27 , 28 /1/ 2013 வடலூர் தைப்பூச திருவிழாவிற்கு சென்று வந்தேன் !
வள்ளலாரின் ஆசியை நாடி நான் பயணமனதும் . சித்தி வளகத்தில் அவரால் எனக்கு ஏதேனும் அநுக்கிரகம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் வீண் போகவில்லை !
மரணமில்லா பெருவாழ்வு என்பதும் பிறவாப்பெரு நிலை என்பதும் ஒன்று என்பது போல ஒரு தெளிவில்லாத நிலையில்தான் நானும் இதுவரை இருந்தேன் !
ஆன்மீக வட்டாரத்திலும் பலர் இரண்டையும் ஒன்று என்பதுபோலவே பாவித்துக்கொண்டுள்ளனர் !
பிறவாப்பெரு நிலை என்பது சூனியவாதம் அல்லது நவீன நாத்திகவாத வார்த்தைகளில் ஒன்று என்பதை சித்தி வாளகத்தில் உணர்த்தப்பட்டேன் !
ஆன்மீக வாழ்வில் சாதகனை சாதுரியமாக ஏமாற்றும் அசுர சரக்கு சூனிய வாதம் என்பது ! அது முன்னேற விடாமல் திசையை மாற்றி விடும் !
அடைய வேண்டிய இலக்கு கடவுள் ! ஆனால் அவரைப்பற்றிய சந்தேகத்தில் இருப்பவர்கள் எதை நோக்கி முன்னேற முடியும் ? அவரை இருட்டடிப்பு செய்து விட்டு அடையவேண்டிய மேன்மைகள் பல உள்ளதாக சூனியவாதம் பல வார்த்தைகளை பிரபலமடைய செய்துள்ளது !
அவற்றில் ஒன்றே `` பிறவாப்பெரு நிலை `` என்பது !
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவ னடி சேராதார் - என்றொரு குறள் பலருக்கு வழிகாட்டி !
பிறவிப்பெருங்கடல் நீந்தி கடப்பது என அவர் சொன்னதை பிறவாப்பெரு நிலை என அர்த்தப்படுத்துவது தவறு !
மரணமில்லாத பெரு வாழ்வு என்பதே சரியானது !
ஆத்துமா அழிவற்றது என்பது அனைத்து வேதங்களாலும் நிரூபணமான ஒன்று ! அந்த ஆத்துமா பூமியை கடராதவரை பிறந்து பிறந்திளைப்பது அதன் விதியாய் உள்ளது ! யார் பூமியை கடருவார்களோ அவர்களே மரணமில்லாத பெரு வாழ்வு அல்லது நித்திய ஜீவன் உள்ளவர்களாக மாறுவார்கள் !
வள்ளலார் எங்கும் மரணமில்லாத பெரு வாழ்வு பற்றி மட்டுமே பேசியுள்ளாரே தவிற பிறவாப்பெரு நிலை பற்றி குறிப்பிடவே இல்லை ! வைணவம் , யூதம் , கிரிஸ்தவம் , இசுலாம் அனைத்தும் ஒரே குரலில் பரலோகம் சேர்வது பற்றியே வாக்களிக்கின்றன !
மரணமில்லாத பெரு வாழ்வில் அவர்கள் தேவதூதர்களைப்போல இருப்பார்கள் ; ஆண்பெண் பேதத்தை கடந்து அண்ணகர்களைப்போல இருப்பார்கள் என்பது இயேசுவின் வெளிப்பாடு !
மாற்கு 10 :35.
மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண் கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை.
36. அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்.
மரணமில்லாத நிலையை அடைந்து அவர்கள் பரலோகத்தில் ஒரு புதுமாதிரியான வாழ்வுக்குள் பிரவேசிக்கிறார்கள் ! அங்கு ஒரு வாழ்வு உள்ளது ! இல்லாமல் போவதல்ல ; அல்லது கடவுளுடன் இரண்டற கலந்து விடுவது ; முக்தி என்பது போல தெளிவற்றவர்களின் அலங்கார வார்த்தைகளை போல அல்ல !
