தற்போது கலி யுகம்--கலி புருசனின் ஆட்சி நடக்கிறது என்பதில் எல்லா மதங்களுக்கும் மத பிரிவுகளுக்கும் மாற்று கருத்து இல்லை
கல்கி எப்போது வருவார் என்பது பற்றிய பல வகையான கனிப்புகள் பொய்த்துப்போனது காரனம் இன்னும் போதிய அளவு ஆத்துமாக்கள் தேரவில்லை என்பதாக இருக்கலாம்
இது தொடர்பான விசயங்களை மற்ற இறை தூதர்களை விட இயேசு விரிவாய் பேசியுள்ளார்
இயேசு சொன்னார்:மேசியா--கல்கி--அங்கிருக்கிரார் இங்கிருக்கிரார் என்று சொல்லப்படும் நம்பாதிருங்கள் பிணம் எங்கேயோ அங்கு கழுகுகள் கூடும் அது போல கல்கியின் வருகை எல்லொருக்கும் வெட்ட வெளிச்சமாய் தெரியும்
மத்தேயு 24:
21. ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.
29. அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.
30. அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.
31. வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.
குரான்:
பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது - இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது (99 : 1,2)
பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, (89:21)
இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது, (56:5)
வானம் பிளந்து விடும்போது (84:1)
வானம் பிளந்து விடும்போது - நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, கப்றுகள் திறக்கப்படும் போது, (82: 1-4)
சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது (81:1)
மத்தேயு
31. அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.
32. அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாக பிரிக்கிறது போல அவர்களை அவர் பிரித்து,
33. செம்மறியாடுகளைத் தமது வலது பக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவார்.
34. அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
35. பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன் என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன் என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;
36. வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்.
37. அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவர்களாகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவர்களாகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்?
38. எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக்கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்?
39. எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும், காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்.
40. அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
41. அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, அசுரனுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.
42. பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன் நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை;
43. அந்நியனாயிருந்தேன் நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்கவரவில்லை என்பார்.
44. அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதியுள்ளவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவிசெய்யாதிருந்தோம் என்பார்கள்.
45. அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
46. அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.இவைகளெல்லாம் இயேசு சொன்னவை இதிலிருந்து நாம் புரிய வேண்டியது:
ஆ)கல்கி வரும்போது கலியுகத்தில் மனிதர்களாய் இருந்து இறந்த மனிதர்களின் ஆத்துமாக்கள் அனைத்திர்க்கும் ஆவி அருளப்பட்டு ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுவார்கள் உயிரோடு இருக்கிறவர்களும் மறு ரூபம் அடைவார்கள்
நியாயத்தீர்ப்புக்கு பின்பு சில ஆத்மாக்கள் அழிக்கப்படும் எஞ்சியோர் கல்கியோடு அடுத்த யுகத்தில் பிரவேசிப்பார்கள்
கல்கியாய் வரப்போகிறவர் ராமரே என்பது ஆதி இந்து மதக்கொள்கையாகும்
ராம ராஜ்ஜியம் வந்து உலகம் சுபிட்சமடையும் என்பது பிரமமகுமாரிகள் சங்க ஸ்தாபகரின் உபதேசமாகும் ஆப்ரகாமிய வேதங்களில் கடைசியாக வந்துள்ள பஹாய் நெறியும் வரப்போகிறவர் கிரிஷ்னரே என்பதை ஒத்துக்கொள்கிறது
ராமராகவும் க்ரிஷ்ணராகவும் இயேசுவாகவும் ஒரே நபர் தான் வந்தார்! இயேசு நியாயம் தீர்க்க நானே வருவேன் என்று சொன்னார்!இவர்கள் பரலோகம் சென்றவர்கள்
ராமராகவும் க்ரிஷ்ணராகவும் இயேசுவாகவும் வந்த அதே நபர் தான் கல்கியாகவும் வரப்போகிறவர்
கடவுளொரு காரியம் நடக்க வேன்றுமென்றால் `ஆகுக` என பேசினால் போதும் அந்த காரியம் நடந்துவிடும்
குரான் வரை அனைத்து வேதங்களும் அவர் பேசினால் காரியம் நடக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறது
அந்த `வார்த்தை` தான் ராமராகவும் க்ரிஷ்ணராகவும் இயேசுவாகவும் பூமியில் அவதரித்தது!
குரான்
4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்
ராமர் எப்போதும் கடவுள் என்று தன்னை சொன்னதில்லை க்ரிஷ்னரும் இயேசுவும் அவ்வாறே ஆனால் குரு என்று சொல்லிக்கொண்டார்கள்
இயேசு நானே வழி என்றாரே தவிர நானே கடவுள் என்று சொல்லவில்ல ஆனால் சீடர்கள் மூலமாக கலி புருஷன் இவர்களை கடவுளாக சித்தரித்து மதமாக்கி கொள்கைகளை குழி தோண்டி புதைத்து கும்பிட்டால் மட்டும் போதும் என்கிற மாயையை பரப்பி கொண்டிருக்கிறான் எங்க ஆள்தான் பெரியவர் உங்க ஆள் மட்டமானவர் என மார்க்கபேத சண்டைகளையும் தூண்டி மனிதர்களை கெடுப்பதில் வெற்றியும் பெறுகிறான்
தாய் ஒரு அடி பாய்ந்தால் குட்டி ஒன்பது அடி பாயும் என்பது போல மூன்று அவதாரங்களுடன் ஆமை பண்றி என பொய்யான அவதாரங்களை கலி புருசன் பரப்பி குழப்பிக்கொண்டு இருக்கிறான்!
இந்த மூன்று அவதாரங்களும் மனிதர்களாய் வந்தார்கள் கடவுளோடு ஒப்புரவாவது பற்றி பரப்பினார்கள் நீதியை நிலைனாட்டினார்கள் வேதத்தை கொண்டு வந்தார்கள் அசுரர்களோடு யுத்தம் செய்து இறைபேரரசை நிலைனாட்டினார்கள் வரப்போகிற நியாயத்தீர்ப்பை குறித்து எச்சரித்தார்கள் கடவுளின் வார்த்தை இம்மூவராய் பூமிக்கு இறைதூதுவராய் அவதரித்தது!அவதாரம் என்பது மேசியா (அ) மஸீஹ் என்பதாகும்!
22:75. அல்லாஹ் மலக்குகளிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்! நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியேற்பவன்; பார்ப்பவன்
இரண்டு வகையான இறைதூதர்கள் இருப்பதாக கடவுள் சொல்லுவதை கவணியுங்கள்
1)மலக்கிலிருந்து(தேவதூதர்கள்) வந்த இறைதூதர் 2)மனிதர்களிலிருந்து வந்த இறைதூதர்
ராமர்-கிரிஸ்ணர்-இயேசு-கல்கி மலக்குகள்
முஹமது நபி சாதாரன-மனித இறைதூதர்;மஸீஹ் அல்ல
மனித முயற்சியால் பக்தியால் ஞானத்தால் கடவுளை நெருங்கியவர்கள் இறைதூதராய் ஆவதுண்டு - வள்ளலாரைப்போல
இவர்கள் அனைவரும் கடவுளை பற்றி மட்டும் தான் பிரசங்கித்தார்கள் கலி புருசனால் சிலர் துன்பப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள்
கடவுளைக்குறித்து பிரசங்கிக்கிறவர்களையும் மாற்று மதத்தின் பெயரால் கடவுளின் பெயரை சொல்லிக்கொண்டே கொல்லுகிறவர்களெல்லாம் கலியின் பிள்ளைகளே
கலி புருசனாலும் பூமியில் அவதாரங்களும் தூதர்களும் உண்டு!இவர்கள் உயிரோடு இருக்கும் போதே தாங்கள் கடவுள் என்று சொல்லுவார்கள்
ஆக கல்கி யுகம் வரை அவ்வப்போது உலகை சீர்திருத்த இறைதூதர்கள் மட்டுமே வர வாய்ப்பு உள்ளதே தவிர கல்கி இறைதூதரை விட மேலானவர் - மஸீஹ்
முஹமது இறைதூதர் மட்டுமே: கல்கி அல்ல தற்பொது அவர் மரித்து பூமியில் நித்திரையில் நியாயத்தீர்ப்பு நாளுக்காய் காத்திருக்கிறார் என்பதை முஸ்லீம்களும் ஒத்துக்கொள்கிறார்கள்
மஸீஹ் ஆகிய ராமர்(எ)கிரிஸ்ணர்(எ)கிரிஸ்து(எ)இயேசு மரிக்காதவர்
4:157. இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
4:158. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
மஸீஹ் கொல்லப்படாமல் கடவுள் தன்னிடம் உயர்த்திக்கொண்டார் என்றால் அதற்க்கு ஒரு காரணம் இல்லாமலா இருக்கும்!மஸீஹ் என்றால் ஆளுகிரவர் என்று பொருள்!இயேசு முதலாம் வருகையில் எந்த உலகை ஆண்டார்?
முஹமது செய்ததில் கால்வாசி கூட ஏதும் செய்யாத இயேசுவை குரான் எதற்காக மஸீஹ் என்று சொல்ல வேண்டும்?
இயேசுவை விசாரித்த பிலாத்து ராஜா `நீ ராஜாவா?` எனக்கேட்ட போது ஆம் ஆனால் இப்போதல்ல!---இந்த யுகத்தில் அல்ல-வரப்போகிற கல்கி யுகத்தை கடவுளின் பிரதினிதியாக இருந்து ஆளப்போகிறவர் என்பதாகவே பதில் சொன்னார்
முதலாம் நியாயத்தீர்ப்பிற்கு பிறகு நிறைய மனித ஆத்துமாக்கள் நரகத்தீர்ப்புக்கு ஆளாவார்கள்!தேறிய நபர்களை அப்படியே பரலோகத்திற்கு ஏற்றுக்கொள்ள முடியாது ஏனென்றால் மனித ஆத்துமாவில் உள்ள தீய சிந்தைகள் அனைத்தும் பரிசுத்தப்பட வேண்டும்அதற்கு மஸீஹ்--கல்கியின் ஆட்சியில் உலகம் ஒரு யுகம் இருக்கும்
அப்போது அசுர ஆவிகள் மனிதர்களை கெடுக்காதபடி அவைகள் கட்டப்பட்டு பாதாளத்தில் அடைக்கபடும்அப்போது நல்ல செயல்களை மட்டுமே செய்துசெய்து மனிதர்கள் இயல்பே நல்லவர்களாய்--பரிசுத்தம் அடைவர் அதன் பிறகு கொஞ்ச காலம் அசுர ஆவிகள் கட்டவிழ்த்து விடப்படும் முடிந்த அளவு மனித ஆத்துமாக்களை கெடுக்க இடம் கொடுக்க படும் அதில் கெடாதவர்களே முற்றிலும் பரிசுத்தம் அடைந்தவர்கள்
இதன் பிறகு இரண்டாம் நியாயத்தீர்ப்பு இதில் அசுர ஆவிகளும் அவைகளால் கெடுக்க பட்ட மனித ஆத்துமாக்களும் முற்றிலும் அழிக்க படுவர் இதன் பின்னர் தேறிய ஆத்துமாக்கள் பரலோகம் எடுத்துக்கொள்ளப்படுவர் பூமியில் மனித படைப்பும் இருக்காது
பூமியில் மனித படைப்பு என்பது தேவதூதர்களில் கடவுளின் ஆட்சியை எதிர்த்து கலகம் செய்து பிறிந்த அசுரர்களை வெளியேற்றியதால் உண்டான காலி இடத்தை நிறப்புவதுதான்
எனவேதான் அப்படி மனிதர்கள் தேறாமல் தங்களோடு அழிய வேண்டும் என்பதற்கு அசுரர்கள் கடும் முயற்சி செய்கிறார்கள்
15:36. “என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!” என்று இப்லீஸ் (அசுரன்)கூறினான்.
15:39. (அதற்கு இப்லீஸ்,) “என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்.
இந்த பூமிக்கு உரிய வாழ்வில் மனிதர்கள் மூலமாக கடவுளுக்கும் அசுரனுக்கும் ஒரு யுத்தம் நடந்து வருகிறது என்பதை மஸீஹ் ஆகிய கிரிஸ்ண்ர் குருசேத்திர யுத்தம் என்று வர்னித்து அதில் அர்ச்சுணன் ஆகிய மனிதன் இறைதூதனின் உபதேசத்தை கேட்டு நடந்தால் வெள்ளலாம் என்று சொன்னர்
ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் - வள்ளலார்
No comments:
Post a Comment