Total Pageviews

Sunday, March 23, 2014

சகஸ்ர லிங்கம் சொல்லும் தத்துவம் என்ன ?





ஒரு லிங்கத்தில் ஆயிரம் லிங்கம் !

ஒரு லிங்கம் ஒரு பிரகிருதி - ஒரு நபர் ஆனால் அவரில் ஆயிரம் நபர்கள் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் !

லிங்கம் என்பது அருவம் + ரூபம் ! மனிதன் சரீரமான ரூபமாக இருந்தாலும் அவனுக்குள் அருபமாக இருந்து அவனை வாழவைப்பது உயிர் - ஆவி ! அருவமும் உருவமும் சேர்ந்தால் மட்டுமே வாழ்வு ! - ஒரு மனிதன் - ஒரு லிங்கம் !

ஒரு மனிதன் ஒரு செயலை செய்யும் போது அவன் மட்டுமே தனித்தவனாக அந்த செயலை செய்வதில்லை

நல்ல செயல்களை செய்யும் போது அந்த மனிதனுடன் நற்செயல்களுக்கான ஆவி மண்டல சக்திகளும் சேர்ந்தே செயல்படும் அந்த ஒரு மனிதனுடன் ஆயிரம் ஆவி மண்டல சக்திகள் சேர்ந்து செயல்படும் என்பதே சகஸ்ர லிங்கம் !!

அது போல தீய செயல்களை ஒரு மனிதன் செய்யும் போதும் பல அசுர ஆவிகள் அவனுடன் சேர்ந்து அந்த செயலை செய்யும் !

ஒரு மனிதன் எந்த அளவு தனித்தவனாகவும் அல்லது எந்த அளவு ஆவி மண்டல சக்திகளுக்கு இடம் கொடுத்தவனாகவும் இருக்கிறான் என்பதில் அளவு மாறுபாடு இருக்கலாம்

ஆனால் ஆவி மண்டல தொடர்பு இல்லாமல் மனிதன் செயல்படுவதில்லை !

சாதாரன மனிதனாக இல்லாமல் யாரெல்லாம் கொஞ்சம் திறமையுள்ளவர்களாக அது எவ்விசயமாக இருந்தாலும் ஆவி மண்டல பின்னணியில்லாமல் பிரபலமடைய முடியாது

ஆவி மண்டல பின்னணியில்லாமல் அரசியல் தலைவராக முடியாது

நடிகர்கள் எல்லோரும் எம் ஜி யாரைப்போல முதல்வராகலாம் என கணவு கண்டு முயற்சித்து ஓய்ந்து போகவில்லையா ?

யாரும் எதிர்பாராமல் திடீரென ஜெ பெரும் ஆதிக்க சக்தியாக வெளிப்படவில்லையா ?

தலைவர்கள் ; சாதனையாளர்கள் ; சித்தர்கள் ; குருமார்கள்  ஞானிகள் என்று யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் அவர்களை சில ஆவி மண்டல சக்திகள் தேர்ந்து கொண்டு அவர்கள் பின்னால் இருந்து செயல்படுகின்றன என்பதுவே நிதர்சனமானது 


இன்னும் இதை ஒரு எளிய உதாரணத்தின் மூலமாக விளக்கலாம் :


இன்றைக்கு சாதாரணமாகவே மது குடிக்கும் பழக்கம் பலருக்குள்ளது அவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் அங்கு பல ஆவிகள் ஒவ்வொரு உடலை சார்ந்து கொண்டு குடித்துக்கொண்டிருக்கும் 


என்றைக்காவது ஒரு நாள் குடிக்கும் ஒரு மனிதன் இப்படி ஒரு ஆவி அவனை சார்ந்து கொள்ள அடிக்கடி இடம் கொடுக்கும் போது அவர்களுக்குள் பிணைப்பு அதிகமாகி விட்டால் அவன் குடிகாரன என்று உலகம் முழுதும் விளம்புகிற அளவு மொடாக்குடியன் ஆகி விடுவான் !
 
