இந்தியாவின் ஞானமார்க்கத்தினர் தன்னை அறிந்து கொண்டால் எளிதில் கடவுளை அறியலாம் அதனால் கடவுளை உன் உள்ளே தேடு என்று சொல்லுகிறார்கள்
இதனை புரிந்துகொள்ளுவதிலும் வியாக்கியானம் செய்வதிலும் நுட்பமான கோளாறுகள் உள்ளன!
தன்னை அறிவது என்பது தனது ஆத்துமாவில் உள்ள பரம்பரையில் வந்த பாவபதிவுகள்
என்ன என்பதை ஒவ்வொன்றாக கண்டறிந்து அவற்றை உணர்ந்து ஆத்துமசுத்தி
செய்வதாகும் இவ்வாறு ஆத்துமசுத்தி செய்கிற சாதகன் பரிசுத்தத்தின் மேல்
பரிசுத்தம் அடைந்து தன்னுள் கடவுளோடு ஒத்த அலைவரிசை பெறுகி கடவுளை
நெறுங்கவும் உணரவும் முடியும் !
இதனை செய்வதற்க்கு பதிலாக--அல்லது
இதில் கொஞ்சம் முன்னேற்றம் கூட அடையாமல் கடவுள் என்னுள்ளே தான்
இருக்கிறார் அவரை தேடி கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறோம் என பேசிக்கொண்டே
இருப்பதை பெருமையாக கருதும் போக்கு வளர்ந்து விட்டது இதை அறிந்து
கொண்டதிலேயே திருப்தியடைந்து மிக உயர்ந்த ஞான மார்க்கத்திர்க்கு தாங்கள்
வந்துவிட்டதைக்குறித்து சுயபெருமையும் அடைகிறார்கள் ரெண்டு யோகம் நாலு
உடல்பயிற்ச்சி செய்துகொண்டு அப்படியே பால பாடத்திலேயே தேங்கியும்
விடுகிறார்கள் உலகமாயைகளை வெறுத்து கடவுளை தேடுகிற உண்ர்வுள்ளவர்களை
முன்னேறவிடாமல் தடுக்க அசுரன் வைத்திருக்கும் நுட்பமான மாயை தான் இது!
இதுவும் ஒருவகையான சுயபெருமையே என்பதை உணர்ந்தால் உண்மையான பக்தி என்கிற
பேராயுதத்தை பற்றிய பயிர்ச்சி உண்டாகும்!ஞானப்பெருமை மிகவும் நுட்பமான
தற்க்கொலை!மகத்துவமான கடவுளின் மஹிமையை அலட்சியப்படுத்தி தனி மனிதனுக்கு
மஹிமை தேடுவதாகும்!நவீன நாத்திகமாகும்!
எனக்குள்
கடவுள் இல்லை!கடவுள் தன் அருட்கொடையால் வழங்கிய அவரின் ஆவியில் ஒருதுளி என்
உயிராய் ஓடிக்கொண்டுள்ளது!அதை நான் விரும்பினாலும் வைத்துக்கொள்ள முடியாது
கடவுள் எடுத்துக்கொள்ளும்முன்னால் அவருக்கே மஹிமையை செலுத்துவது நல்லது!
No comments:
Post a Comment