மரனமில்லா பெருவாழ்வு---நித்திய ஜீவன்--பரலோக பெருவாழ்வு---இவையே ஆதி இந்து மதம்,யூதம்,இசுலாம்,கிரிஸ்தவம் பேசுகிற லட்சியம்!வள்ளலாரின் லட்சியமும் அதுவே!
யுகங்கள்--தற்ப்போது கலியுகம்:கலி முடிவில் கல்கி யுகம் தொடங்கும் வரை கலியின் ஆட்சி நடக்கும் என்பதை கிரிஸ்ணர் தர்மருக்கு உபதேசித்து விட்டு பரலோகம் சென்றார்!
கலி என்றால் அசுரர்கள் ஆட்சி!இதில் யார் கடவுளை தேடுகிறார்களோ அவர்கள் அசுரர்களின் பலவகையான மாயங்களை தாண்டி கடவுளை தேடவேண்டும்!மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் அசுரர்களின் மாயத்திரை வந்துவிட்டது!அதுவே ஏழு மாயத்திரைகள்
அவற்றை விலக்கினால் தான் கடவுளை தரிசிக்க முடியும் !
அதில் ஒன்று பலவகையான கடவுளார்கள் சித்தரிக்க படுவது! அதனை விலக்கி ஏக இறைவனை வழிபடுவது வள்ளலார் காட்டிய நெறி!
தெய்வங்கள் பல பல சிந்தை செய்வாரும்
சேர்கதி பல பல செப்பு கின்றாரும்
பொய் வந்த கலைபல புகன்றிடுவாரும்
பொய் சமயாதியை மெச்சுகின்றாரும்
மெய்வந்த விளக்கம் ஒன்று இல்லார்
மேல்விளைவு அறிகிலர் வீண் கழிக்கின்றார்
எய்வந்த துன்பம் ஒழித்து அவர்க்கு அறிவு
அருள்வீர்
எனைப்பள்ளி எழுப்பி மெய் இன்பம் தந்தீரே !
உலகம் முழுவதிலும் உருவ வழிபாடு,அருவ வழிபாடு என்ற இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன!
கந்தர் கோட்டத்தில் ஆரம்பித்து படிபடியே வள்ளலார் அருவ வழிபாடு என்கிற உண்மையில் வந்து முடிந்தார்!
அவரின் இறுதி உரையை படியுங்கள் அதில் ஏக இறைவனை பற்றிய தெளிவான அழைப்பு உள்ளது!
அருட்பெரும் ஜோதி;தனிப்பெருங்கருனை என்ற சுட்டுதலுக்கும் அளவற்ற அருளாலன்;நிகரற்ற அன்புடையோன் என்ற சுட்டுதலுக்கும் என்ன வித்தியாசம் ?
கடவுளை பெயருமற்ற உருவமுமற்ற நிலையில் வழிபடுவது தான் எல்லா சித்தர்களின் ஞானியரின் நெறி!உலகம் முழுவதிலும் எல்லா இறைதூதர்களின் நெறி!இந்தியாவில் மன முதிர்ச்சி பெற்றவர்கள் ஞான மார்க்கத்திர்க்குள் தானாக வந்து விடுவார்கள் என கண்டிப்பாக சொல்லாது விட்டுவிட்டார்கள்!
இந்தியாவில் 2000 ஆண்டுகளாக அரச மதமாக விளங்கிய புத்தமும்,சமணமும் அருவ வழிபாடு கொள்கைகளே!திருவள்ளுவர் சமணர்!இந்த எல்லா கொள்கைகளும் ஒரே இடத்தில் முடிகிறது என்கிற தெளிவுற்குள் வள்ளலாரின் சீடர்கள் வரவேண்டும்!
புத்தரை கடவுளின் அவதாரம் என அறிவிக்கும் முன் அது அருவ கடவுளை உயர்த்திபிடித்தது!வேண்டாத சாஸ்திரங்கள் சம்பிரதாயங்களை ஒழித்தது!புத்தர் கடவுளாக்க பட்டதும் சமணம் மஹாவீரரால் ஸ்தாபிக்க பட்டது!அதில் இன்றளவும் அருப இறைவனே வழிபடப்படுகிறார்
வள்ளலார் உயர்ந்த நெறியை எட்டியவுடன் அதனை நிலைனிருத்த பாடுபடும் முன் சித்தியாகிவிட்டார்
இன்னும் அவர் கொஞ்ச காலம் இப்பூமியில் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!இந்தியாவை எவ்வளவு ஒளிமயமாக்கி இருப்பார்?எதற்காக பூமிக்குரிய வாழ்வை முடித்துக்கொண்டார்?
மாற்று கருத்தை நீங்கள் கேள்விப்பட்டது இல்லை!அவர் ஒளி உடம்பு பெற்று அருட்பெரும் ஜோதியில் கலந்து விட்டார்!இதனை நான் நம்பாதவனல்ல!அப்படிப்பட்ட நிலையை பெற வேண்டும் என்பது எனது ஆசையும் கூட!வள்ளலார் அதனை பெற தகுதியானவர் தான்!
ஆனால் மாற்று கருத்து ஒன்று உள்ளது!கடவுளே உண்மையை அறிவார்!நம்ப வேண்டாம் தெறிந்து கொள்ளுங்கள் போதும்!
அருப கடவுள்;ஜோதி வழிபாடு;சத்திய ஞான சபை என்கிற ஒரு அமைப்பு;தனி கொடி இப்படி வள்ளலார் செய்தது சனாதன இந்துக்களின் எதிர்ப்பை மட்டுமல்ல வெள்ளைக்காரர்களுக்கும் சந்தேகமுண்டாகி ஒரு கண் அவர் மீது வைத்திருந்தார்கள்!
கலெக்டர் ஒருவர் வள்ளலாரின் அருகில் குதிரையிலிருந்த படி சாமியாரே என அலட்சியமாக அழைத்தாராம்!வள்ளலார் கவனியாதவர் போல் இருக்கவும் தனது கைத்தடியை வைத்து குத்த முயன்றாராம்;அப்போது கைத்தடியின் முனையை வள்ளலார் பிடிக்க பிடித்த பகுதி பசும்பொன்னாக மாறிவிட்டது!உடனே அந்த கலெக்டர் தங்கம் செய்ய சக்தி படைத்த சாமியார் என அவரை பற்றி இங்கிலாந்துக்கு தகவல் கொடுத்துவிட்டார்!
அதனால் ``முஹமது`` இறைதூதர் என தன்னை அறிவித்து தனி அரசாட்சியையும் மதத்தையும் உலகில் ஸ்தாபித்தாரோ அப்படி தங்கம் செய்ய தெறிந்த இவர் மதத்தையும் தனி அரசையும் ஸ்தாபித்து விட வாய்ப்பு உள்ளது!தனி கொடி;சங்கம் வைத்துள்ளார்; விடுதலைப் போராட்டகாரர்களை கண்கானிப்பது போல இவரையும் கண்கானியுங்கள் என உத்திரவு வந்து தனி போலிஸ் குழு இவரை கண்கானித்து வந்தது!
அப்போது ஒளியுடம்பு பெற போவதை பற்றி வள்ளலார் பேசிய சாக்கை பயன்படுத்தி அவரை அழித்து விடுங்கள் என வெள்ளை அரசாங்கம் சதி செய்து அவர் குடிலில் தனித்து தியானித்த போது அவரை களவாய் கொண்டு போய் கொண்று விட்டார்கள்!சில நாள் கழித்து தாசில்தாரும் வந்து குடிலை திறந்து அவர் காணவில்லை அவர் சித்தியாகி விட்டார் என பிரபல படித்தி விட்டார்கள் என்றொறு கதை உண்டு!
நான் வள்ளலாரை குறைத்து மதிப்பிடவில்லை;அவர் வந்தடைந்த உயர்ந்த நெறியை இன்னும் கொஞ்ச காலம் அவர் பூமியில் இருந்திருந்தால் இந்தியா எவ்வளவு மேண்மை பெற்றிருக்கும்!ஆனால் அவரின் லட்சியம் வீறு குறைந்து விட்டதோ என்கிற ஆதங்கமே எனக்கு!
ஜீவ காருண்யம் மட்டும் அவரது பிரதான நெறி அல்ல!ஏக இறைவனை -ஜோதி சொரூபனை உயத்தி பிடிப்பது!
உலகம் முழுமையும் கடவுளின் செயல்பாடு வேறுவேறு மார்க்கம் போல வெளிப்பட்டிருந்தாலும் அவைகள் அனைத்தும் கடவுளிடமிருந்து வந்தவையே . அவைகளின் பொது நெறியை கண்டறிந்து சமரச வேதத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் அதுவே வள்ளலார் சுட்டிய சமரச வேதம்
கடவுள் நம் அணைவரையும் தமது முற்றறிவால் நிறப்புவாராக!
நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய
சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய
சேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சேஷாய
நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்சோதி
No comments:
Post a Comment