Total Pageviews

Thursday, May 8, 2014

தியானத்தின் மூன்று படிகள் !!



1)தாரணை - மனதை ஒன்றின் மேல் குவிப்பது

2)பிரத்யகாரம் - அதனோடு ஒன்றி விடுவது ; லயிப்பது

3)சமாதி - தன்னிலையை மறந்து விடுவது

தியானம் செய்வதை சாதனை என்பார்கள் அது ஒரு உழைப்பு

அதை அனுதினமும் சில நிமிடங்கள் பயில வேண்டும்

அப்படி நாம் பயிலுபோது நமக்கு பெயர் சாதகன்

ஒரு முயற்சி அவ்வளவுதான் - சில நிமிடங்களே போதுமானது

பழக பழக நேரமும் ஈடுபாடும் பலன்களும் கைகூடும்

உடல்நிலையில் ஆரோக்கியம்
மனதில் தெளிவு ஒரு சமாதனம் - சாந்தி
ஆன்ம பலம் உண்டாகி அறிவில் ஒரு விழிப்பு - நுண்ணிய விசயங்களில் நுழைவோம்

ஆவி மண்டலத்துடன் - மேலோகத்தொடர்புகள் உண்டாகும் - புதிய வழிகள் திறக்கும்

அனுபவங்கள் ஞானமாக பரிமாணமடையும்

ஆரம்ப காலத்தில் தியானத்திற்கு மிகவும் உகந்த நேரம் - சந்தியா காலம் - அதாவது பகலும் இரவும் சந்திக்கும் அதிகாலை அல்லது மாலை

இந்த காலங்களில் ஆவி மணடலத்தில் நல்ல சக்திகள் அதாவது தேவர்களின் ஆதிக்கம் பூமியில் இருக்கும்

மனமும் எளிதாக அமைதி நிலையடையும்

ஒருவருக்கு மேற்பட்ட ஆத்மாக்கள் கூடியிருந்தால் அந்த ஒத்ததிர்வு ஆழ்ந்த தியானத்தை சித்திக்க செய்யும்

எங்கோ தனித்திருந்தாலும் - இணையத்தொடர்பால் - குறித்த நேரத்தில் குறித்த விசயத்திற்காக பிரார்த்தித்தால் பல இடங்களிலிருந்து பரம் இழுக்கப்படுவதால் ஆழ்ந்த தியானம் சித்திப்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறோம்

அதை நீங்களும் அனுபவித்து பாருங்கள் !!

ஒன்றின் மீது மனதை குவிப்பது தியானத்தின் துவக்கம் அதன் பெயர் தாரணை
இந்த தாரனையில் நாம் நிலைக்க முயலும் பொது மனம் அலைபாயும் அது இயல்பு ஆனாலும் பழக்கத்தில் அல்லது பலர் இருக்குமிடத்தில் தெய்வீக சக்தி நம்மை ஆட்கொண்டு தியானம் - அதாவது லயித்து விடுவது உண்டாகும் ! தியானம் என்றால் லயித்தல் அல்லது கூடியிருத்தல் என்பதே அர்த்தம்

அப்படி இருக்கும் பொது ஏதாவது ஒரு நிமிடத்தில் நம்மை மறந்து விடுவது கிடைக்கும் இந்த ஒரு நிமிடம் கிடைப்பதற்கே நாம் தியானிக்கிறோம் அந்த நிலையில் நமக்கு பல அனுகூலங்கள் உண்டாகும் . அதுவே சமாதி என்பது

இந்த சமாதி நிலையில் நம் மனம் அலைபாய்வதை நிறுத்தி விடுவதால் சக்தி நம்மை விட்டு விரயமாகாமல் தடுக்கப்படுகிறது அது நமது உள்ளாற்றலாக பரிணாமம் அடைகிறது

நாம் பிரார்திக்கிர --தியானிக்கிர நேரம் தான் நம்மை உயிர்ப்பிப்பது ! நமது உயிர் ஆகிய ஆவி கடவுளின் ஆவியிடத்திளிருந்து தன்னை பலப்படுத்திக்கொள்ளுகிரது !

அன்றாட வாழ்க்கையில் அலசடிபட்டு பலகீனமடைந்திருக்கும் நாம் கூட்டுபிரார்த்தணை செய்தால் வாரம் ஒரு முறை டயருக்கு காற்று அடித்துக்கொள்வதைப்போல பஞ்சர் இல்லாமல் ஓடலாம்!

நண்பர்களே ஊர்கூடி தேர் இழுப்பது இறைவன் தொடர்பான விஷயங்களில் கூட்டு முயற்ச்சி பெரும்பலன் தரும் என்பதை ஞாபகப்படுத்தவே

பல குருமார்களிடம் தியாணங்கள் கற்றவர்கள் பலர் முக நூலில் உலவுகிறீர்கள் எங்கெங்கோ இருப்பவர்கள் எப்படி கூட்டு என நினைக்காதீர்கள் கடவுளின் பார்வைக்கு இது கூட்டு

https://www.facebook.com/groups/631935090221724/


எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் குறைந்தது ஐந்து நிமிடம் மட்டுமாவது தியானித்து விட்டு கடவுளை நோக்கி வேண்டுங்கல் போதும் !

அபிரதமான இறை அருள் உங்களை சூழும்!!!


நாரயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன் !


ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
    
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஓரிறைவனையே துதிக்கிறோம்

சிவனின் நாமத்தினாலே    

ஓம் நமோ சிவாய !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி