Total Pageviews

Tuesday, February 19, 2013

அச்சம் தவிர்க்கும் அரு மருந்து !!

நாராயணன் நாமத்தினாலே விலகிப்போ என நாய் முதல் பேய் வரை துறத்தலாம்!!
ஏனென்றால் சகலமும் அவருக்குள் உற்பவித்து அவருக்குள்ளேயே அழிகின்றன ! ஆகவே அந்த நாமத்தை உச்சரித்தால் அவரைத்தவிற அனைத்தையும் ஆளுமை செய்யலாம் !!

கீதை 9:4 எனது யுகபுருஷன் என்ற அரூபத்தண்மையில் இந்த முழு பிரபஞ்சமும் பொதிந்திருக்கிறது ! எல்லாம் எனக்குள் இருக்கிறது ; ஆனால் நானோ அவைகளை கடந்தும் இருக்கிறேன் என்பது எனது இயல்பாகும் !! :

கீதை 9:5 நானே படைக்கபட்ட எல்லாவற்றையும் நிர்வகித்தாலும் ; நானே எங்கும் விரவி இருந்தாலும்  அசுரர்களின் மாயையால் படைப்பினங்கள் என்னில் நிலைபெறாமால் சுயம் - தன்முணைப்படைகின்றன !! அனைத்தும் என் மூலமாக கடவுளால் படைக்கப்படவையே ஆயினும் என்னில் ஒன்றாமல் கலகம் செய்கின்றன !!

கீதை 9:6 பலத்த காற்று எங்கும் சுற்றிசுழன்று வீசினாலும் அது வானத்தில் நிலைபெற்றிருப்பதைப்போல எல்லா உயிரினங்களும் சுயமாய் வினையாற்றினாலும் என்னிலேயே நிலைத்திருக்கின்றன என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்வாயாக !!

கீதை 9:7 குந்தியின் மகனே ! யுக முடிவில் எல்லா ஜட வெளிப்பாடுகளும் எனது அரூபத்தில் மறைகின்றன ! அதே போல அடுத்த யுகத்தில் நானே என்னிலிருந்து அவற்றை வெளிப்படுத்துகிறேன் !!

கீதை 9:8 இந்த முழு பிரபஞ்ச இயக்கமும் எனது ஆளுகையிலேயே உள்ளது ! எனது சித்தத்தால் அவைகள் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தப்படுகின்றன ! அதே போல முடிவில் அவைகள் மீண்டும் மீண்டும் அழிக்கவும் படுகின்றன !!


நாம் பயணம் தொடங்கும்போது வண்டியின்மீது கையை வைத்து நாராயணன் நாமத்தினாலே விபத்தின் ஆவிகளே விலகிப்போ கோளாறுகளே விலக்கிப்போ என சொல்லிவிட்டு பயணம் செய்யுங்கள் எந்த பிரச்சினையும் வராது !!

எதன்மீதும் நாரயணன் நாமத்தை பிரயோகிக்கலாம் !

முஸ்லீம்கள் கடவுளிடம் வேண்டுதல் செய்வதாக இருந்தால் உளுவு அதாவது சுத்தம் செய்துவிட்டு பிறகு பிரார்திக்க வேண்டும் ! கடவுளை அணுக மனிதனால் நேரடியாக முடியாத அளவு அவர் ஆற்றலும் புனிதமும் அதிகம் ! அதனால் அல்லாவின் திருப்பெயரால் துவங்குகிறேன் என சொல்லிவிட்டுத்தான் அவர்கள் பிரார்திக்கவேண்டும் !!

கிரிஸ்தவர்கள் இயேசுவின் நாமத்தினால் பிரார்திக்க கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளனர் !

வேதாத்திரி மஹரிஷி கூட அருட்காப்பு சொல்லிவிட்டு யோகப்பயிற்சி செய்யகூறியுள்ளார் !!

ஆதி இந்து மதத்திலும் சற்குருவின் மூலமாக மட்டுமே கடவுளிடம் பிரார்திக்கவேண்டும் என்று இருந்தது ! ஆனால் காலப்போக்கில் அதை மறந்துவிட்டார்கள் !!


அந்த சற்குரு யார் மூலமாக கடவுள் சகலத்தையும் படைத்தாரோ ; அல்லது யாருக்குள் சகலமும் உற்பவித்து யாருக்குள் சகலமும் அழிகிறதோ அந்த நாராயணனே சற்குரு ! அவரே அதர்மம் பெருகும்போது யுகங்கள் தோறும் பூமியில் அவதரித்து தர்மத்தை நிலைநாட்ட வேதமும் கொடுக்கிறவர் !

ராமராகவும் கிருஷ்ணராகவும் இயேசுவாகவும் வந்தவர் அவரே ! ஆதிதமிழர்கள் கொண்டாடிய முருகன் அவரே ! சிவனால் குரு என சுட்டப்பட்டவர் அவரே !

பரமாத்மா அவரே ! காப்ரீயேலாக முஹமதுவை ஆட்கொண்டு வேதம் இறக்கியவரும் அவரே !

அந்த நாரயணன் நாமத்தினாலே கடவுளை வேண்டினால் உளுவும் அருட்காப்பும் செய்யவேண்டியதில்லை ! சுத்தமற்ற நமது குறைகள் யாவும் நிவர்த்தி செய்யப்படும் !

நாரயணன் நாமத்தினாலே படைக்கப்பட்ட அனைத்தின்மீதும் ஆளுமையும் செலுத்தலாம்!

நாராயணன் நாமத்தினாலே நீங்கள் சந்திக்கப்போகும் நபரை மனதிற்குள் வாழ்த்துங்கள் !!

உங்கள் குழந்தைகளை தினந்தோறும் கைவைத்து நாரயணன் நாமத்தினாலே கடவுள் உன்னை ஆசிரவதிப்பாராக என்று கூறுங்கள் !!

உங்களுக்கு இடைஞ்சல் கொடுக்கிற நபரை மனதில் நாராயணன் நாமத்தினாலே கடவுள் உன்னை கடிந்துகொள்ளுவாராக என கூறுங்கள் !!

நாராயணன் நாமம் நிச்சயம் அவரை அழிக்காது ! அவரை திறுத்தும் அல்லது உங்களை விட்டு விலகியாவது அந்த நபர் சென்றுவிடுவார் ! உலகில் நடக்கும் எல்லா தீமைகளுக்கும் மனிதர்கள் மட்டும் காரணமில்லை ; அவர்களை பயன்படுத்தி அசுர சக்திகளும் அவர் கூட சேர்ந்து அவர் ஒரு அடி அடிக்க நினைத்தால் அவரைத்தூண்டி பத்து அடி அடிக்க வைக்கும் ! மனிதர்கள் அமைப்பு அவர்களை அவர்கள் அறியாமலேயே அவர்கள் நல்லது செய்ய முயலும்போது தேவதூதர்களும் சேர்ந்து அதிக நண்மை செய்வதாகவும் அவர்கள் தீயது செய்ய முயலும்போது அசுரர்களும் சேர்ந்து அதிக தீமை செய்வதாகவும் இருக்கிறது ! மனிதனைச்சுற்றிலும் எப்போதும் ஆவிமண்டல இயக்கம் நடந்துகொண்டே இருக்கும் ! நாமும்கூட இரண்டு சக்திகளுக்கும் மாறிமாறி இடம் கொடுப்பவராகவே இருப்போம் ! இது நிதர்சணம் !!

எனவே நாராயணன் நாமத்தினாலே கடவுள் கடிந்துகொள்ளூம்படியாக வேண்டினால் அசுர ஆவிகளின் பலம் -- தூண்டுதல் நமக்கு விரோதமான மணிதர்களின் மீது செயல்படுவது எதிர்க்கபடும் ! அதனால் தீமையின் வேகம் குறையும் ! நாம் எவ்வளவுக்கெவ்வளவு பிரார்திக்கிறோமோ அவ்வளவு பலமிழக்கும்போது அந்த மனிதர்கள் திருந்தவோ அல்லது அந்த அசுர ஆவிகளே தங்களை தற்காத்துக்கொள்ள அந்த நபரை விலக்கி கொண்டுபோய் விடும் !

மனிதனுடைய செயல்பாடுகள் அனைத்தையும் ஆவிமண்டல பின்னனியுடன்தான் நிதானிக்கவேண்டும் ! `` நோய்க்கும் பாரு பேய்க்கும் பாரு `` என்று முன்னோர்கள் சொன்ன சாரம் இதுவே !!
எல்லாப்பாவங்களையும் ; மனிதர்கள் திருந்த முயன்றால் கடவுள் எளிதாக மண்ணீப்பதன் பின்னனி அந்த பாவங்கள் அனைத்திற்கும் மனிதன் மட்டும் காரணமில்லை அவனைப்பயன்படுத்திய அசுர சக்திகளும் காரணம் என்பதுவே !

