துழைத்தார்!


பிறகு குரானின் சிறப்பை சாத்தானே சொல்லிவிட்டான் அதனை நான் கண்டுபிடித்துவிட்டேன் என இந்த ஹதீசில் தம்பட்டம் அடித்தாரே தவிற தான் சாத்தானுக்கு ஒதுப்போனதை பற்றி கடைசிவரை புரிந்து கொள்ளவே இல்லை!
இப்படித்தான் குரானை மட்டும் படிக்கிரவர்கள் வாழ்க்கை அறைகுறையாய் போய் கொண்டு உள்ளது!முந்தய வேதமான கீதையை,பைபிளை குரானின் வெளிச்சத்தில் படித்து பின் கீதையின் வெளிச்சத்தில் பைபிளை குரானை படித்தால் நன்றாக புரிந்து கொள்ளமுடியும்

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் சேஷனனின் நாமத்தினாலும் காமாஷியின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி 




No comments:

Post a Comment