Total Pageviews

Sunday, September 9, 2018

வருவார் அழைத்து வாடி


வள்ளலார் அருளிய திருவருட்பா ஆறாம் திருமுறை 4482

இந்தப்பாடலில் வள்ளல்பெருமானார் தனக்கு பின்பு வரப்போகிறவரான சமரச வேதாந்தியை வரவேற்கிறார் ; அவரைப்பற்றிய குறிப்புகளை வெளிப்படுத்துகிறார்

முதலாவது அவர் வடலூருக்கு தெற்கே பிறந்தவர் ; பிறக்கப்போகிறவர் ;

அதனால்தான் வடதிசையான வடலுருக்கு அழைத்து வரும்படி கூறுகிறார்

அடுத்து அவர் திருவாரூரில் இருந்தவர்

திருவாரூரில் செழிப்போடு வாழ்ந்த குஞ்சிதம் - பரவை நாச்சியாரின் காதல் கணவர் அவர் ; சிவபோதகம் செய்தவர்

சிவபெருமானால் நண்பன் என அழைக்கப்பட்ட சுந்தர மூர்த்தி நாயனாரே அவர்

சுந்தர மூர்த்தி க்கு திருமணம் நடக்க இருந்தபோது ஒரு பெரியவரைப்போல சிவனார் வந்து இவனை அடிமையாக எனக்கு இவன் தாத்தா விற்றதற்கான ஓலையை காட்டி திருமணத்தை நிறுத்தி அடிமையாக அழைத்துக்கொண்டு போகிறார்

சிவாலயத்தில் நிறுத்தி தன்னையும் ; தனது அடிமையான அருள்நந்தி சிவமே நீ என வெளிப்படுத்தி ஊர் ஊருக்கு போய் சிவ குருகுலத்தை ; பக்தியை பரப்புக என உத்தரவிடுகிறார்

அப்படியே தேவாரம் பாடி பக்தியை பரப்பியவராக அவினாசி வருகிறார்

அங்கு ஒரே மகனை இழந்து புத்திர சோகத்தில் இருந்த தம்பதியினரை அறிகிறார்

அவினாசி குளம் வரண்டுபோய் கிடக்கிறது . மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் நிரம்பி வழிந்தது . அப்போது அதிலிருந்த முதலை ஒன்று அச்சிறுவனை விழுங்கி விட்டது . பெற்றோர்களின் கண்ணீரால் ; புத்திர சோகத்தால் மூன்று ஆண்டுகளாக மழை பெய்யவில்லை

மனம் உருகிய சுந்தரர் பதிகம் பாடுகிறார் ; வேண்டுகிறார்

மழை பெய்து குளம் நிரம்புகிறது

குளத்திலிருந்து முதலை கரை வந்து விழுங்கிய குழந்தையை கக்கி விட்டு போய் விடுகிறது

பைபிளில் யோனா தீர்க்கதரிசி ஒரு மீனால் விழுங்கப்பட்டு மூன்று நாட்கள் வயிற்றிலிருந்து பிரார்த்தனை செய்தவுடன் கடல் கரையில் யோனாவை துப்பிவிட்டு சென்ற வரலாறு எழுதப்பட்டுள்ளது .

அதேபோல மூன்று வருடம் கழித்து பிள்ளையை உயிரோடு எழுப்பினார் சுந்தரர்

வடலூர் பார்வதிபுரத்திற்கு ஆண்டவர் வரும்போது செத்தாரை உயிரோடு எழுப்புவார் என முன்னுரைத்த வள்ளல்பெருமான் அதற்காக சாட்சி மேடை எழுவார் மேடையும் கட்டிவைத்துள்ளார்

செத்தாரை எழுப்பும் வல்லமை யாருக்கு உள்ளதோ அவரே வள்ளல்பெருமானுக்கு பின்பு சன்மார்க்க சங்கத்திற்கு தலைமை ஏற்க தகுதி உள்ளவர்

அந்த தகுதி உள்ளவர் அருள்நந்தி சிவமாகிய சுந்தரரே ஆகும்

பின்பு சுந்தரர் திருவாரூர் வந்து சேர்கிறார்

அங்கு பரவைநாச்சியாரை கண்டு காதலுருகிறார் ; சிவனும் தன் நண்பனுக்கு பெண் கேட்டு அத்திருமணத்தை நடத்தி வைக்கிறார்

பின்பு மேலும் சேத்ராடனம் செல்கிறார்

வந்த இடத்தில் திருஒற்றியூர் சங்கிலி நாச்சியாரையும் கண்டு காதலுருகிறார் ; அத்திருமணத்தையும் சிவன் நடத்தி வைக்கிறார்

அப்படியே மீண்டும் திருவாரூர் வருகிறார் சுந்தரர்

அக்காலங்களில் வணிகம் நிமித்தமாக வெளிநாடுகள் கூட செல்வானாம் தமிழன்

கணவனைப்பிரிந்து பசலையுடன் காத்திருக்கும் மனைவிக்கு பொன்னும் பொருளும் பரிசளிப்பானாம் கணவன்

சுந்தரரோ பக்தி தொண்டு செய்து திரும்ப வருகிறார்

ஆனாலும் பரவைநாச்சிக்கு என்ன கொடுப்பது என விருத்தாசலத்தில் வைத்து கேட்ட சுந்தரருக்கு பன்னீராயிரம் பொற்காசுகள் கொடுத்தார் சிவபெருமான்

இதை வழிப்பறிக்கு தப்பி எப்படி கொண்டுபோவது என்ற போது இங்கு ஓடும் மணிமுத்தாறில் போடு ; திருவாரூர் குளத்தில் பரவையை அழைத்துக்கொண்டு சேகரித்து கொடு என உத்தரவாகி ஆற்றில் தங்கத்தை போட்டார்

இப்போது மனைவிக்கு கொடுக்க தங்கம் தயார் . திருவாரூர் வந்த சுந்தரரை பரவை நாச்சியார் ஏற்றுக்கொள்ளவேண்டுமே ; இன்னொரு பெண்ணை மணந்த சுந்தரரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் பரவை நாச்சியார்

அப்போது ஒரு இரவு முழுவதும் சிவனார் ஒரு மனிதனைப்போல இருவருக்கும் இடையில் தூது போனாராம்

திருவாரூர் கோவில் வீதி தேய்ந்து போகுமளவு கால்கடுக்க சிவனார் பலமுறை நடந்திருக்கிறார்

அப்படி சமரசம் செய்வித்து பரவையை அழைத்துக்கொண்டு சென்று குளத்தில் மிதந்து வந்த பன்னீராயிரம் பொற்காசுகளை அரித்து அரித்து கொடுத்தாராம்

திருவார்பொன் னம்பலத்தே செழிக்குங் குஞ்சிதம் பரவை நாச்சியார் - சப்த கண்ணிகளுள் ஒருவர்

இது ஏன் சொல்லப்படுகிறது என்றால் முகமதுநபி தமக்கு பின்பு வரப்போகிற அல்மஹதியை பற்றி ஒரு குறிப்பு சொல்லியுள்ளார்

யார் பரத்திலிருந்து தங்க காசுகளை பெற்று மக்களுக்கு வாரி வாரி வழங்கி வறுமையை ஒழிக்கிராரோ அவரே அல்மஹதி


இந்த அல்மஹதியில் காலத்தில் பூமி முழுவதும் சமாதானத்தை கொண்டுவருவாராம்

சமாதானம் என்றால் சகல மதங்களுக்கிடையில் சமாதானம்

மற்ற மதங்களைஎல்லாம் ஒழித்துவிட்டு இசுலாத்தை பூமி முழுவதும் அல்மஹதி கொண்டுவந்துவிடுவார் என அஞ்ஞானிகளான முஸ்லீம்கள் சொல்லிவருகிறார்கள்