மனிதனாக பிறந்த யாரும் கடவுளுடன் நேரடியாக கலந்து விட முடியாது ! இடையில் ஒரு நிலை - உலகம் உள்ளது ! அதை அடைவதற்கே தகுதியடையாத நிலையில் அங்கு சென்ற பிறகு மட்டுமே உணர முடியக்கூடிய விசயங்களை பேசுவதால் என்ன பயன் ?
கீதை 8:15 பக்தியில் யோகம் விளைந்த மகத்துவமான ஆத்துமாக்கள் யுகபுருஷனின் வாசஸ்தலத்தை அடைந்தபிறகு துயறங்கள் நிறைந்த தற்காலிகமான இப்பூவுலகுக்கு எப்போதும் திரும்ப வரவே மாட்டார்கள் ; ஏனென்றால் அதிஉண்ணத வெளிச்சத்தை அவர்கள் அடைந்து கொண்டார்கள் !
கீதை 8:16 பிறப்பும் இறப்பும் திரும்பதிரும்ப சம்பவிக்கும் இப்பூவுலகில் வளமிக்க இடங்கள் முதல் வளம்குறைந்த இடங்கள் வரை எங்கும் துயறங்களே நிறைந்துள்ளன ; ஆனால் யுகபுருஷனாகிய எனது வாசஸ்தலத்தை வந்தடைந்தவனோ ``மரணமில்லாத பெரு வாழ்வு` அடைகிறான் !
கீதை 8:20 பிறப்பு இறப்பை கடந்த நித்தியஜீவன் அருளப்பெற்ற ஆத்துமாக்கள் மரணமில்லாத பெரு வாழ்வு என்றொரு உண்ணதமான நிலையை அடைகின்றன ! அவைகள் ஒருபோதும் மரிப்பதில்லை ! இவ்வுலகம் முழுமையும் அழிவுக்குள்ளான பிறகும் அவைகள் மாத்திரம் மரணமில்லா பெருவாழ்வில் நிலைக்கின்றன !
கீதை 8:21 மரணமில்லாவாழ்வு என்று தத்துவஞானிகளால் வர்ணிக்கப்படும் அந்த உண்ணத இலக்கை அடைந்த பிறகு ஒருவன் ஒருபோதும் திரும்ப பூமிக்கு வருவதில்லை ! அந்த இடமே எனது பரலோக வாசஸ்தலமாகும் - யுகபுருஷனின் இருப்பிடமாகும் !
கீதை 8:22 சகல ஆத்துமாக்களையும் விட பெரியவரான பெருமாள் - யுகபுருஷன் கலப்படையாத பக்தியால் எளிதில் அடையப்படக்கூடியவரே ! பரலோக வாசஸ்தலத்தில் அவர் இருந்தாலும் அவர் மூலமாக படைக்கபட்ட இந்த பூலோகத்தில் எங்கும் விரவியிருக்கிறவராகவும் ; உண்டான சகலமும் அவருக்குள்ளேயே நிலைபெற்றிருக்கிறவராகவும் உள்ளார் !
கீதை 8:23 பரதவர்களுள் சிறந்தோனே ! இப்பூவுலைகை விட்டு கடறும் யோகிகள் பலர் மீண்டும் இப்பூமிக்கு திரும்ப வருவார்களா அல்லது வரமட்டார்களா என்பதை அவர்கள் கடறும் காலத்தை பொருத்து நிர்னயைக்கலாம் என்பதை உணக்கு அறிவிக்கிறேன் !
கீதை 8:24 யார் உண்ணதமான கடவுளை உணர்ந்து அறிந்தவர்களோ அவர்கள் ஒளிமயமானவரான கடவுளின் ஆதிக்கத்திற்குள்ளாகி ஒளிமயமாகி பரலோகத்தை அடைவர் ! வளர்பிறையிலோ அல்லது உத்திராயணத்திலோ ஒரு நாளின் பரிசுத்தமான பகல்நேரத்தில் அவர்கள் பூமியை கடறுவார்கள் ! அவர்கள் திரும்ப வருவதில்லை !
கீதை 9:25 யார் ஞானிகளையும் மஹான்களையும் வழிபடுகிறார்களோ அவர்கள் அவர்கள் பிறவியெடுத்துள்ள இடத்தில் பிறப்பர் ! யார் முன்னோர்களை வழிபடுகிறாற்களோ அவர்களும் அவர்கள் பிறவியெடுத்துள்ள இடத்தில் பிறப்பர் ! யார் அசுரர்களை வழிபடுகிறாற்களோ அவர்களும் அவர்களின் ஆதிக்கம் உள்ளோரிடத்தில் பிறப்பர் ! ஆனால் யார் என் மூலமாக கடவுளை வழிபடுகிறார்களோ அவர்கள் எனது நித்திய இடத்தை அடைந்து மரணமில்லா பெரு வாழ்வு பெறுவர் !!
வைகுண்டம் ; சிவலோகம் அல்லது பரலோகத்தில் பிரவேசித்த பிறகு அங்கிருந்தே கடவுளை பற்றிய நேரடி அணுபவத்தை பெற முடியும்
இதுவே நம்மைப்போன்ற சாதாரண மனிதர்களுக்கு உள்ள பாதை ! இந்த பாதையே ராமராலும் கிருஷ்ணராலும் வலியுறுத்தப்பட்டு வைணவமாக உபதேசிக்க பட்ட்து !
இயேசுவால் பரலோக ராஜ்ஜியத்தை தேடுங்கள் என உபதேசிக்க பட்டதும் இதுவே !
ஆனால் தங்கள் மூலமாக அவர்கள் வழிபட சொன்ன கடவுளை விட்டுவிட்டு அவர்களையே வழிபடுகிறவர்களாக மனிதர்கள் மாறிக்கொண்டனர் !
தங்களுக்குள் என் கடவுள் பெருசு உன் கடவுள் பெருசு என சண்டையும் போடுவதில் உலகத்தின் கவணத்தை ஈர்த்து யாரும் கடவுளின் பக்கமே போகாதபடி தடை செய்வது அசுர மாயை !
இந்த மாயையை உடைக்கவே பரலோக பாக்கியம் ஏற்கனவே பெற்றவரான வள்ளலார் கடவுளின் திருப்பணியாக மீண்டும் பூமிக்கு வருவிக்க உற்றார் !
நம்மை போன்ற சில ஆத்துமாக்கள் பூமியிலேயே அடுத்தடுத்த பிறவியெடுத்து ஞானவளர்ச்சி அடைந்து மரனமில்லா பெருவாழ்வை அடையும்போது வருவிக்க உற்றேன் என சொல்லமுடியாது
யார் பூமியை கடந்தவரோ அவர் மீண்டும் பூமிக்கு வந்தால் அது வருவிக்க உற்றது !
அப்படிப்பட்டவர்கள் ஏற்கனவே அண்ணகரானதால் பூமிக்கு வரும்போது ஆண்பெண் பேதம் அற்றவராகவே இருப்பார்கள் !
வள்ளலார் இப்படிப்பட்ட தேகம் உள்ளவராக பிறவியிலேயே அவதரித்தார் ! அவர் அருட்பெருஞ்சோதியான ஏக இறைவனை மட்டுமே வழிபடுங்கள் என்றார் !
அன்பு கருணை தயவு இம்மூன்றும் இறைவனை தரிசிக்க உபயமாகும் ! ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் !
வள்ளலாரால் உபதேசிக்க பட்ட்து `` சமரச சுத்த சண்மார்க்கம் ``
அது யுகபுருஷன் இறைதூதர் இயேசுவால் அங்கீகரிக்கபட்டதுவுமாகும் !
மத்தேயு 5
9. சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள் ---- சமரசம் !!
8. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.-------- சுத்தம் !!
7. இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.------- ஜீவகாருண்யம் - சண்மார்க்கம் !!
சமரச சுத்த சண்மார்க்கம் !!
வள்ளலாரின் முதல் ஐந்து திருமுறைகளை அவர் பரமேறும் முன்னரே பதிப்பித்து அதைக்குறித்து அவர் பல உபதேசங்களை செய்ததால் சுத்த சண்மார்க்கம் பலரால் புரிந்து கடைபிடிக்க பட்டு ஆழமாக வியாக்கியானமும் செய்யப்பட்டு வருகிறது !
ஆனால் ஆறாம் திருமுறை அதற்கேற்ற காலம் கணியாததாலும் அதை வியாக்கியாணம் செய்ய நியமிக்கப்பட்டு வள்ளலாரால் அனுக்கிரகம் செய்யப்பட்டவருமான ஒரு அடியவர் வரவேண்டி உள்ளதாலும் அதை பதிப்பிக்க வள்ளலார் நாட்டம் காட்டவில்லை ! அதை எழுதி நிறைவு செய்தாலும் வள்ளலார் பதிப்பிக்க அனுமதிக்கவில்லை !
அந்த வேதமே சமரச வேதம் என அதில் மறைபொருளாக்க பட்டுள்ளது !
அந்த வேதம் வெளிப்படையாகும் போது `` சமரச சுத்த சண்மார்க்கம் `` முழுமையும் உச்சத்தையும் அடையும் !
இப்பூவுலகம் முழுமையும் சமாதானத்தை உண்டாக்கும் ; பகை வெறுப்பு மறைந்து அனேகர் அருட்பெருஞ்சோதியாகிய ஏக இறைவனை மார்க்க பேதங்களை கடந்து தேடுவார்கள் !!
அந்த நபரும் வள்ளலாரால் முன்குறிக்கபட்டுள்ளார் ! வருவார் அழைத்து வாடி என்ற பாடலின் மறைபொருள் அதுவே !
இப்பாடலில் வள்ளலார் இருவரை குறிப்பிடுகிறார் !!
ஒருவர் வடலூருக்கு தென் திசையிலிருந்து வடலூருக்கு வரவேண்டியவர் ! அவர் வரும்போது அனேக மேன்மைகளை ஞான அனுக்கிரகங்களை பெற்றுக்கொள்ளுவார் ! அதை உலகிற்கும் பெற செய்வார் ! வள்ளலாரின் சமரச சுத்த சண்மார்க்கம் அவர் மூலமாக உச்சத்தை அடைவது கடவுளின் மற்றும் குருனாதர் வள்ளலாரின் திருவுள்ளமாய் உள்ளது !
அடுத்தவர் பாக்கியம் செய்த ஒரு ஆத்துமா ! பெண்ணாகவும் இருப்பார் - அவரே முன்னவரை வடலூர் கொண்டுவந்த சேர்க்க தூண்டுகோலாய் இருப்பார் !!
அந்த நபர் - இறைதூதரை விரைவில் தமிழகத்தில் வெளியாக்கும்படி ஏக இறைவனை வேண்டிக்கொள்ளுவோம் !!
நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய
சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய
சேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சேஷாய
நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
வந்தாற் பெறலாம் நல்ல வரமே.
திருவார்பொன் னம்பலத்ேத செழிக்குங்குஞ் சிதபாதர்
வருவார் சிவசிதம் பரபோதர் தெய்வச் சபாநாதர்.
கண்ணிகள்
சிந்தை களிக்கக்கண்டு சிவானந்த மதுவுண்டு
தெளிந்தோர்எல் லாரும்தொண்டு செய்யப் பவுரிகொண்டு
இந்த வெளியில்நட மிடத்துணிந் தீரேஅங்கே இதைவிடப் பெருவெளி இருக்குதென் றால்இங்கே வருவார்
இடுக்கி லாமல்இருக்க இடமுண்டு நடஞ்செய்ய
இங்கம் பலம்ஒன்றங்கே எட்டம் பலம்உண்டைய
ஒடுக்கில் இருப்பதென்ன உளவுகண்டு கொள்வீர்
என்னால் உண்மைஇது வஞ்சமல்ல
உம்மேல்ஆணை என்றுசொன்னால் வருவார்
மெல்லியல் சிவகாம வல்லி யுடன்களித்து விளையா டவும்
எங்கள் வினைஓ டவும்ஒளித்து
எல்லையில் இன்பந்தரவும் நல்லசம யந்தானிது
இங்குமங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தாற் பெறலாம்நல்ல வரமே.