குடும்பத்தார் படுகிற இன்னல்கள் ; கேவலங்கள் ; பொருளாதார சீர் கேடுகள் என உண்டாகிற சிக்கல்களை நினைத்து இந்தக்குடி வேண்டாம் வேண்டாம் என்று சில வேளைகளில் நினைத்தாலும் ; அந்த நேரம் ; சூழ்நிலையை அந்த ஆவி உருவாக்கி அவனை குடிக்க வைத்து விடும்

இவனுக்கு சாவு வராதா ? உயிரோடு இருந்து நாளும் குடும்பத்தை அழித்து கேவலப்படுத்தி இம்சிப்பதை விட இவன் இல்லாவிட்டாலும் குடும்பத்தினர் பிழைத்துக்கொள்வார்களே என்பது போல உள்ள நிலைமைகளில் அந்த குடிகாரனுக்கு சாவோ நோவோ வரவே வராது காரணம் அவனைப்பயன்படுத்தி அந்த ஆவி குடித்துக்கொண்டிருப்பதால் அவனின்  உடல் கெடாது முழு குடுமபத்தை சின்னா பின்னமாக்கியயபிறகுதான் அவனுக்கு சாவு வரும்

ஆவி மண்டல பின்னணியில்லாமல் அறைகுறையாக குடிப்பவர்களுக்கு வியாதி வந்து விடும் ஆனால் ஆவிகள் குடிப்பதற்கு பயன்படும் நபருக்கு வியாதி வராது

ஆகவேதான் மனிதன் தனித்தனவல்ல ; அவன் ஆவி மண்டல சக்திகள் செயல்படும் ஒரு பொதுத்தளம் என்பதை சகஸ்ரலிங்க தத்துவமாக இந்து தத்துவம் விளம்பிக்கொண்டுள்ளது !


சரீரத்தில் எப்படி சகஸ்ரலிங்க தத்துவமோ அவ்வாறே ஆத்மாவிலும் சகஸ்ராலிக தத்துவம் செயல்படுகிறது

ஆத்மா என்பது அதில் எந்த விஷயம் வேண்டுமானாலும் நுழைந்தாலும் வாங்கி வைத்துக்கொள்கிற ஹார்ட் டிஸ்க் – ஞாபக பெட்டகம் போல ! எப்போதோ கண்ணால் பார்த்தது ; கேட்டது ; விளையாட்டாக பேசி சிரித்தது என எல்லா விசயங்களையும் உள்ளே வாங்கி அடி ஆழத்தில் வைத்துக்கொள்ளும் .

பிறந்ததிலிருந்து 50 வருடமாக செய்யாத ஒரு வேலையை திடீரென ஒருவர் செய்வதில்லையா ? எந்த புத்தில் எந்த பாம்பிருக்கும் என யார் கண்டது ? உடனே அவர் மோசம் என வசை பாடக்கூடாது ! 50 ஆண்டுகாலம் அவர் நல்லவாராகவே தன்னை கட்டுப்படுத்தி வாழ்ந்தாரே ? அது மதிப்பிலாத ஒன்றல்ல ! மனிதன் – மனித ஆத்மா ஒரு பொதுத்தளம் – கேவலமாக சொன்னால் கார்ப்பரேசன் குப்பக்கிடங்கு !!

ஆத்மாவில் எது வேண்டுமானாலும் இருக்கும் ! பல பிறவிகளில் நாம் அறிந்தவை ; 

அனுபவித்தவை புதைந்திருக்கும் ;சந்தர்ப்பமும் சூழ்நிலையும் வாய்த்தால் பொத்துக்கொண்டு வெளியே வந்து விடும்

அதனால்தான் ` வாசனை` என்றொரு வார்த்தையை போட்டார்கள் ஆத்மாவில் உள்ள வாசனை – பெருங்காயத்தை எடுத்து வெளியே தூர எரிந்து பல முறை கழுவிய பிறகும் வரும் வாசனை போல ஆத்மாவில் வாசனை ஒட்டிக்கொண்டிருக்கும் அதை ஆவி மண்டல சக்திகள் பயன்படுத்தும் ; அந்த வாசனையை துண்டி வெளியே வர வைக்க ஏற்ற சந்தர்ப்ப சூழ்நிலையை – நபர்களை அங்கே கொண்டு வந்து சேர்த்து விடும் . நமக்குள் என்ன இருக்கிறது என்பது நமக்கே தெரியாது ஆனால் ஆவி மண்டல சக்திகளுக்கு நன்கு தெரியும் !

