Total Pageviews

Wednesday, November 23, 2011

கீதையின் சுடரொளிகள்--அதிகாரம் 2---சாங்கிய யோகம் !

கீதை 2:14
ஓ!குந்தியின் மகனே!பருவ காலங்கள் எப்படி தோன்றிமறைகிறதோ அப்படியே இன்பமும் துன்பமும் தோன்றிமறைகிறது! மாறிமாறி வருகிறது!இது புலன்களின் உணர்ச்சியினால் நிலையானது போல தெரிகிறது!இவைகளால் பாதிப்படையாத-- புலன்களை கடந்த மன நிலையை கற்றுக்கொள்ளவேண்டும்!
2:15 மனிதர்களில் சிறந்தவனே!யார் இன்பத்தாலும் துன்பத்தாலும் பாதிப்படையாத மனநிலையை பெறுகிறானோ,மன சமநிலையை அடைகிறானோ அவனே கடவுளை நெருங்க தகுதி அடைகிறான்

உலகபந்தங்கள் துன்பதுயரங்களிலிருந்து விடுபட்டு ஆத்துமசுதந்திரத்தை அனுபவிக்க வேண்டுமா?
வெற்றிகளில் துள்ளாமல் இருக்க பழகிக்கொள்ளவேண்டும் வெற்றிக்கு கடவுளுக்கு நன்றி செலுத்திவிட்டு நகன்றுவிடவேண்டும் வெற்றியில் தேங்கிநின்று கொண்டாட நம் மனம் பழகும்போது தோல்வியில் தேங்கிநின்று துயறத்திலும் களிவிறக்கம்படவும் தொடங்கிவிடும் கடவுளும் விட்டுவிடுவார் வெற்றியில் நன்றி தெறிவித்த பக்தனுக்கு துன்பத்தில் உதவவேண்டிய நெறுக்கடி கடவுளுக்கும் உண்டாகிவிடுகிறது நாம் மனச்சமநிலை அடைவது நம் பக்தியின் நிறைவுக்கு ஒரு அடையாளமாகும்
கோடையின் வெப்பம் நம்மை வாட்டி வதக்கும் போது அது நிலையானது போல தெரிகிறது!பனியில் நாம் உறைந்து போய் விடுவோம் போல உணர்கிறோம்!ஆனால் அது உண்மையல்ல!நம் புலன்கள் நுகர்வுணர்ச்சிக்கு நம் சக்தியை மனமானது செலவளித்துக்கொண்டே இருப்பதால் நாம் சோர்ந்துபோய் விடுகிறோம்!அதை உணர்கிற நமது மனம் தான் நம் சோர்வுக்கு காரணமே தவிற புற காரணிகள் நம்மை வருத்துவதில்லை!அது சில நாளில் கடந்துவிடும் என்கிற நம்பிக்கை-அறிவை இழந்து நம் மனமானது விரக்தியில் ஒடுங்குகிறது!மேலும் இந்த மனமானது தான் ஆத்துமா என்பதை மறந்து சரீரத்தின் புலன் உணர்வுகளுக்கு மதிமயங்கி தன்னை சரீரமாகவே நினைத்துக்கொண்டுள்ளது!அழிவுள்ள சரீரத்தில் வாசம் செய்கிற அழிவற்ற ஆத்துமா நான் என்கிற மெய்யறிவு அதற்க்கு மங்கி தன் பலமறியாமல் --ஆத்துமபலம் இழந்து சரீரத்திற்க்கு அடிமையாகி உலக சுகதுக்கங்கள் என்கிற குட்டையில் உலண்று கொண்டுள்ளது!சரீரம் அழிவுள்ளது ஆனால் ஆத்துமாவோ நியாயத்தீர்ப்பு நாள் வரை அழிவற்றது!உலகில் நம் சரீரத்தை அழிக்க பலவற்றால் முடியலாம்!நாம் பயப்பட வேண்டியுள்ளது!உண்மை யாதெணில் கடவுள் அணுமதித்தாலொழிய நம் சரீரத்தை யாராலும் அழிக்க முடியாது;ஆனால் நம் ஆத்துமாவை கடவுளைத்தவிற யாராலும் அழிக்கவே முடியாது!
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவை நரகத்திலே அழிக்க வல்ல கடவுளுக்கே பயப்படுங்கள். -இயேசு(மத்தேயு10:28.)
ஆத்துமா அழிவற்றது என்கிற மெய்யறிவும் அதன் ஆத்துமபலத்தை பெருக்கி சரீர ஆளுகையிலிருந்து விடுபடுவதும் கடவுளை நெறுங்கி செல்வதற்க்கு பாதையாகும்!
கீதை 2:58  ஆமை தன் அவயங்களை தன் ஓட்டிற்க்குள் இழுத்துக்கொள்வதைப்போல; யார் தன் சரீர புலன்களை, உணர்வுகளை தூண்டும் உலக காரணிகளிலிருந்து விடிவித்துக்கொள்ளுகிறானோ அவனே மெய்யறிவில் நிலைத்தவனாவான்!
