Total Pageviews

Wednesday, January 18, 2012

`கடமையைச்செய் பலனில் பற்றுவைக்காதே! `----கர்ம யோகம் (கீதையின் சுடரொளிகள்)

 கீதை 3:9 கடவுளுக்கு அர்ப்பணம் என்பதாக வேலை செய்யப்படவேண்டும்;இல்லாவிட்டால் வேலைகள் இந்த லவ்கீக உலகில் மனனோவு உள்ளவைகளாக மாறிவிடும்!ஆகவே குந்தியின் மகனே!உனக்கு விதிக்கபட்ட வேலைகளை கடவுளின் திருப்திக்காக என ஈடுபாடோடு செய்வாயாக;இதனால் எப்பொதும் விடுதலை பெற்றவனாக இருப்பாய்!

பொதுவாக ஒரு வேலையை நாம் பிறருக்காக செய்ய வேண்டிய சூழ் நிலை வரும்போது அதனால் நமக்கு என்ன ஆதாயம் என்று சிந்தித்து அதில் ஈடுபாடில்லாமல் ஏனோதானோ என சொதப்புவது உலக வழக்காக இருக்கிறது அரசுத்துறைகளில் ஆதாயம் வந்தால் அதற்க்கு ஒரு வேலை இல்லாவிட்டால் அதை ஒலட்டோஒலட்டு என்று ஒலட்டுவது ஒரு கலையாக கற்றுக்கொண்டு கடைபிடிக்கப்படுகிறது!

அது தற்காலிக வெற்றியே தவிற நீடித்த நோக்கில் நமக்கு நாமே நம் சந்ததிகளுக்கு வரவேண்டிய நன்மைகளின் அளவை குறைத்துகொள்ளுகிறோம்! பல வேலைகளில் நாம் உழைத்தும் பலனில்லாமல் போவது நம் முன்னோர்கள் இப்படி சொதப்பியதன் விளைவு   என்பது உண்மை!
ஒரு வேலையில் நமது சூழ் நிலையின் காரனமாக ஈடுபடாமலேயே இருந்து விடலாம் அல்லது அவர்களுக்காக பிரார்த்தனை செய்து விட்டு சும்மா இருந்து விடலாம்! ஆனால் செய்யத்தொடங்கி அதனை சொதப்ப கூடாது! செயலுக்காக செயலை ஈடுபாடுடன் செய்ய வேண்டும்! முடிந்த அளவு நேர்த்தியாகவும் முழுமையாகவும் செய்வது `கர்ம யோகம்` ஆகும்! செயல் செயலுக்காக செய்யப்படுவது கர்ம யோகம்! அதில் ஒரு ஆத்மதிருப்தி என்பது உள்ளே விழைவது! நம்மால் செய்யப்பட்ட செயலுக்கு உடனடி பலனை எதிர்பார்க்க வேண்டியதில்லை! நம்மால் பலனடைந்தவர்கள் நமக்கு பதில் செய்வார்கள் என்றோ  ;குறைந்தது உணர்ந்தவர்களாக இறுப்பர்கள் என்றும்  எதிர்பார்க்க வேண்டியதில்லை!


கீதை 3:19 எனவே விளைவுகளின் பலன்களில் பற்றுவைக்காமல் ஒருவர் கடமையை கைக்கொள்ளவேண்டும்! யார் பற்றற்று கடமை செய்கிறார்களோ அவர்கள் கடவுளை அடைவர்!


கடவுளுக்காக எதையும் செய்வதாக நினைக்கிற கர்மயோக மனநிலையை அடைந்தவர்க்கு கடவுள் எல்லாவற்றிர்க்கும் ஏற்ற காலத்தில் பலனளிப்பவர்; அவர் கடனாளியல்ல என்பது நன்கு தெறியும்!

குரான் 11:51. "என் சமூகத்தார்களே! இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி எல்லாம் என்னைப்படைத்த அல்லாஹ்விடமே இருக்கிறது. நீங்கள் இதை விளங்கிக் கொள்ள மாட்டீர்களா? --முகமது நபி!
6:160. எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.
4:173. ஆனால் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய நற்கூலியை முழுமையாக (அல்லாஹ்) கொடுப்பான்; இன்னும் தன் அருளினால் அவர்களுக்கு அதிகமாகவும் வழங்குவான்; எவர் அவனுக்கு வழிபடுதலைக் குறைவாக எண்ணி கர்வமும் கொள்கிறார்களோ, அவர்களை நோவினை செய்யும் வேதனைக் கொண்டு வேதனை செய்வான்; அல்லாஹ்வைத் தவிர, (வேறு எவரையும்) அவர்கள் தம் உற்ற நேசனாகவோ, உதவி புரிபவனாகவோ (அங்கு) காணமாட்டார்கள்.
நிறை பக்தன்; தான் செய்கிற செயலை ஆத்ம திருப்தியோடு நிறைவேற்றுகிறான்! இன்றைய வாழ்வு,சூழ்நிலை,முன்னேற்றம் இவற்றிர்க்கு கடவுளை நம்பியிரூக்கிரான்--தனது அறிவையும் திறமையையும் ஆழமாக அவன் நம்புவதில்லை! தனக்கு வருகிற வளர்ச்சிக்கு அவன் நன்றி செலுத்துகிறவனே தவிற குதுகலம் அவனை நிறப்புவதில்லை! தன் தோல்விகளுக்கோ ,தடங்கள்கலுக்கோ அவன் மனம் கலங்குவதுமில்லை! ஒரு குழந்தையைப்போல் அவன் மனம் கடவுளிடத்து நிலைத்திறுக்கிறது!

கீதை 2:150 மனிதர்களில் சிறந்தவனே!யாரொருவன் இன்பத்திலும் துன்பத்திலும் பாதிப்படையாதவனோ;இரண்டிலும் சமநிலை அடைந்தவனோ அவனே விடுதலை பெற தகுதி உள்ளவன்!

 அணுபவத்தில்; ஒரு விசயத்தில் ஆவலும் எதிர்பார்ப்பும் நமக்கு  இருக்கும் வரை அதில் நாம்தான் ஒளப்பிக்கொண்டு இருப்பதாக இருக்கும்!ஆனால் எதிர்பார்ப்பு இல்லாத மனச்சம நிலையை அடைந்து விட்ட விசயத்தில் விரைவில் வெற்றி வந்து சேரும்!ஏனெனில் அதில் கடவுள் செயல்பட தொடங்கி விடுகிறார்!எங்கே நம் சுயம் அடங்குகிறதோ கர்மயோகம் ஆகுதியாக --வேள்வியாக --பிரார்த்தனையோடு செய்யப்படுகிறதோ அதில் கடவுளே விளைவுக்கு நிர்பந்தப்படுத்தப்படுகிறார்!
கீதை 18:6 எல்லா செயல்களும் பற்றற்று செய்வாயாக!விளைவுகளில் எந்த எதிர்பார்ப்பும் கூடாது!செயலுக்காக செயலை செய்!இதுவே என் முடிவான கருத்து!

No comments:

Post a Comment