Total Pageviews

Sunday, January 22, 2017

உத்திரகோசமங்கை



திருப்புல்லானிக்கு வடக்கே ``உத்திரகோசமங்கை ``என்றொரு ஸ்தலம் உள்ளது ! இங்கு ஆருத்திரா தரிசனம் என்பது புகழ் பெற்றது !இங்கும் நான் சென்றிருந்தேன் !அந்த சிவன் கோவிலில் ஒரு வயதான பெரியவருடன் நான் பேச்சு கொடுத்த போது அவர் சொன்ன முக்கியமான விஷயங்கள் :

ருத்திரன் +கோசம் +மங்கை 
1 )உலகிலேயே முதல் சிவன் கோவில் உத்திரகோசமங்கை கோவில்  !ஆதி காலத்தில் நவ கிரகங்கள் அறியப்படாத காலத்தில் சூரியன் சந்திரன் செவ்வாய் மட்டுமே  கிரகங்களாக அறியப்பட்டதால் இக்கோவிலில் இம்முன்று கிரகங்கள் மட்டுமே  உள்ளது என்பதிலிருந்து இக்கோவில் கட்டப்பட்ட காலம் பழமையானது என்பதை அறியலாம் !

2 )சிவன் பார்வதிக்கு உபதேசம் செய்த இடம் இது !உத்திரன் +கோசம் +மங்கை =மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம் !``குருகீதை `` என்பது சிவன் பார்வதிக்கு குருவின் மகத்துவத்தை பற்றி உபதேசித்தது (இது தற்போது சமஸ்கிரத பாடலாக உள்ளது -இதனை தமிழ் படுத்தி திரிபுகளை நீக்கி விரிவுரை கடவுள் சித்தத்தால் செய்வேன் )கடவுளை அடைய பக்தன் குருவை நாடி அடைவது பற்றி அற்புதமாக சிவனால் பார்வதிக்கு உபதேசிக்க பட்டுள்ளது !இது அவர்கள் ஆதிமனிதர்கள் என்பதையும் பின்னாளில் மனிதர்கள் தங்கள் குல தெய்வ வழிபாட்டின் படி இவர்களை கடவுளுக்கு இணை வைத்திருக்க வேண்டும் என்கிற சந்தேகத்தை உறுதிபடுத்துகிறது !

ஆதிமனிதர்கள் --தமிழர்களிடம் ஒரு பரவலான பழக்கம் !ஆங்காங்கே குடி பெயர்ந்து சென்று அங்கே நிலைத்து பேருக்கும் போது பேர்சொல்லும் படி வாழ்ந்த தங்கள் மூதாதைக்கு அவ்விடத்திலே குலதெய்வ வழிபாடு செய்வார்கள் !அதை மைய படுத்தி தங்களை ஒரு புதிய குலமாகவும் அறிவித்து கொள்வார்கள் !ஒரு சாதனையாளர் அல்லது ஞானி ,முனிவர் ,சித்தர் அடங்கினால் அந்த சமாதியின் மேல் ஒரு லிங்கம் வைத்து அவர் பெயரோடு ``ஈஸ்வரன் `` என சேர்த்து அதை கோவிலாக்கி வழிபடுவார்கள் !அதன் அர்த்தம் இவரும் கடவுளுக்கு இணை ஆகிவிட்டார் என்பதுதான் !!அகத்தியர் அடங்கிய இடம் அகத்தீஸ்வரம் ; கமல முனி அடங்கிய இடம் திருவாரூர்  ; கும்ப முனி அடங்கிய இடம் கும்பேச்வரம்  இப்படி தமிழகத்தில் பல கோவில் ஸ்தல வரலாறுகள் உள்ளன !

ராவணேஸ்வரன் மணைவி மண்டோதரி நீண்ட நாள் திருமணம் இல்லாத போது உத்திரகோசமங்கையில் இக்கோவிலில் வேண்டுதல் செய்து அதன் பலனாக ராவணனுக்கும் மண்டோதரிக்கும் இங்கு தான் திருமணம் நடந்ததால் மங்களநாதர் மங்களாம்பிகை சன்னதி என பெயர் வைக்க பட்டுள்ளது !





மிகப்பழமையான இந்த கோவில் கோபுரத்தில் நாராயனனைப்பற்றிய சிற்பங்களே இடம் பெற்றுள்ளன

நாராயணனது விஸ்வ ரூபத்தை உணர்வது அல்லது தரிசிப்பது அக்காலத்தில் முக்திக்கு அடையாளமாக கருதப்பட்டது

ஒரே நபர் ஆனால் தலைகள் பத்து எட்டு ஆறு நான்கு இரண்டு ஒன்று என அடுக்குகளாக சித்தரிக்கப்பட்டுள்ளது விஸ்வ ரூபமாகும்

அருகில் உலகளந்த பெருமாள்

அதை அடுத்த சிற்பம் முக முக்கியமானது

கீழே மொத்தம் ஐந்து சப்பணம் இட்ட கால்கள் மீது ஒருவர் அமர்ந்திருப்பதை கவனியுங்கள் மேலே நான்கு தலைகள் வராகர் நரசிம்மரின் முகங்கள் தெரிகிறதல்லவா

இரண்டு மனித முகங்கள் ராமர கிருஷ்ணர்

ஆனால் ஆறு கால்கள் இருப்பதால்  நாராயணனது இன்னும் இரண்டு முகங்கள் பின்பக்கம் இருப்பதாக கணக்கு மறைபொருளாக உள்ளது

தெரியும் இரண்டு முகங்கள் ஒளி சரீரமாக பூமிக்கு வந்தவை அதாவது பிறக்காமல் வந்தவை

வராகர் நரசிம்மர்
 
இரண்டு தாயின் சரீரத்தில் கடவுளின் ஆவியால் கற்பவித்து வந்தவை அதாவது ஆண் பெண் சேர்க்கையில்லாமல் வந்தவை
 
ஆக எஞ்சிய மறைபொருளான இரண்டு முகங்களில் ஒன்று பிறக்காமல் வந்தது வாமன அவதாரம்

இன்னொன்று ஆவியால் பெண்ணின் கர்ப்பத்தின் மூலமாக வந்தது

அது சாட்சாத் இயேசுவே

இயேசு என்றவுடன் காரித்துப்புவது இந்து உணர்வாளர்களின் கடமை என்ற மாயையை விட்டாக வேண்டும்

அவர் ராமராகவும் கிரிஷ்ணராகவும் வந்தவர் என்ற உண்மையை சொல்வதன் மூலமாக மட்டுமே கிறிஸ்தவ மதத்தை சுவீகரித்து ஜீரணிக்க  முடியும்
 
நாராயணன் நாமத்தினாலும் ஆதிசேஷனனின் நாமத்தினாலும் நாராயணியின் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது பேரருளால் நிரப்ப வேண்டுகிறேன் 



அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

No comments:

Post a Comment