-- இறைதூதர் ராமரின் உபதேசங்கள் ---
காமம் என்பது ஒரு பெரிய மரம் ! ஆசை என்ற கொடி அதைப்போர்த்தி மூடியிருக்கிறது ! அந்த மரத்திற்கு கணக்கிட இயலாத என்னற்ற கிளைகள் இருக்கின்றன ! அந்த கிளைகளின் மீது சுற்றி திரிகிற மனம் , தான் பெற விரும்பும் கனியை ஒரு நாளும் பெற முடியாது !
ஆபத்து ஏற்படும்போதும் ; மோகம் தங்களை ஆட்கொள்ளும் போதும் சோர்வடைந்து போகாத மக்கள் மிகவும் அபூர்வம் ! சுய நல லட்சியம் ஒன்று நிறைவேறியதுமே கர்வம் கொள்ளாதவர்கள் மிகவும் அபூர்வம் ! பெண்களின் கண் வீச்சுக்கு மனம் குழம்பாமல் இருக்கும் ஆண்கள் மிகவும் அபூர்வம் ! இத்தகைய அபூர்வமான மக்களை பொதுவாகப்பார்க்கவே முடியாது !
தான் விரும்பிய பொருள் கிடைத்து விட்டால் கூட மனம் ஒருபோதும் திருப்தியடைவதில்லை ! ஒட்டைப்பானையில் எவ்வளவுதான் தண்ணீரை ஊற்றினாலும் அது நிறைவதில்லை அல்லவா ? அதுபோல லவ்கீக இன்பங்களை அடைவதில் பெரிதும் ஆவல் கொண்டுள்ள மனம் எப்போதுமே காலிப்பானைதான் ! அதற்கு எந்த இடத்திலும் அமைதி கிடைக்காது ! கூட்டத்திலிருந்து பிரிந்து வழி காணாமல் தவிக்கும் மானைப்போல !
அலைகளைப்போல எப்போதும் கொந்தளிப்புடன் இருப்பதுதான் மனதின் இயல்பு ! சஞ்சலத்திளிருந்து அதற்கு அவ்வளவு சுலபத்தில் விடுதலை கிடைப்பதில்லை ! ஒரு விநாடி கூட அது அமைதியாக இருப்பதில்லை ! புலனின்பங்களை பின்பற்றி பல திசைகளிலும் கலக்கத்துடன் ஓடியபடியே இருக்கிறது !
இந்த மனம் என்னும் பேய்க்கு உன்மையில் இருப்பு என்பது அறவே கிடையாது ! வீணான கற்பனையின் மூலமாக அது ஒரு வடிவத்தை ஏற்கிறது ! அந்த பேயை அடக்கி ஆள்வது மிகவும் கடினம் ! அது நம்மை நெருப்பை விட மிகவும் அதிகமாக எரித்து விடக்கூடியது ! வஜ்ரத்தை விட கடினமானது ! புலன் விசயங்களை நோக்கி பாய்ந்த படியே இருக்கிறது ! மாமிசத்தை பார்க்கும் காகம் அதை உண்பதற்கு பாய்ந்தோடுவது போல மனமும் புலனின்பத்தை நாடி பாய்கிறது !என்றாலும் மறுகணமே தான் நாடிய பொருளை விட்டு விலகியும் சென்றுவிடுகிறது !குழந்தைக்கு இருப்பதைப்போன்ற சலன புத்தி மனதின் இயல்பாக இருக்கிறது ! எந்த ஒன்றிலும் நிலையாக அது இருப்பதே இல்லை ! நீர்ச்சுழல் இருக்கும் கடலைப்போலவே , மனமும் மனிதனை எங்கோ கொண்டுபோய் தள்ளி விடக்கூடியது ! கடலைக்கூட வற்ற அடித்து விடலாம் ; மலையைக்கூட பெயர்த்து விடலாம் ; நெருப்பை கூட சாப்பிட்டு விடலாம் ; ஆனால் மனதை அடக்குவது கடைனமான காரியமாகும் !
மரத்திலுள்ள இலை விரைவில் பழுத்து தரையில் உதிர்ந்து விடுகிறது ! அதைப்போன்றதே இந்த உடலின் நிலை ! பொய் ஞானத்தில் உதிப்பது இந்த உடல் ! ஆகவே கனவு நிலையைப்போல உடலும் மோக மயக்கங்களால் நிறைந்து இருக்கிறது ! உடலின் நிலையாமை வெட்ட வெளிச்சமான விசயம் !
உடலுக்கு நேரும் வயோதிகம் என்ற நிலையை வென்றவன் யாரும் இல்லை ! மனிதனுடைய ஆசை எதுவும் நிறைவேறாத படி வயோதிகம் அடக்கி விடுகிறது ! மாலை நேரத்தை தொடர்ந்து இருள் சூழ்வதைப்போல ; வயோதிகத்தை தொடர்ந்து மரணம் வருகிறது !
உடலில் உள்ளும் புறம்பும் இருக்கும் எல்லப்பொருள்களையும் ஆராய்ந்து பார்த்து ; இந்த உடலில் நல்லது என்ற ஒன்று ஏதாவது இருக்கிறதா என்பதை சொல்லுங்கள் ? மனிதன் இறந்தபிறகு கூடவே செல்லாத இந்த உடலின் மீது நம்பிக்கை வைக்கலாமா ?
குழந்தைப்பருவத்திலே வேடிக்கையிலும் களியாட்டத்திலும் காலம் கடந்து போய் விடுகிறது . அந்த சமயத்தில் மனம் சிறிது கூட அமைதியின்றி அலைகிறது ! வாலிபப்பருவத்திலோ மக்கள் புலனின்பங்களை நாடித்திரிகிறார்கள் . ஆகவே அப்போதும் சாந்தி பெறுவதற்கு வழியில்லை ! மூப்பு வந்ததுமே உடல் நோய் வயப்பட்டு தளர ஆரம்பித்து விடுகிறது ! இந்த வயோதிக நிலையில் மனிதன் துன்பங்களையும் துயரங்களையும் மட்டுமே அனுபவிக்கிறான் !
பனி விழுந்து வாடிப்போன தமரையை விட்டு ஓடிப்போவதுதான் தேனீயின் இயல்பு . அதுபோல கொடிய நோயும் மூப்பும் இந்த உடலை வந்து தாக்கும் போது உயிராகிய தேனீ உடலை விட்டு பறந்து போய் விடுகிறது ! உலகமாகிய ஏரியும் முற்றிலும் வரண்டு போய் விடுகிறது !
இந்த உடல் மோகத்தில் அழுந்தியிருக்கும் ஆத்துமாவின் இருப்பிடமாக உள்ளது ! எது நிலையானது எது நிலையற்றது என பாகுபடுத்தி பார்க்கத்தெறியாமல் ஆத்துமா திண்டாடுகிறது ! மிகவும் சின்னஞ்சிரிய தூண்டுதல் கிடைத்தால் போதும் அது மகிழ்ச்சியில் பூரிக்கிறது அல்லது கண்ணீர் மல்க துன்பப்படுகிறது ! இந்த உடலைப்போல அருவருப்புக்கு இடமான , பரிதாபத்திற்கு உரிய , நல்ல அம்சம் எதுவுமே இல்லாத வெறொரு பொருளைப்பார்க்கவே இயலாது ! அப்படிப்பட்ட உடல் அதனை நம்பும் மனிதனை அறியாமையாகிய குழியில் தள்ளுகிறது !
உடலின் இயல்பு நிலையாமையே ஆகும் ! என்றாலும் அதற்குள்ள ஒரே ஒரு தகுதி ஆத்துமா மோட்சம் பெறுவதற்கு அந்த உடல் வேண்டும் ! ஆகவே மற்ற சாதாரண பொருளைப்போன்று அதனை தள்ளிவிடவும் கூடாது ; முற்றிலும் சிறந்த பொருள் என்று அதனை கொள்ளவும் கூடாது ! அதிலிருந்து கொண்டுதான் ஆத்துமா மோட்சம் பெற முயற்சிப்பதற்கு முடியும் என்கிற அளவிலே மட்டுமே அதனை பேண வேண்டும் !
எனக்கும் உடலுக்கும் சம்பந்தம் கிடையாது ; உடலும் நானும் ஒன்று அல்ல ; நான் ஆத்துமா ; நான் மோட்சம் பெற இது போல பல உடல்களை கடந்து கொண்டிருக்கிறேன் என்கிற உள்ளுணர்வை பெறும் மனிதன் உண்மையிலேயே சிறந்தவன் ஆவான் !!