கீதை 9:22 ஆனால் யார் எனது யுகபுருஷன் என்ற அரூபத்தை உணர்ந்து தியானித்து உள்ளர்ந்த பக்திதொண்டுடன் என்னை பின்பற்றி கடவுளை வழிபடுகிறார்களோ அவர்களின் குறைவை நான் சுமந்து நிறைவை காத்து பெருக்குகிறேன் !!

கீதை 9:26 ஒருவர் என் மூலமாக உள்ளார்ந்த பக்தியுடன் இலையையோ , பூவையோ , கணியையோ அல்லது தண்ணீரையோ சமர்ப்பித்தாலும் அதனை கடவுள் அங்கீகரிப்பார் !!

கீதை 9:27 நீ எதை செய்தாலும் ; எதை உண்டாலும் ; எதை கொடுத்தாலும் ; எதை சமர்பித்தாலும் எந்த புண்ணிய சடங்குகளை செய்தாலும் அதை கடவுளுக்கு பக்திதொண்டாகவே என் மூலமாக அர்ப்பணிப்பாயாக !!

கீதை 9:28 இவ்வாறு செயல்பட்டால் நீ பாவபுண்ணிய விளைவுகள் என்ற கர்மத்தளையிளிருந்து விடுபட்டவனாவாய் ! மனதை என்னிலே நிலைபெற செய்து பலன் விளைவுகளில் பற்றற்றவனாய் செயல்பட்டால் நீ விடுதலை பெறுவாய் ! என்னிடமும் வந்து சேருவாய் !!

கீதை 9:29 யாரையும் நான் பட்சாபாதம் செய்வதுமில்லை ; யாரையும் எதிரியாகவும் கருதுவதுமில்லை ! எல்லோரையும் சமமாகவே பாவிக்கிறேன் ! ஆனால் யார் கடவுளுக்கு பக்திதொண்டாக என்னை பின்பற்றுகிறார்களோ அவர்கள் எனக்கு நண்பனும் என்னில் நிலைத்தவருமாவார் ! நானும் அவர்களுக்கு நண்பனுமாவேன் !!

கீதை 9:30 இத்தகு பக்திதொண்டில் நிலைத்திருப்போர் ஒருவேளை தன்னை அறியாமல் கொடுமையான காரியத்தை செய்ய நேரிட்டாலும் அவர் புண்ணியராகவே கருதப்படுவர் !!

கீதை 9:31  அவர் இந்த தூய மார்க்கத்தில் நிலைத்திருப்பதால் விரைவில் நேர்வழி பெற்று தூய்மையடைந்து மங்காத சமாதானத்தை அடைவார் !! ஆகவே அர்ச்சுணா ! எனது சீடன் ஒருபோதும் அழிவதில்லை என்பதை உரத்து சொல்வாயாக !!

கீதை 9:32 யார் என்னிடம் அடைக்கலம் பெற்றார்களோ அவர்கள் பிறப்பால் எத்தனை தாழ்ந்தவர்கள் ஆயினும் ; பெண்ணானாலும் வணிகர்களானாலும் கடைனிலை ஊழியர்களானாலும் உண்ணதமான எனது இருப்பிடத்தை அடைவது திண்ணம் !!

கீதை 9:33 தன்னை உணர்ந்து தெளிந்த ஆண்மீகவாதிகள் ; சிறந்த பக்தர்கள் ; புனிதமான ஆட்சியாளர்கள் போலவே எனது சீடர்கள் உண்ணதமடைவர் !! ஆகவே துன்பமும்துயறமும்  நிறைந்த தர்காலிகமான இப்பூவுலகில் வந்ததின் நோக்கம் ஈடேறும் வகையில் என் மூலமாக பக்திதொண்டாற்றுவாயாக !!

கீதை 9:34 மனதை எப்போதும் என்னில் நிலைபெற செய்து ; எனது சீடனாகி ; எனது வழிகாட்டுதல்களை கைக்கொண்டு கடவுளை வழிபடுவாயாக ! அப்போது முற்றிலுமாக என்னுள் நீ உள்வாங்கப்பட்டு எனது உண்ணத நிலையை நிச்சயம் அடைவாய் !!


பயன்படுத்தி பலனைக்காண்க !!


ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே    
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி