Total Pageviews

Friday, January 16, 2015

குலதெய்வ வழிபாடு






குலதெய்வ வழிபாடு என்பது குருபாராம்பரியம் போன்றதே . ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறக்கும் ஒரு ஆத்மா – மனிதனுக்கு அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவனை கண்காணித்து பாதுகாப்பதில் அந்த குடும்பத்தின் காவல் தெய்வம் போல ஒரு ஆவி மண்டல சக்தி பொறுப்பெடுத்துக்கொள்கிறது . குடும்ப ஆண்டவர் என்பதாகவும் இந்த ஆவி மண்டலசக்தி அறியப்படும் .

குரான் 13:11. மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்  (மலக்குகள் என்றால் தேவதூதர்கள் அல்லது ஆவிமண்டல சக்திகள் என்பது பொருள் )

கடவுள்தான் எல்லாவற்றையும் நிர்வகிக்கிறார் என்றாலும் ; அவரது பரலோக ராஜ்ஜியத்தின் பூமிக்கான அதிகாரிகளாக இந்த குலதெய்வங்களை எடுத்துக்கொள்ளலாம் .

ஒரு குறிப்பிட்ட குலதெய்வத்திற்கும் பல பரிவாரங்களாகவும் ஆவிகள் இருக்கின்றன . ஆவி மண்டலமும் பல படித்தரங்கள் உடையதாகவே இருக்கிறது . இந்த ஆவி மண்டலத்தில் அளவான புண்ணியம் செய்த சில மனித ஆத்மாக்களும் ஆவிகளாக சென்று சேர்ந்துகொள்வதும் புண்ணியம் தீர்ந்ததும் மீண்டும் மனித பிறப்பெடுப்பதும் உண்டு .

ஆக ஒவ்வொரு மனிதனும் கடவுளின் பரலோக ராஜ்ஜியத்தில் வளர்வதற்கும் பூமிக்குரிய வாழ்வில் கடமைகளை நிறைவு செய்வதற்கும் முன்னேறுவதற்கும் இந்த குலதெய்வ ஆவி மண்டலத்தை இனம் கண்டு வைத்துக்கொள்வதும் அவைகளை பிரிதி செய்து அவைகளின் பரிபூரண அருள் வளையத்திற்குள் மறைத்துக்கொள்வதும் பூமியில் அவசியம் .

ஆவி மண்டல குருகுலத்தில் நமக்கு பக்கபலமாக இருப்பவை எவை எவை என்பதை ஒவ்வொரு மனிதனும் இனம் கண்டுகொள்வது முன்னேறுவதற்கு அவசியமானது .

நமக்காக பரிந்து பேசுபவை ; நம் குற்றம் குறைகளை பெரிது படுத்தாது சகித்துக்கொள்பவை ; நம்மை எப்படியாவது கைதூக்கிவிட முயற்சிப்பவை இந்த சக்திகளே .

கடவுளின் பரிசுத்த மண்டலத்தின் சக்திகளை தொடர்பு கொள்ளும்போது அதற்கு குறைந்த பட்ச நியம ஆசாரங்களை கடைபிடிப்பது அல்லது தகுதியோடு நாம் இருப்பது அவசியம் .

அப்படி எந்த தகுதியும் நியம ஆசாரங்களும் இல்லாமல் இருப்பது இருப்பதுபோலவே இந்த குலதெய்வ மண்டலங்களை நாம் தொடர்பு கொள்ளமுடியும் . அவை சகித்துக்கொண்டு பாதுகாப்பு அளிக்கும் .

இந்த குலதெய்வ மண்டலங்கள் கடவுளை நெருங்கிய வட்டாரங்களில் இருந்து கொஞ்சம் தாழ்ந்த நிலையில் இருப்பவையே . மனிதனுக்காக தரம் இறங்கி வந்திருப்பவை . தரம் தாழ்ந்தவை என்பதால் உயர்ந்த குருபாரம்பரியத்தின் தொடர்பில் யோகம் பயில்வோர் ; ஓரளவு வளர்ந்தவர்கள் குலதெய்வங்களை கண்டுகொள்ளாமல் இருந்து விடலாம் என்பதான போக்கு அதிகரித்து வருகிறது . அது சரியல்ல

எந்த உயர்ந்த சக்திகளும் நமக்கு அனுக்கிரகம் செய்யவேண்டுமானால் இந்த குலதெய்வ மண்டலத்தின் அருள்வளையத்தின் ஊடாகவே செய்யமுடியும் . அப்போது அவைகள் அதற்கு இடம் கொடுக்கவேண்டும் . அல்லது முட்டுக்கட்டையாக இருந்து விடக்கூடாது .

ஆவி மண்டல சக்திகளாக இந்த குலதெய்வ வட்டாரங்கள் இருந்தாலும் அவை முழுமையாக உயர்ந்தவை அல்ல . அங்கிருக்கும் நமது முன்னோர்கள் இன்னும் முன்னேற வேண்டியிருக்கும் . அதை அவர்கள் அடையவேண்டுமானால் அது பூமியில் உள்ள நம்மை சார்ந்துகொள்வதன் மூலமாகவே முடியும் . ஆகவே அவர்களால் நாம் வளர்வதுபோல சரீரத்தில் இருக்கும் நம்மால் மட்டுமே அவர்களும் வளரமுடியும் . இது ஒருவரில் ஒருவர் கலந்து கைதூக்கிவிடுவது .

சிலவேளைகளில் நல்ல இடத்தில் இல்லாமலும் பிறவி எடுக்க முடியாமலும் தண்டனை போல முன்னோரின் ஆத்மா இருளுக்குள் இருக்கும் . இத்தகையவர்கள் பிறவி எடுக்க பின்னடியார்களின் புண்ணியம் அவசியமாக இருக்கும் . இதுவே பித்ரு தோஷம் என்று ஜாதகத்தில் இருக்கும் . அந்த நபர் ஜனிக்கும்போது முன்னோர்களின் பாவங்களை சுமக்கும் சுமை தாங்கியாகவே ஜனித்திருப்பார் . அதை புரிந்து கொண்டு அவர் பிரார்த்தனைகளை ஏறெடுக்க வேண்டும் . அதை செய்யும் வரை எதை செய்தாலும் முட்டுக்கட்டையாகவே வாழ்க்கை இருக்கும் .

எந்த ஒரு செயலையும் எளிதாக செய்யமுடியாது . அடுத்தவர் உழைத்ததுபோல பல மடங்கு உழைத்தாலும் பலன் வந்து சேராது . இவர்கள் நாளும் இறைவனிடம் தங்கள் முன்னோர்களுக்கு நற்கதியும் சாந்தியும் சமாதானமும் அருளும்படி வேண்டிக்கொண்டே இருக்கவேண்டும் . அப்போது மட்டுமே அன்றாட பிரச்சினைகளில் ஆறுதலும் ஞானமும் உண்டாகும் . பொறுமையும் சாந்தியும் அருளும் கூட பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு சித்திக்கும் . ஏனெனில் ஆவி மண்டலத்தில் எத்தனை ஆத்மாக்கள் விடுதலை ஆக்கப்படுகிறார்களோ அந்த ஒவ்வொரு ஆத்மாவின் விடுதலையின் போதும் ஒரு ஞானம் பரிசாக கிடைக்கும் .

ஆனால் இந்த குலதெய்வ வழிபாடு என்பதை அவர்களை மட்டும் வழிபடுவதாக நாம் காலப்போக்கில் அர்த்தப்படுத்திக்கொண்டு கடைப்பிடித்து வருகிறோம் .

இவர்கள் குருமார்கள் – இவர்கள் மூலமாக கடவுளை வழிபடுவதாக பிராத்தனையை ஏறெடுத்து பழகவேண்டும் .

குரான் 4:136.   நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெது தூரம் சென்றுவிட்டார்.

குரான் சகல சக்திகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு கடவுளை மட்டும் வழிபடுங்கள் என்று சொல்வதாக அர்த்தப்படுத்திவிட்டார்கள் . ஆனால் மேற்கண்ட வசனம் கடவுளையும் அவரது ஆவிமண்டல சக்திகளையும் அவரது அவதாரங்கள் அடியவர்கள் மூலமாக அருளப்பட்ட சகல வேதங்களின் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள் என்றுதான் குறிப்பிடுகிறது

இதற்கு முந்தய வேதங்கள் என்றால் ஆதி வேதங்களான இந்து தர்மமே  என்பது அரபியர்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்பது மனித குறைபாடு

இந்து தர்மத்தில் உள்ளவர்களோ பல ரூப வழிபாடு ; யாரை வழிபட்டாலும் அதுதானாகவே கடவுளுக்கு போய் சேர்ந்து விடும் என்று நம்பிக்கொண்டிருப்பதை கொஞ்சம் குரானின் வெளிச்சத்தில் மாற்றிக்கொள்ள வேண்டும் . அது யார் மூலமாகவும் எங்கு சென்றாலும் எந்த கோவில் சென்றாலும் அந்த சக்தியை குருவாக வைத்து அருட்பெரும்ஜோதியாகிய ஆரத்தியை வழிபடுவதாக மாற்றிக்கொள்ளவேண்டும்

இந்த குலதெய்வங்கள் ஓரிடத்தில் ஆவாகனம் ஆகி இருக்கும் . அந்த ஸ்தலத்திற்கு வருடம் ஒரு முறையாவது சென்று அங்கு பொங்கலிட்டு தரித்திருப்பதே அவர்களை பிரிதியாக்கிவிடும் . குழந்தைகளுக்கு இங்கு முதல் முடி இறக்குவது குரு உபதேசத்திற்கு அடையாளமாக காதில் வேதம் ஓதி காதை குத்துவது செய்யவேண்டும் .




முக்கியமாக தைப்பொங்கல் – உத்திராயணம் தொடங்கும் முதல் நாள் ஆவிமண்டலத்தில் விடுதலை கட்டவிழ்க்கப்படும் நாள் . தட்சிணாயன காலம் இறங்குகாலம் . தடைகளும் நெருக்கடிகளும் உள்ள காலம் . இக்காலத்தை பக்திக்கும் வேண்டுதலுக்கும் அதாவது ஒரு குறிப்பிட்ட பிரச்சினையின் விடுதலைக்காக ஆவி மண்டலத்தில் உள்ளோர் பிராத்தனைக்கு பயன்படுத்துவார்கள் . அதன் பலனாக உத்திராயனத்தில் விடுதலை உண்டாகும் . புரட்டாசி விரதம் ; கார்த்திகை விரதம் ; மார்கழி வழிபாடு ஆகிய இவையும் இவையோடு தொடர்புள்ளதாக ஐயப்பனுக்கு மாலை அணிவது ; முருகனுக்கு மாலை அணிவது ; சக்தி மாலை ; மார்கழி நீராடல் ஆருத்ரா தரிசனம் போன்றவை பூமியில் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன

ஆதித்தமிழர்கள் தையின் முதல்நாளை மனித பொங்கல் என்றுதான் அழைத்தார்கள் . நம் முன்னோர்களுக்காக விரதமிருந்து – அவர்களை அடையாளப்படுத்தும் குலதெய்வ கோவிலுக்கு சென்று அவர்கள் மூலமாக கடவுளை வேண்டுவது – அவர்களுக்காகவும் கடவுளை வேண்டுவது என்றாகிவிடும் . அந்த நாளில் நம் முன்னோர்களில் யாராவது ஒரு ஆத்மாவிற்கு நற்பேறுகள் கிடைக்குமென்றால் அதன் பலன் அந்த கோவிலுக்கு சென்றதால் நமக்கும் கிடைக்கும் . இரவு தளுகை இட்டு சகல காய்கறிகளையும் படைத்து ஒருசந்தி விடுவார்கள் . காக்கைக்கும் உணவு படைப்பார்கள் .

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி அனுபவப்பூர்வமானது . அது ஆவிமண்டலத்திலும் புதிய வளர்ச்சியை உண்டாக்குவது . பூமியிலும் பல நெருக்கடிகளில் வழியை திறந்து விடுவது .

முந்தய யுகங்களிலும் தட்சினாயனத்தில் ஜலப்பிரளயமும் தை யிலேயே புதிய யுகம் வாழ்வு தொடங்கியுள்ளது

திரேதா யுகத்தில் கூட ராவணன் உள்ளிட்ட

அரக்க சேனைகள் அழிக்கப்பட்டு

ராமேஸ்வரத்தில் அவர்களுக்காக சீதையால்

ஆவாகனப்படுத்தப்பட்ட லிங்கத்தின் மூலமாக

சாந்தி உண்டாக்கும் வழிபாடு ராமரால் தை

அம்மாவாசையிலேயே செய்விக்கப்பட்டது .

அதுபோல ஆடி அம்மாவாசையிலும்

முன்னோர்களுக்காக இறைவனை வேண்டுவது

உத்தமம்





துவாபர யுகத்திலும் குருசேத்திர யுத்தம் புரட்டாசியில் ஆயத்தப்படுத்தப்பட்டு மார்கழிக்குள்ளாக முழு அழிவும் நடந்தேறியது .

மாபெரும் ஞானியும் பக்தனுமான பீஷ்மர் மட்டுமே பரலோகம் செல்ல தையில் ; உத்திராயணம் தொடங்கும் வரை உயிரை பிடித்து வைத்துக்கொண்டு அம்புப்படுக்கையில் தவம் இருந்தார் .

அவர் மரணிக்கும் முன்பு மனித குலம் உய்வடைய விஷ்ணு சகஸ்ரநாமத்தை உபதேசித்தார் . உய்வடைவோருக்கு அதில் ஞானப்பொக்கிஷம் உண்டு .

தை முதல் நாளில்தான் அவர் மரணித்தார் . மாபெரும் தவயோகியும் ஞானியுமான அவரது ஆசிகளும் தை குலதெய்வ வழிபாடு செய்வோருக்கு நிச்சயம் கிடைக்கும் .

இன்று பலர் குருமார்க்கங்கள் மூலமாக

உய்வடையும் வழியில் உள்ளனர் .

அத்தகையோரும் தங்கள் தங்கள்

குலதெய்வங்களின் ஆசியில்லாமல் குருவருளை

பரிபூரணமாக அடையமுடியாது .  ஆகவே

அவர்களின் ஆசியை தை முதல் நாளிலும் ;

சிவராத்திரியன்றும் நாடி பெற்றுக்கொள்வது 

அவசியம் 

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் சேஷனனின் நாமத்தினாலும் காமாஷியின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி 





No comments:

Post a Comment