Total Pageviews

Monday, March 20, 2017

திருப்புகழ் 1328                                                       OR

https://ia601502.us.archive.org/22/items/Thiruppugazh1328/EruMayilEri.oggஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே

கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே


மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே

ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.


மயில் வானத்தில் மேகம் வருவதைக்கண்டு மகிழ்ந்து ஆடுமாம் . மேகத்தின் வழியாக இறங்கி வரப்போகிற கல்கியை எதிர்பார்க்கிற ஞான உணர்வாளர்கள் சத்திய யுகத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்

அத்தகைய ஞான உணர்வாளர்களான பக்தர்கள் இறைவனை அடையும் தாகத்தில் நாளுக்கு நாள் தங்களை உள்ளுணர்ந்து பாவ சாபங்களிலிருந்து பரிசுத்தமாகி பரத்தை நோக்கி வளரும் இயல்புள்ளவர்கள்

ஆகவேதான் அருணையார் ஏறுமயில் என்கிறார்

எந்த ஆன்மீக இயக்கமோ அல்லது மதமோ மார்க்கமோ ஆறு மார்க்கங்கள் என்ற பிரிவுக்குள் அடங்கி விடும்

உடனே கிறிஸ்தவம் இசுலாமும் கூடவா என கேட்டீர்களானால் அவைகளெல்லாம் அருவ வழிபாடுகள் என்றளவில் சாக்கியம் என்ற மார்க்கமாக இந்தியாவில் உள்ள சமணம் பெளத்தம் வகையை சேர்ந்தவையே

இவ்வாறு சண்மார்க்கங்கள் என்ற வகைகளில் எந்த மார்க்கத்திலும் உள்ள ஆத்மாக்களில் யார் ஆன்மீக வாழ்வில் வளர்வார்கள் என்றால் யாரெல்லாம் ஆவிமண்டலத்தில் ஞானசற்குருவாம் முருகனால் ஆட்கொள்ளப்படுகிரவர்கள் மட்டுமே

நாளும் இறைவனுக்குள்ளும் பரிசுத்தத்திற்குள்ளும் யார் வளர்கிறார்களோ அந்த ஏறுமயில்களின் மீது ஏறி விளையாடுகிறவர் முருகனே ஆவார்


பிரணவ மந்திரத்தின் உட்பொருளை ஈசன் சிவன் மறந்து விட்டார் . அவருக்கு ஞானம் வழங்கியவர் முருகனே ஆவார் . அது சிவனுக்கு மட்டுமே என பலர் நினைத்துக்கொள்கிறார்கள்

நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் ஒருவர் எந்த மார்க்கத்தில் இருந்தாலும் அந்த மார்க்கத்தில் அவருக்கு தெளிவை உணர்வை இறை நெருக்கத்தை உண்டாக்குகிறவர் ஆவிமனடல குருநாதரனா முருகனே ஆவார்

ஆகவே மனு ஈசர்களான அனைவருக்கும் ஞானம் அருளுகிறவர் முருகனே ஆவார்

ஞானம் பயில்வோர் வாழ்வில் அவ்வப்போது மாயைகள் முன்வினைகள் தொடர்பாக வந்து தாக்கி குழப்பத்தை உண்டாக்கி முன்னேற விடாமல் வளைத்து பிடித்துக்கொள்ளும்

ஐயோ சாமி என்ன பாவம் செய்தோனோ இக்குழப்பத்தில் இருந்து கரையேற்றி விடுங்கள் என ஒரு பக்தன் பிரார்த்தித்தால் அவர்களின் முன்னை வினையின் முடிச்சை சரியாக அறிவுறித்தி அவிழ்க்க ஞானம் அளிப்பவர் முருகனே ஆவார்

நன்கு கவணிக்க வேண்டும் சடங்கு சம்பிரதாயம் என குபிட்டுக்கொண்டு மட்டும் இருந்தால் போதாது சகல பூஜை புனஸ்காரங்களை மட்டும் செய்துகொண்டிருந்தால் போதுமா வினைகளில் இருந்து தப்பிக்க முடியுமா என்றால் பதில் இல்லை