ஆமையானது ஓட்டிற்க்குள் வாசம் செய்கிறது அந்த ஓட்டை சுமந்து திரிகிறது பார்ப்போர் அந்த ஓடு தான் ஆமை என நினைக்கின்றனர்!ஆனால் அந்த ஓடு அல்ல அந்த ஓட்டிற்க்குள் ஆமை இருக்கிறது!அது சாதகமான சூழ்னிலையில் ஓட்டிலிருந்து தன் அவயங்களை நீட்டி இந்த உலகில் இயங்குகிறது!சாதகமற்ற சூழ்னிலையில் ஓட்டிற்க்குள் தன்னை இழுத்துக்கொண்டு தன்னை பாதுகாத்துக்கொள்ளுகிறது--உலகத்திடமிருந்து தன்னை விடிவித்துக்கொள்ளுகிறது!அந்த ஆமையிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் படி இறைதூதர் கிருஸ்ணர் வழிகாட்டுகிறார்!அழிவற்ற ஆத்துமா நான் என்பதை உணர்ந்து அழிவுள்ள சரீரத்தில் சில நாள் வாசமாயிருக்கிறோம்;அது நமது ஓடே தவிற சரீரமும் சரீரத்தின் மூலம் நம்மை மயக்குகிற உலக மாயைகளும் இச்சைகளும் பந்தங்களும் நாமல்ல என தெளியவேண்டும் புற உலக காரணிகள் எதுவும் நம் ஆத்துமாவை நாம் அதற்க்கு இடம்கொடுத்தாலொளிய நம்மை மயக்கவும் எதுவும் செய்ய சக்தியற்றவை!
கீதை 2:23 இந்த உலகத்தின் எந்த கருவியாலும் ஆத்துமாவை துண்டுதுண்டாக வெட்டவே முடியாது;தீயினால் எரிக்க முடியாது அல்லது தண்ணீரில் கறைக்கமுடியாது;பெருங்காற்றினாலும் துகள்துகளாய் பறக்கடிக்க முடியாது!
கடவுள் பரமாத்மா--அவரால் உருவாக்க பட்ட அவரால் மட்டுமே அழிக்கபடக்கூடிய நான் ஜீவாத்மா என்பதை உணர்ந்து அவரோடு பக்தி பூண்ட மனிதன்--தன்னை உணர்ந்தவன் இந்த சரீரத்தை அடக்க கற்றுக்கொள்ளுகிறான்!உலகத்தின் அதிபதியாகிய அசுரன் சரீரத்தை மயக்கி ஆத்துமாவை ஆள முயற்ச்சிக்கிறான்!ஆத்துமா மெய்யறிவிலும் கடவுளிலும் நிலைத்து பேரின்பத்தில் திளைத்து பழகிவிட்டால் அசுரனின் சிற்றின்ப மாயங்கள் எடுபடாமல் போய் விடும்!நிறை பக்தன் சரீரத்தை அடக்கி வெற்றி பெருகிறான்!அல்லது சரீரத்தை கடந்தவனாகிறான்! இங்கு சரீரத்தை மையமாக வைத்து `யுத்தகளம்` ஒன்று இறுதி நாள் வரை உள்ளது என்பது தான் `குருஸேத்திர யுத்தம்` என உருவக படுத்த படுகிறது! யுத்த களத்தில் எதிரிகள் அசுரனும் அவனின் உலக மாயைகள் --இன்பதுன்பம்,பட்டம்பதவி,அதிகாரம்ஆணவம்,ஆசைதேவைகள்,அன்புவெறுப்பு என சரீரத்தை(தேரை) கவர்ந்து இழுத்து அதன் மூலம் ஆத்துமாவை ஆளுகை செய்வது அசுரனின் அணி!தேரில் வீற்றிருக்கும் அர்ச்சுணன் ஆகிய ஆத்துமா அந்த தேரை இறைதூதனாகிய கிருஸ்ணரிடம் வழி நடத்த ஒப்படைத்தால் இறைதூதர் கடவுளின் வேதத்தை உபதேசித்து போரில் வெற்றி பெறச்செய்வார்!
இண்ணொரு உருவகமும் உள்ளது!
ஒரு மனிதனின் ஆவி,ஆத்துமா,சரீரத்தில் அவனது ஆவி--உயிரே தேரோட்டீ!கடவுளின் ஆவியில் ஒரு துளி மனிதனின் உயிராக ஓடிக்கொண்டு உள்ளது இந்த ஆவி எடுத்துக்கொள்ள பட்டால் சரீரம் அழிந்து ஆத்துமா நியாயத்தீர்ப்பு நாள் வரை நித்திரைக்கு போய் விடும்!எனவே ஒரு மனிதனுக்கு கடவுளை நெருங்கிய ஒரு பொருள் அவனது ஆவி-உயிரே! அந்த உயிரில் ஆத்துமாவை ஒடுக்கி தியானம் அப்பியாசித்து வந்தால் உயிருணர்வு பெருகி கடவுளின் அருள் ஆத்துமாவில் பலம் பெருகும்!அப்போது சரீரத்தின் பின் செல்லுகிற ஆத்துமா சரீரத்தை அடக்கி கடவுளின் பின் செல்லுகிற ஆத்துமாவாக மாற்றம் பெரும்!கடவுளோடு உறாவாடுகிற-பிரார்த்திக்கிற மன நிலை எளிதில் சித்திக்கும்!இறைதூதர்கள் மூலம் வந்த வேதம் ஆழமாக புரிந்து ஜீவனோடு கடைபிடிக்க ஏதுவாகும்!இல்லாவிட்டால் இறைதூதர்கள் கொண்டுவந்த வேதத்தை கையிலே வைத்துக்கொண்டு சடங்காச்சாரமாக புரிந்து கொண்டு நுனிப்புல் மேய்ந்து கொண்டு நான் பெரிசு நீ பெரிசு என மதச்சண்டை போட ஊக்குவிக்கிற அசுர மாயையில் உலகம் மீண்டும் போய் விழுந்து விடும்!
                                                  

No comments:

Post a Comment