காந்தி இந்திய விடுதலை என்ற ஒன்றை மட்டும் முன்னெடுத்தவரல்ல ! ஆன்மீக வாழ்வே அவரது பிரதான பணியாகவும் முன்னுதாரனமாகவும் இருந்தது ! சகல மதங்களின் நல்ல விசயங்களை உள்வாங்கி ``அஹிம்சை `` என்ற உன்னதமான சாத்வீக வாழ்வு நெறி அவரது ஆசிரமத்தில் பயிற்சி செய்யப்பட்டது ! இந்தியா நெடுகிலும் பல மனிதர்கள் உன்னத ஆத்துமாக்களாக பரிணமித்தனர் !
ஆன்மீக மனிதர்கள் அவரது பெயரை உச்சரித்தது போலவே அரசியல்வாதிகளும் அவர் பெயரை உச்சரித்து அவரை தங்களின் பிழைப்புக்கு அடையாளப்படுத்தி அவரை கேலிக்குறிய பொருளாக்கி விட்டனர் !
இந்தியா விடுதலை அடைந்ததும் பதவியிலிருந்தும் ஆட்சியிலிருந்தும் விலக்கிக்கொண்ட மஹாத்துமா `` பதவியிலும் ஒரு நபர் குறிப்பிட்ட தடவைகள் மேல் இருக்க கூடாது என்ற அமெரிக்கா ( இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதி பதவி வகிக்க முடியாது ; அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்கி பொதுத்தொண்டு அல்லது சொந்த வாழ்வு மட்டுமே செய்ய முடியும் ) முன்மாதிரியையும் ஏற்படுத்தியிருந்தாரானால் பரம்பரை அரசியல் ; அரசியலை மட்டும் முழு நேர தொழிலாக கொண்டு பிழைக்கும் ஒரு புதிய அரசர்களை உண்டாகாமல் தடுத்திருந்திருக்கலாம் ! ஆனால் அந்தோ கொள்கைகளே அவசியமில்லை ``கிளை , வட்டம் , மாவட்டம் `` என பதவிகளை பெற்றுக்கொண்டு அங்கும் இங்கும் காசு வாங்கி மேலும் கீழும் கொஞ்சம் கொடுத்து விட்டு மிச்சம் பார்க்கும் ஒரு பிழைப்பு நெறி ஜனநாயகம் என்பதை பணநாயகமாக மற்றி வைத்திருக்கிறது ! ஓட்டு என்ற ஒன்றிக்கு வரும்போது தவிற இந்த அரசர்களிடம் எதற்கு சென்றாலும் பணம் செலவழித்தாக வேண்டும் என்பதால் அந்த ஓட்டிற்கும் பணத்தை பெற்றுக்கொண்டு போடுகிற நிலை பொதுமக்களை ஆட்கொண்டு விட்டது ! அல்லது அக்கறைக்கு இக்கறை பச்சை என்று மாறிமாறி சிலரை --சில குடும்பங்களை ஆட்சியில் உட்கார வைக்கும் நிலை வந்து விட்டது !
இந்த பணநாயக நெறிமுறை வரப்போகிறது ; கொள்கை கோட்பாடுகள் அவசியமற்ற ஒரு அரசியல் வாழ்வு வரப்போகிறது என்பதை காந்தியோ அவரின் சீடர்களோ அறிந்திருக்க வாய்ப்பு இல்லை ! கலியுகத்தின் வளர்சி இது !
சகல மதத்தினரையும் அரவணைத்து ஏக இறைவனை நோக்கிய பிரார்த்தனை வாழ்வு நெறி அவரால் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் அவருக்கு அங்கீகாரம் உண்டாகியிருந்தது ! அரசியல் பொருளாதார சமூகவியலில் மேலை நாட்டிணர் மட்டுமே ஆளுமை செலுத்தக்கூடிய சூழ்னிலை இருக்கும் நிலையில் உலகம் தழுவிய ஆன்மீக பேரலையை இந்தியாவை மையமாக கொண்டு மஹாத்துமா காந்தியால் ஏற்படுத்தியிருக்க முடியும் ! அதற்காகவே அவர் அரசியலிலிருந்து ஒதுங்கி ஆன்மீகப்பணியை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தார் ! இந்தியாவின் துரதிருஸ்ட்டம் அவர் கொல்லப்பட்டார் ! இருப்பினும் காந்தியும் அவரின் சீடர்களும் செய்த தியாகங்கள் ஜீவன் இன்னும் இந்தியாவின் ஆழ்மனதில் பொதிந்து அமிழ்ந்து சாம்பல் மூடிக்கிடக்கிறது !
கல்கி வருமுன்னர் உலகை மூழ்கடிக்கும் ஆன்மீகப்பேரலை இந்தியாவிலிருந்தே புறப்பட்டாக வேண்டும் என்பது விவேகானந்தரின் தீர்க்க தரிசணமாகும் ! ஈசா நபி மீண்டும் உலகிற்கு வாணத்திலிருந்து இறங்கி வரும் போது உலகில் ``இமாம் ` --வழிகாட்டி ஒருவர் மூலம் உலகம் முழுமையும் சமாதானம் உண்டாகியிருக்கும் என்பது முஹமது நபி அவர்களின் தீர்க்கதரிசணமாகும் ! அந்த நபர் இந்தியாவிலிருந்தே வெளிப்படுபடியாக பிரார்த்திப்பது காந்திக்கு நாம் செலுத்தும் நன்றியாகும் !
அனைத்து மத வெளிப்படுகள் மற்றும் பூர்வ புண்ணியங்களின் அடிப்படையில் உலகின் மூத்த குடியாகிய தமிழ் சமூதாயத்திலிருந்தே அந்த இறைதூதர் வருவார் என்பது உண்மை ! ஆனால் நம்பிக்கையோடு அந்த நபரை அனுப்பும் படி கடவுளிடம் பிரார்திக்கிற ஆத்துமாக்களே இப்போது அவசியமானவர்கள் !