என்னை கைதுக்கி விடுங்கள் ; நான் தப்பிக்க உதவுங்கள் என கேட்பவர்களுக்கு மட்டுமே வினைகள் அவிழ்க்கப்படும்

கேளு கிடைக்கும் தட்டு திறக்கும்

இது சர்வதேச மொழி என்னமோ கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே ஸ்பெசாலிட்டி இருப்பதாக அவர்களே பீற்றிக்கொள்கிறார்கள்


நோய் நாடி நோய் முதல் நாடி என்பார்கள்

இன்று நம் வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு காரணம் முற்பிறவியில் அல்லது இப்பிறவியில் என்ன என்பதை சரியாக கண்டறிந்து அதில் மனம் திரும்புதல் செய்வோமானால் விடுதலை நிச்சயம்

கசாப்பு கடைக்காரனைப்போல பதிலுக்கு பதில் வெட்டாமல் விடமாட்டேன் என கத்தியை தீட்டிக்கொண்டு இறைவன் இருப்பதாக நாம் கற்பனை செய்துகொள்கிறோம்

இறைவன் நம்மை சொட்டுவது நாம் திருந்தவேண்டும் என்பதற்காக மட்டுமே அழிப்பதற்காக அல்ல பதிலுக்கு பதில் வாங்குவதற்கு அல்ல

மனம் திரும்பினால் நாம் மன்னிக்கப்படுவது நிச்சயம்


இன்றைக்கு நிறைய கிறிஸ்தவர்கள் ஜெபக்கூட்டங்களுக்கு விடுதலை கேட்டு அலைகிறார்கள் இடுப்புவலி சுளுக்கு போச்சு அல்லேலுயா என வல்லமைக்காரர்களும் கத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்

பின்னும் ஏன் இடுப்புவலி சுளுக்கு நிரந்தரமாக தீருவதில்லை

இக்கரபலா சொக்கரபலா என் பாவங்களை இயேசு மன்னித்துவிட்டார் விசுவாசித்துவிட்டேன் என்று திரும்ப திரும்ப கத்துவதால் மட்டும் நிரந்தர விடுதலை உண்டாவதில்லை

எந்த பாவத்தை நீ உணர்ந்தாய் எதை மன்னிக்கும்படியாக கேட்கிறாய் என்ற உணர்தல் மனம்திரும்புதல் இல்லாமல் இக்கரபலா சொக்கரபலா பாடுவதால் பெரிய அளவில் முன்னேற்றம் வருவதில்லை

இந்திய தத்துவஞானம் தெளிவாக பதில் சொல்கிறது

தன்னை உணரும் தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்

பின்னை வினையை பிடித்து பிசைவர்

உன்னை உணர்வது என்பது உன் எந்தப்பாவம் உன்னை பிடித்து ஆட்டிக்கொண்டுள்ளது என்பதை கண்டுணர்வதே


ஆனால் துரதிஸ்ட்டவசமாக நம்மை எது அமிழ்த்துக்கொண்டுள்ளதோ அதை கண்டுணரமுடியாதபடி மாயை மறைக்கும் என்பதாகும்

அசுரர்கள் என்ன செய்கிறார்களாம் ; அவர்கள் எங்கே இருந்து தாக்குகிறார்கள் என்பதை மனிதர்கள் கண்டுபிடிக்க கூடாதபடி மாய மலைகளை உருவாக்கிகொள்கிரார்களாம்

சூரபத்மன் கிரேவுஞ்ச மாயமலைகளை உருவாக்கி ஒழிந்துகொண்டு அதிலிருந்து உலகை தாக்கிகொண்டிருந்தானாம் அப்போது அந்த பொக்கு பாறைகளை ஊடுருவும் படியாக வேலை செழுத்தி மாயமலையை உடைத்தாராம் முருகன்

ஒழிப்பிடம் தகர்க்கப்பட்ட பிறகே உலகிற்கும் மனிதர்களுக்கும் மாறு செய்கிற அசுரர்களை ஒழிக்கமுடியும்

அதுவும் ஒழிக்க ஒழிக்க புதிய ரூபம் எடுத்து வந்து தன் வல்லமை எல்லாம் ஒழிந்த பிறகே சூரன் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்தான்

அவ்வாறு சரணடைந்த அசுரனே உலகை விழிப்படைய செய்யும் சேவலாக மாறுகிறான்

நம் உள்ளத்திற்குள்ளிருந்து பலவகையான சாக்கு போக்குகளை சொல்லிக்கொண்டு திரும்ப திரும்ப பாவ வாழ்விலேயே நம்மை இருத்தும் நம் சொந்த மாயைகளே சூரர்கள்

மாய மயக்கங்களை உணராமல் அதை விடவேண்டுமே என போராடாமல் எனக்காக மரித்தார் அல்லேலுயா என்பதால் மட்டும் பாவமன்னிப்பு இல்லை விடுதலையும் இல்லை

உணர்ந்து விசுவாசித்தால் மன்னிக்கப்படுவாய் என்றுதான் நாராயண அவதாரமான இயேசு உபதேசித்தார்

இயேசுவை உணர்வதல்ல உன்னை உணர்வது

உன்னை உணர்ந்து சற்குரு மூலமாக கடவுளிடம் மன்னிப்பு வேண்டினால் விடுதலை நிச்சயம்

இயேசு இவ்வசனங்களை பேசும்போது தன்னை குரு என்கிற அளவிலேயே பேசியுள்ளார்


இன்றைய நாளில் யார் உங்களுக்கும் கடவுளுக்கும் இணைப்பு பாலமாக இருக்கிறாரோ அவரே குரு

உங்களை உணர்ந்து குருவின் மூலமாக கடவுளிடம் வேண்டினால் வெற்றி நிச்சயம்

யார் தன்னை உணர்கிறார்களோ அவர்களே சற்குருவாம் முருகனுக்கு வள்ளிக்குரத்திகள்

அவள் குற்றம் குறை உடையவளே குரத்திதான் ஆனால் தன்னை உணர்கிற இயல்பும் கடவுளுக்கான ஆன்ம தேடுதல் உள்ள எவரும் முருகனால் நேசிக்கப்படுவார்கள் அவரே நம்மை தேடி வந்து நம் மனதில் புகுந்து தெளிவுகள் உண்டாக்கி நம்மை உய்வடையச்செய்வார்

இவ்வளவும் ஆறு மார்க்கங்களுக்கு அடையாளமானவை

சண்முகனான முருகன் ஆறு செயல்பாடுகளையும் பக்தர்களில் செய்துகொண்டுதான் உள்ளார்

இவ்வளவு சொன்ன அருணையார் ஒரு முக்கியமான விசயத்தை அழுத்துகிறார்

மேற்கண்ட ஒவ்வொரு செயல்பாட்டிலும் முருகா நீ ஒரு முகத்தோடு தானே இருக்கிறாய்

பின்னை எதற்காக ஆறுமுகன் என்று உன்னை அழைக்கிறார்கள் ?

ஒரு மனிதனுக்கு உள்முக வளர்ச்சியில் ஆறு கூறுகள் எப்படி உள்ளதோ அப்படியே வெளிமுகமாக ஆறு மார்க்கங்கள் அந்தந்த நாட்டிற்கு இனத்திற்கென்று வேதமாக அருளப்பட்டுள்ளன

ஆறுமார்க்கங்களும் நாட்டிற்கு நாடு வேறுபாடுகள் உள்ளன

ஆனாலும் அவைகள் அனைத்தும் வரப்போகிற சமரச வேதத்தில் ஒரே மையத்தில் இணைக்கப்படும்

முருகனுக்கு ஆறு முகங்கள் உள்ளது என்றால் அதுவும் உண்மை ஒரே முகம் உள்ளது என்றால் அதுவும் உண்மை அதனால் அவனை தேசிகன் என்றார்கள்


இந்தியா ஒரு தேசம் ஆனால் அதற்குள் வேறுபாடான பல மொழி பேசும் மக்கள் மாநிலம் மாநிலமாக அரசுகளும் உண்டு

அதுபோல முருகனும் ஆறுமுகமான ஒரு முகன் தேசிகன்

வரப்போகிற சமரச வேதம் சகல வேறுபாடுகளிலும் ஒற்றுமையை உண்டாக்கும்


நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்

ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்

ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்

ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்

ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி