Total Pageviews

Wednesday, October 26, 2011

தீபாவளி ---தத்துவ விளக்கம் !




நரன் என்றால் மனித சரீரத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறவன் !

மனித சரீரத்திற்குள் கடவுள் தனது ஆவியில் ஒரு துளியை ஊதியதே அவனின் உயிராகும் ! அது உயிராக ஓடிக்கொண்டு இருக்கும் வரையில் நரன் என்
கிற ஆத்மன் சரீரத்தில் இயங்கி வாழ்ந்துகொண்டிருப்பான் !

தனது உயிர் கடவுளின் ஒரு துளி  என்பதை மறந்து சரீர உணர்வுகளுக்கு ஆட்பட்டு தன்னை மனிதனாகவே கற்பனை செய்துகொள்ளுகிறது ஆத்மன் ! அத்தோடு பிரபஞ்சம் முழுவதும் விரவியும் நிறைந்துள்ள பரமாத்மாவின் ஒரு நீட்சியே தனது ஆத்மா என்பதையும் மறந்துவிடுகிறது

அதுவே  நரனாய் ஆனவன் நாராயணன் என்பது !!


சரீரத்தோடு சம்மந்தமடைந்து எல்லா ஆத்மாக்களும் சுயேட்சை அடைந்து தனித்த பிரகிருதியாக  ஜீவாத்துமாவாக மாறுபாடடைகிறது!


பண்றி என்பது உணர்வுகளை முகர்ந்து அதனையே உண்டு வாழ்வது !காட்டுபண்றி தரையை முகர்ந்து உள்ளிருக்கும் கிழங்கு வகைகளை கண்டறிந்து பூமியை தோண்டி கிழங்கை உண்ணுகிறது எந்த பண்றியும் முகற்சி உள்ளது!


முகற்சி எண்பது மோஹவகைப்பட்டதாகும்!இந்த மோஹத்தை உலகமும் உலகத்தை மோஹமும் காதலித்து நரனை நரகாசுரனாக மாற்றிக்கொண்டு உள்ளன!


நரனான மனிதன் உலக மாயையில் மூழ்கி `எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறி` மோஹ வகைப்பட்டவனாய் உலக பந்தத்தில் மாட்டிகொள்ளுகிறான்!

உலக பந்தத்தில் மாட்டிகொண்ட நரனை `1)ஆணவம்2)கண்மம்3)மோஹம்4)மதம்5)மாச்சரியம் என்கிற அய்ந்து மாயைகளை பறப்பி வானமண்டலத்து அசுரர்கள் அரக்கனாய் மாற்றுகின்றனர்!


உலகில் கொடுங்கோலர்கள் துன்மார்க்கர்கள் இருப்பார்கள் என்றால் அவர்களுக்கு அசுரர்களின் சிறப்பு அபிசேகம் இல்லாமல் கொடுமை செய்வதில்லை!

கடவுள் தனது தூதர்களை அனுப்புவது போல் அசுரர்களும் தனது தூதர்களை பூமியில் அவ்வப்போது அனுப்புகிறான்!கடவுள் பணமும் பதவியும் கொடுத்தால் அந்த மனிதனுக்கு ஆணவத்தையும் அக்கிரமத்தையும் அசுரர்கள் உபதேசித்து அரக்கர்களாய் மாற்றுகின்றனர்!


நரன் +அசுரன் =நரகாசுரன் !!

நரன் தன்னை நாராயணனின் அங்கம் என்பதையும் மறந்து உலகை மோஹித்து பணமும் பதவியும் அடைந்தவுடன் அசுரர்களுடன் கலந்து நரகாசுரனாக மாற்றம் அடைகிறான்!அதனால் தான் நரகாசுரனை நாராயணனாலும் கொல்ல முடியவில்லை என்பது!


நாராயணனின் மனைவி உயிர்த்தடமாகிய தொப்புளில் தாமரையில் வாசமாயிறுக்கிரவள்! தாமரை என்பது தான் இருக்கும் தண்ணீருடன் சம்மந்தம் கலவாதது ! இவ்வுலகத்திலேயே இருந்தாலும் சரீரத்திலேயே இருந்தாலும் அதில் பட்டும் படாமலேயே உயிரானது ஓடிக்கொண்டு உள்ளது ! ஏனென்றால் உயிரானது கடவுளின் ஆவியின் ஒரு துளி ஆகும்!

எனவே அவளிடம்--உயிரிடம் மனிதன் ஒன்றி தியாணிது தான் சரீரமல்ல ;அது நிலையற்றது! தன் சரீரம் தேர் மட்டுமே !அதில் பயணிக்கும் அர்ச்சுணன் ஆகிய ஆத்துமா; க்ரிஷ்ணனாகிய இறைதூதனுக்கு அடையாளமாகிய தனது உயிரின் பின்னால் செல்லக்கூடியவனாக மாற வேண்டும்!


ஒரு மனிதனின் சரீரம் என்பது அசுரர்களின் ஆளுகைக்குட்பட்ட பொருளாக--உணர்வு வயப்பட்ட பிரகிருதியாக உள்ளது! அந்த சரீரத்தின் பின்னால் செல்லுகிற மனிதன் அசுரர்களால் ஆளப்பட்டு நரகாசுரனாக மாற வாய்ப்புகள் அதிகம் உள்ளன !

அப்படியில்லாமல் உயிரோடு ஒன்றி தியாணிக்கிற மனிதன்;மேலும் இறைதூதர்களின் உபதேசங்களில் அடிக்கடி ஸ்ணானம் செய்கிற மனிதன் தேரினை அடக்கி க்ரிஷ்ணனின் நண்பனாய் வெற்றி பெறுகிறவனாய் மாறுகிறான்!


உயிருடன் ஒன்றி தியாணிக்கிற தன்மை பெறுக பெறுக இறைஉணர்வு மனிதனுக்கு விருத்தியாகிறது! இப்படிப்பட்ட மனிதன் தனது பணம்,பதவியை அசுரனின் பேச்சை கேட்டு துஸ்பிரயோகம் செய்வதில்லை! நரகாசுரனாக மாறி விட்ட மனிதனை இத்தகைய மனிதர்களே அடக்குகிண்றனர்! மனித நேயம்,முற்போக்கான காரியங்கள் இறைஅச்சம் உள்ள மனிதர்களாலேயே தலைத்தோங்குகின்றது!


இருப்பினும் இந்த தத்துவத்தை நிணைவு கூர்வதற்கு நரகாசுரனை கொன்ற நாளாக `தீபாவளி` உருவகப்படுத்தப்படுகிண்றது! இது ஒரு உருவகமே! உண்மை நிகழ்சி என எடுத்துக்கொள்ள வேண்டுவதில்லை!

கங்கா ஸ்ணானம் என்பது நம்மை தூய்மை செய்ய இறைதூதர்களின் உபதேசங்களில் மூழ்கவேண்டும் என்பதுதான்!

கடவுள் நம் ஆத்துமாவில் ஒளி ஏற்றுவாராக!






1 comment:

  1. தீபாவளி நல் வாழ்த்துகள்

    ReplyDelete