சமாதனம் என்றால் வேற்றுமைகளுக்கிடையில் ஒற்றுமை கொண்டுவருவது

இன்னும் ஒரு லட்சம் ஆண்டுகள் ஆனாலும் எந்த மதத்தையும் ஒழிக்கவே முடியாது

வீணாக மதமாற்றம் செய்து பூமியில் குழப்பத்தை உண்டாக்குவது தவிர மதமாற்றிகளால் ஒன்றையும் சாதிக்க முடியாது

அல்மஹதியோ சகல மதங்களுக்கிடையும் சமாதானத்தை உண்டாக்கி ஏக இறை வழிபாட்டுக்கு எல்லா மனிதர்களையும் கொண்டு வந்துவிடுவாராம்

அதுதான் சமரச வேதம் ; எதையும் விட்டுவிடு என சொல்லாதே

எல்லா வேதங்களையும் சமரசப்படுத்தி இறைவனோடு ஒப்புரவாக்க வேண்டும்

புது மதம் உற்பத்தி செய்வதல்ல ; இருக்கிற மதங்கள் அனைத்தையும் ஏக இறைவனோடு ஒப்புரவு ஆக்குவது சமரசம்

வள்ளல்பிரான் முன்னறிவித்த சமரச சன்மார்க்கம் என்பதை இப்போதைய சன்மார்க்கிகளால் புரிந்துக்கொள்ள முடியாது என வள்ளல்பெருமானே சொல்லிவிட்டு வரப்போகிறவர் காலத்தில் இது பிரபலமாகும் என்றார்

அந்த வரப்போகிரவருக்கு இரண்டு தகுதிகள் இருக்க வேண்டும்

1) செத்தாரை எழுப்புதல்
2) பரத்திலிருந்து தங்க காசுகளை வரவழைத்து வாரி வாரி வழங்கி வறுமையை ஒழிக்க வேண்டும்

இந்த நபர் சனகாதி முனிவர்களுள் தலைவரான சுந்தரரே ஆகும்

இவர் காலம் காலமாக யுக முடிவுக்காக இறைவனால் ஆயத்தப்படுத்தப்பட்டவர்

நர நாராயனர்களாக பூமிக்கு வந்தவர்கள்

வள்ளல்பெருமான் தலைமைப்பதி என்ற வாசகத்தையும் தனித்தலைமைப்பதி என்ற வாசகத்தையும் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார்

தலைமைப்பதி என்பவர் நாராயணனின் அம்சமாக பூமிக்கு வரப்போகிறவர் ; இராமர் , கிரிஷ்ணர் , இயேசுவாக பூமிக்கு வந்தவர்

தனித்தலைமைப்பதி என்பவர் சிவனின் அம்சமாக பூமிக்கு வருகிறவர் : லக்ஷ்மணன் , அர்ச்சுனர் , சுந்தரர் , முகமதுநபியாக பூமிக்கு வந்தவர்

சத்திய யுகத்தை ஆள ஈசாநபி வானத்திலிருந்து இறங்கிவருவார் என மேலைநாட்டினரும் ; கல்கி வருவார் என இந்தியரும் எதிர்பார்த்து உள்ளார்களே அவரே தலைமைப்பதி

அவருக்கு முன்பு பூமிக்கு வந்து சமாதானத்தை நிறுவ பாடுபடுபவரே தனித்தலைமைப்பதி

சுந்தர மூர்த்தி நாயனாரைப்போல நான்கு சனகாதி முனிவர்களுள் ஒருவரே வள்ளல்பெருமானாக வந்தவர்

அந்த நால்வரும் ஒருவரை ஒருவர் மதிக்க தயங்க மாட்டார்கள்

நாமும் அதுபோல வருகிற சுந்தரர் விரைவில் வந்து வடலூர் வந்து வரங்களைப்பெற்று உலகம் முழுதும் சமரச சுத்த சன்மார்க்கத்தை நிறுவட்டும் என பிரார்த்தித்து வரவேண்டும்

நாராயணன் நாமத்தாலும் சிவனின் நாமத்தாலும் இறைவன் தமது பேரருளால் தங்களை நிரப்பட்டும்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி






No comments:

Post a Comment