சாதாரண மனிதர்களை உலக இச்சைகள் – தவறுகள் – பாவங்களில் துண்டி அவைகளை செய்ய வைத்து பாவ கணக்கை கூட்டும் அசுர ஆவிகள் நல்ல பாதையில் ஆன்மீக வாழ்வில் இறங்குவோம் என ஒரு மனிதன் முடிவு செய்த உடன் அவனை கடவுளை நோக்கி முன்னேற விடாமல் எந்த எந்த மாயையில் வீழ்த்துவது – கட்டி வைப்பது – குற்றம் சாட்டுவது என்பதில் இந்த அசுர ஆவிகள் வரிந்து கட்டிக்கொண்டு இறங்கி விடும்

நல்லவர்களுக்கு சோதனை மேல் சோதனை வரும் என்பது இந்த விகளாலேயே ! அப்படியானால் என்னதான் செய்வது ?

முதலாவது நம்மைசுற்றிலும் ஆவி மண்டல சக்திகளின் செயல்பாடு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்

அசுர ஆவிகள் நம்மை காலை வாரி விட எவ்வளவு பிரயத்தனமாக இருக்கிறதோ அதுவும் உண்மை ; அதுபோல நம்மை கைதூக்கி விட தேவ சக்திகள் ஆயத்தமாகவே உள்ளன . ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் !

அசுர சக்திகள் அழைத்தாலே போதும் வந்து விடுவார்கள் நம்மை ஆட்கொண்டு இன்னும் எவ்வளவு கெடுக்கவேண்டுமோ அவ்வளவு கேடுகளுக்குள் அழைத்து சென்று விடுவார்கள்

ஆனால் தேவ சக்திகள் அவர்களை எவ்வளவுதான் அழைத்தாலும் கெஞ்சினாலும் கொஞ்சினாலும் வரமாட்டார்கள் ; உதவ மாட்டார்கள் – கடவுள் சொன்னால் மட்டுமே செய்வார்கள்

அசுர சக்திகள் தாமாகவே செயல்படுவார்கள் ; ஆனால் தேவ சக்திகளோ கடவுள் சொன்னால் மட்டுமே செயல்படுவார்கள் 

 
கடவுள் ஒருவரை அழைத்தால் போதும் ; சார்ந்து கொண்டால் போதும் அத்தனை தேவ சக்திகளும் அவர்களை அழைக்காமலே நமக்காக செயல்படுவார்கள்

ஆகவே ஆன்மீக வாழ்வில் நடைபோட அன்றாடம் கடவுளிடம் பிராத்தனை மிக அவசியம் அத்தோடு சகஸ்ரலிங்க தத்துவப்படி நம்மில் தேவ விஷயங்கள் ஆழுமையை அதிகரிக்க ஏதாவது ஒரு சத் சங்க தொடர்பு – வாரம் ஒரு முறையாவது கூட்டு பிரார்த்தனை அல்லது வழிபாடு அவசியம்

வாரம் இரு முறையாவது ஏதாவது ஒரு கோவிலில் பிரார்த்தனை அதிகம் பலனளிக்கும் ! கோவில்களில் ஆகம நியமங்களின் படி அருள் ஆற்றல் மூர்த்தங்களில் குவித்து வைக்கப்படுகின்றன

அந்த மூர்த்தங்களை குருவாக வைத்து அங்கு காட்டப்படும் அருட்பெரும்ஜோதியாகிய இறைவனை வழிபாட்டு அங்கு ஓரிடத்தில் அமர்ந்து தியானம் செய்யுங்கள் . வீட்டில் செய்யப்படும் தியானத்தை காட்டிலும் கோவிலில் தியானம் செய்வது ஆயிரம் மடங்கு பலனுள்ளது



நாரயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன் !

ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே    
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஓரிறைவனையே துதிக்கிறோம்
சிவனின் நாமத்தினாலே    
ஓம் நமோ சிவாய !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி