பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர்
பகவான் ரமண மகரிஷி
பகவான் சாய்பாபா
பகவான் மகாவீர் பாபா
பகவான் வியாசர்
பகவான் ஸ்ரீகிருஷ்ணர்
பகவான் ஸ்ரீராமர்
இவைகள் எல்லாமே கடவுளை நெருங்கிய பெரியவர் அல்லது வழிகாட்டி அல்லது
குரு என்ற அர்த்தத்திலேயே வருகின்றன
இன்னும் ஆங்கிலத்தில் சொன்னால் லார்ட்
இந்த லார்ட் என்பது மரியாதைச்சொல்
பைபிளில் கடவுளை குறிக்கும் இடங்களில் லார்ட் காட் என்றும் இயேசுவை குறிக்கும் இடங்களில் லார்ட்
ஜீசஸ் என்றும் மரியாதையுடன் விளிக்கிறார்கள்
இங்கு லார்ட் என்பது விளிப்பு சொல் !
இந்த லார்டை தமிழ் படுத்தும் போது கர்த்தராகிய தேவன் என கடவுளையும்
கர்த்தராகிய இயேசு என சற்குரு இயேசுவையும் விளித்துள்ளார்கள்
காலம்காலமாக எதிலும் கலப்படம் செய்யும் சீடர்கள் கர்த்தர் என்ற
விளிப்பு சொல்லையே கடவுளாக திரித்து விட்டார்கள்
கர்த்தர் என்பவர் ஒரு கடவுள் என்பதாக இந்திய கிறிஸ்தவர்கள் திரித்து
விட்டார்கள்
அது போன்ற ஒரு மனித திரிபு இந்து வேதங்களிலும் சீடர்களால்
புகுத்தப்பட்டுள்ளது
அது பகவான் என்ற சமஸ்கிரத சொல்லை - குரு என்ற அர்த்தத்தில் வரும் விளிப்பு சொல்லை கடவுள் என்ற அர்த்தத்தில் விளக்கம் சொல்வது
கீதையில் பகவான் கிரிஸ்ணர் என்ற பதத்தை கடவுள் கிரிஸ்ணர் என்பதாக
அர்த்தம் கற்பித்து கொண்டார்கள்
உண்மையில் சற்குரு கிரிஸ்ணர் என்ற அர்த்தமே அதற்கு சரியான பொருள்
உண்மையில் சற்குரு கிரிஸ்ணர் என்ற அர்த்தமே அதற்கு சரியான பொருள்
கடவுளுக்கு கொடுக்கும் அனைத்து மரியாதையையும் குருவுக்கு கொடுத்தால்
தவறில்லை ஆனாலும் குரு கடவுளில்லை என்ற சொரணை மட்டும் சீடனுக்கு வேண்டும்
குரு மூலமாக கடவுளை வழிபடுவதை எப்போதும் கைக்கொள்ள வேண்டும் குருவை
மட்டும் வழிபட்டால் போதும் என்று இருந்து விடலாகாது
அதுதான் குருவும் கடவுளும் இணைதானே ; நான் குருவை மட்டும்
வழிபடுகிறேன் கடவுள் அவராக மரியாதையை எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே என
சண்டியர்த்தனம் செய்யலாகாது
நான் காணாததை கண்டு விட்டேன் எங்க ஆள்தான் கடவுள் ; அவரை குரு என
குறைக்கவா பார்க்கிறாய் என பகட்டு காட்டி உணர்ச்சி வசப்படக்கூடாது
எட்டாத காரியத்தில் தலையிடாதே என்றொரு பழமொழி உண்டு
கடவுள் யார் என தெரிந்து கொள்வதால் ஒரு பலனும் கிடைக்காது அவர் யாராக
இருந்தாலும் அவரை சேர எவ்வாறு நாம் தூய்மை ஆவது என்பதே முக்கியமானது
ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓரிறைவனையே துதிக்கிறோம்
சிவனின் நாமத்தினாலே
ஓம் நமோ சிவாய !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி